என் விகடன் - மதுரை
என் விகடன் - கோவை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
Published:Updated:

சினேகாவின் காதல் ரகசியங்கள்!

நா.கதிர்வேலன்

##~##

ஷார்ப் ஹேர் கட், புன்னகைக்கும் கண்கள், சிரிக்க மறக்காத உதடுகள்... மாப்பிள்ளைக் களை இப்போதே மிளிர்கிறது பிரசன்னாவிடம்!  

 ''அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!'' சொல்லி ஆரம்பித்த உரையாடலில் இருந்து இங்கே கொஞ்சம்...

''எல்லாரும் சினேகா மாதிரி பொண்ணு வேணும்னு தேடிட்டு இருக்கும் சீஸனில், சினேகாவே உங்களுக்குக் காதலியா... சீக்கிரமே மனைவியா வரப்போறாங்க... எவ்ளோ பேர் பொறாமையைச் சம்பாதிச்சிருக்கீங்க தெரியுமா?''

''எங்கே போனாலும் பெண்கள் ஆசையா ஆசீர்வதிக்கிறாங்க... வாழ்த்துறாங்க. ஆனா, இந்தப் பசங்க...  'முந்திக்கிட்டீங்க பாஸ். நான்தான் கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசைப்பட்டேன். தலைவா, கண் கலங்காமப் பார்த்துக்கோ’னு அன்பா, கோபமா ஃபேஸ்புக், ட்விட்டர்ல கமென்ட்ஸ் விழுகுது. சிலர் 'பூ மாதிரிவெச்சுப் பார்த்துக்கங்க மாப்பிள்ளை. பொண்ணு ஏதாவது கண் கலங்கிச்சுனு கேள்விப்பட்டேன்... மவனே! உன்னை ஒரு வழி பண்ணிடுவேன்’னு செல்ல மிரட்டல் வேற. ரொம்ப சந்தோஷமா இருக்கு!''

சினேகாவின் காதல் ரகசியங்கள்!

''சினேகாகிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயங்கள் என்ன?''

''மனசுல ஒண்ணை வெச்சுக்கிட்டு வெளியே வேற விதமா அவங்களுக்குப் பேசத் தெரியாது. எதுவா இருந்தாலும் நேருக்கு நேர் முகம் பார்த்துப் பேசிடுவாங்க. அவங்களைச் சந்தோஷப்படுத்துவோமேனு சின்ன பொய் சொன்னாக்கூட அவங்க ளுக்குப் பிடிக்காது. 'கஷ்டமா இருந்தாலும் உண்மையே சொல்லிடு’னு சொல்வாங்க. ரொம்பவும் உறுதியான பொண்ணு. நானே சமயங்களில் திகைச்சு நிக்கும்போது, அவங்க சொல்ற அட்வைஸ்தான் எனக்குக் கை கொடுக்கும்!''

''ரெண்டு பேரும் என்னல்லாம் எஸ்.எம்.எஸ். அனுப்புச்சுக்குவீங்க?''

''எப்படியும் ஒரு மணிக்கு ஒரு தடவை பேசிக்குவோம். எப்பல்லாம் பேச முடிய லையோ... அப்பல்லாம் மெசேஜ் பறக்கும். நான் அடிக்கடி அனுப்புறது 'ஐ லவ் யூ’ (i luv u). அவங்க அடிக்கடி அனுப்புறது யூ மின் தி வேர்ல்டு டு மீ (you mean the world to me). ஏதோ வேலையில் சில மணி நேரம் அவங்களை விசாரிக்க மறந்துட்டா, 'ஸாரி’ மெசேஜ் அனுப்பிச் சமாதானப்படுத்தின பிறகுதான் பேச்சுவார்த்தை ஆரம் பிக்கும்.

ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தர் ஃப்ளைட்ல போறப்பதான் ரொம்ப கஷ்டமா இருக்கும். 'இன்னும் நாலு மணி நேரம் எஸ்.எம்.எஸ். அனுப்ப/ரிசீவ் பண்ண முடி யாதே’னு கஷ்டமா இருக்கும். ஃப்ளைட்ல இருந்து இறங்கின உடனே இன்பாக்ஸ் கொள் ளாத அளவு மெசேஜ் கொட்டும். ஃப்ளைட்ல ஏறி உக்காந்ததும் போக வேண்டிய இடம் உடனே வந்துட்டா எவ்வளவு நல்லா இருக் கும்கிற கற்பனையில் ஆரம்பிச்சு, 'எ விஷ் டு ஷ்ரிங்க் தி டைம் சோன்’ங்கிற (A wish to shrink the time zone) ஒரு வரிக் கவிதை வரை மேடம் புகுந்து விளையாடுவாங்க. மத்தபடி மிஸ் யூடா, ஐ லவ் யூ, டார்லிங், செல்லம், க்யூட்டினு எல்லா ஸ்வீட் நத்திங்ஸும் எங்க காதலிலும் உண்டு!''

''என்னலாம் செல்லப் பேர் வெச்சுக் கூப்பிட்டுக்குவீங்க?''

''நான் கணக்கு வழக்கு இல்லாம வெச்சிருக்கேன். பாரதியாரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனால, அதிகமா 'கண்ணம்மா’னு கூப்பிடுவேன். அது போக பப்பு, பேபு, பச்சுனு மூடுக்கு ஏத்த மாதிரி கூப்பிடுவேன். அவங்க என்னை கண்ணா, டாடான்னு கூப்பிடுவாங்க. செல்போன்ல 'பச்சு’னு அவங்க நம்பரை சேவ் பண்ணிஇருக்கேன். அவங்க மொபைல்ல நான் 'டாடா’!''

''சண்டை போட்டுப்பீங்களா?''

''செல்லமா நிறைய... கோபமா கொஞ்சம். ஆனா, எதுவா இருந்தாலும் அரை மணி நேரம்கூட நீடிக்காது. அவங்க கவனிப்புக்கு நான் நேரம் ஒதுக்கலைன்னாதான், மேடம் கோபப்படுவாங்க. ஆனா, அதுக்கு நேரம் ஒதுக்காம இருக்க முடியுமா?''

சினேகாவின் காதல் ரகசியங்கள்!

''ரெண்டு பேர் நடிச்ச படங்களில் பரஸ்பரம் பிடிச்ச படம் என்ன?''

''எனக்கு அவங்க நடிச்சதில் 'விரும்புகிறேன்’, 'பார்த்திபன் கனவு’, 'வசூல் ராஜா’, 'பிரிவோம் சந்திப்போம்’ படங்கள் ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்கு 'அழகிய தீயே’, 'கண்ட நாள் முதல்’, 'அஞ்சாதே’, 'முரண்’ பிடிக்கும். 'அஞ்சாதே’ படத்தில் நான் வில்லனா நடிச்சது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. படத்தில் நான் ஒரு பெண்ணைப் பலாத்காரம் பண்ணுவேன். க்ளைமாக்ஸ்ல ஒரு பொண்ணு என்னை செருப்பால அடிக்கும். அதை எல்லாம் அவங்க சினிமாவாப் பார்த்துதான் ரசிச்சாங்க. ஆனா, படத்தில் நான் செத்துப்போறது மட்டும் அவங்களுக்குப் பிடிக்கலை. என் அம்மா மாதிரியே அந்த சீனைப் பார்க்க முடியாமக் கஷ்டப்பட்டாங்க. 'நீங்க படத்தில் செத்திருக்க வேண்டாம்’னு ஃபீல் பண்ணாங்க!''

''உங்க அம்மாவுக்கு அவங்க மருமககிட்ட என்ன பிடிச்சிருக்கு?''

''சினேகாவை என் அம்மா 'சுஹா’னுதான் கூப்பிடுவாங்க. சுஹாசினிதானே அவங்க நிஜப் பேரு. அம்மாவுக்கு முன்னா டியே சினேகாவோட சிரிப்பு ரொம்பப்  பிடிக்கும். நேர்ல பார்த்ததும் அதுஇன்னும் பிடிச்சிருச்சு. 'பெரியவங்களுக்கு அவ்வளவு மரியாதை கொடுக்குதுடா’னு சொல்லிச் சொல்லி ஆச்சர்யப்படுறாங்க. மருமகளை அவங்க கையில இல்லை... மனசுல வெச்சுத் தாங்குறாங்க!''

''ஹனிமூன் எங்கே?''

''ஸ்காட்லாந்து, பாரீஸ், நியூஸிலாந்து, பாஸ்னியானு நாலு நாடுகள் சாய்ஸில் இருக்கு. மேடம் எங்கேனு டிக் அடிக்கிறாங்களோ... அங்கே பறக்க வேண்டியதுதான்!''