என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
ஸ்பெஷல் -1
என் விகடன் - திருச்சி
Published:Updated:

குஷ்பு செய்தது பெரிய தியாகம்!

நா.கதிர்வேலன்

##~##

''நான் சினிமாவைச் சந்தோஷமான அனுபவமாத்தான் பார்க்கிறேன். அழவைக்கிறதிலோ, அதிரவைக்கிறதிலோ எனக்கு உடன்பாடு இல்லை. ரஜினி, கமல், அஜீத்னு பெரிய ஹீரோக்களோடு படம் பண்ணியாச்சு. கொஞ்ச நாள் இடைவெளிக்குப் பிறகு 'உள்ளத்தை அள்ளித்தா’ மாதிரி சிரிக்கவைக்கிறதுக்காகவே ஒரு படம் கொடுக்க ஆசை. அப்படி ஒரு ஸ்கிரிப்ட் 'மசாலா கபே’ - வெல்கம் சொல்கிறார் டைரக்டர் சுந்தர்.சி.

 ''விமல் - மிர்ச்சி சிவானு ரெண்டு பேரும் காமெடியில் அப்படி அசத்துறாங்க. அதிலும் சிவா பேசறது, சிரிக்கிறது எல்லாமே காமெடிதான். ஹீரோயின் அஞ்சலி. ஒரு படத்தில் அவங்க எனக்கு ஹீரோயினா நடிச்சிருந்தாங்க. 'களவாணி’ மூலமா மனசைக் களவாடின ஓவியா. இந்த ஜோடிகளைச் சேர்த்துவெச்சு ஒரு கதை உருவாக்கியாச்சு. பெற்றோர்கள் பாரம்பரியமா நடத்தின மசாலா கபேயைப் பிள்ளைகள் வளர்ந்த பிறகு எப்படி நடத்தறாங்கனு கதை. நம்ம ஜனங்களுக்கு ஏற்கெனவே எவ்வளவோ பிரச்னை. அதனால, சினிமாவுக்கு வந்து அங்கேயும் மெசேஜ் சொல்லி அவங்களை டயர்ட் ஆக்காம, முழுக்க முழுக்கச் சிரிக்கவைக்கிற மாதிரி வேலை பண்ணி இருக்கோம். இதை இந்திக்கும் கொண்டுபோக வேலை நடக்குது. என்னைப் பொறுத்த வரை ஜனங்களைச் சிரிக்கவைக்கிறதுதாங்க இருக்கிறதிலேயே பெரிய வேலை!''

குஷ்பு செய்தது பெரிய தியாகம்!

''நீங்களும் வடிவேலுவைக் கைவிட்டுட்டீங்களே?''

''அப்படி இல்லைங்க. எவ்வளவோ படங்களில் நானும் வடிவேலுவும் இணைஞ்சு விளையாடி இருக்கோம். அதே மாதிரியே விவேக், சந்தானம் காமெடியும் நல்லா ஒர்க் அவுட் ஆகியிருக்கு. 'மசாலா கபே’ கேரக்டருக்கு சந்தானம் ரொம்பப்  பொருத்தமானவரா இருந்தார். என்னோட வெற்றியில் பெரும்பங்கு வடிவேலு, விவேக், சந்தானத்துக்கு உண்டு. எவ்வளவோ காதல், ஆக்ஷன் படங்கள் செஞ்சு இருக்கேன். ஆனால், எல்லோராலும் சொல்லப்படறது, 'சுந்தர் நல்லா காமெடியாப் படம் பண்ணுவார்’ங்கிறதுதானே? இதில் 'வெட்டுப்புலி’ங்கிற கேரக்டர் சந்தானத்துக்கு. அவருக்கு இந்தப் படம் மூலமா இன்னும் பெரிய ரீச் இருக்கும்.''

''ஏன் நடிகரா இருந்தது போரடிச்சிடுச்சா?''

குஷ்பு செய்தது பெரிய தியாகம்!

''தொடர்ந்து மூணு ஹிட்ஸ் கொடுத்தேன். என்னைவெச்சுப் படம் எடுத்தவங்க யாரும் இன்டஸ்ட்ரியைவிட்டுப் போகலை. ஏதாவது சில படங்கள் தோல்வி அடைஞ்சிருந்தால், அதுக்கு என்னோட அஜாக்கிரதைதான் காரணமா இருக்கும். நடிகனா நான் ரொம்ப ஆவரேஜ்தான். ஆனால், டைரக்டரா என்னோட ஹிட்ஸ் பெரிசு. இப்போதைக்கு நடிப்புக்கு சின்ன பிரேக். நல்ல கதை கிடைச்சா கண்டிப்பா அது தொடரும்!''

''குஷ்பு அரசியலில் இருக்கிறது உங்களுக்குக் கஷ்டமா இல்லையா?''

''அது அவங்க இஷ்டம். அவங்க எதைச் செஞ்சாலும் சிறப்பா செய்வாங்க. அவங்க செயல்பாடுகள்ல தலையிடுறது என் வேலை இல்லை. கணவரா இருந்திட்டால் எல்லாத்திலும் தலையிட்டு கருத்துச் சொல்லணும்கிற அவசியம் இல்லையே?''

''என்ன இருந்தாலும் குஷ்பு கணவர்னுதானே நீங்க அறியப்படுறீங்க?''

''நான் டைரக்ட் பண்ற 25-வது படம் 'மசாலா கபே’. 11 படங்களில் ஹீரோவா நடிச்சிட்டேன். ஆனாலும், எங்கே போனாலும் தமிழ் மக்கள் என் கையைப் பிடிச்சிட்டுக் கொண்டாடுறது 'குஷ்பு புருஷன்’னு சொல்லித்தான். நான் சினிமாவில் நுழையும்போது, குஷ்பு பெரிய ஹீரோயின். ரஜினி, கமல்னு பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகளோடு நடிச்சிட்டாங்க. அப்போ நான் புது டைரக்டர். இவ்வளவு படம் செய்யப்போறேன்னு அன்னைக்குத் தெரியாது. ஆனாலும், என்னைக் காதலிச்சுக் கணவரா ஏத்துக்கிட்டாங்க. குஷ்பு

செஞ்சதுதான் பெரிய தியாகம். அதுக்காக என்னைக் 'குஷ்பு புருஷன்’னு சொல்றதை அழகா ஏத்துக்கிட்டுப்போறேன். குஷ்புவுக்காக இந்தச் சின்ன தியாகத்தைக்கூட நான் செய்ய மாட்டேனா என்ன?''