Published:Updated:

'சில்க்'குக்குப் பிடித்த அனுஷ்கா!

க.நாகப்பன்

##~##

ந்திராவில் ஹிட் ஹீரோயின், 'ஜூனியர் சில்க்’ என்ற பாராட்டு, 'வெப்பம்’ படத்தில் பாலியல் தொழிலாளியாக சென்சிபிள் நடிப்பு, 'கழுகு’ படத்தில் கவனம் ஈர்த்த அழகுத் துடிப்பு... கேரியர் கிராஃப் தந்தி அடிக்கத் தொடங்குகிறது பிந்து மாதவிக்கு!

 ''தமிழ்ல அறிமுகமான 'வெப்பம்’ படத்திலேயே எப்படி ஒரு கால்கேர்ளா நடிக்கச்  சம்மதிச்சீங்க?''

''அனுஷ்காவுக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும். அவ்வளவு பெரிய ஹீரோயின் தன் கேரியரின் உச்சத்தில் சட்டுனு ஹீரோயினா இல்லாம 'வானம்’ படத்தில் கால்கேர்ளா நடிச்சாங்க. டிரெஸ்ஸிங், எக்ஸ்பிரஷன், ரியாக்ஷன்ஸ்னு ஏகப்பட்ட ஹோம் வொர்க் பண்ணி நடிச்சு இருந்தாங்க. அவங்களுக்கு முன்னாடி நான் எல்லாம் ஜுஜுபி! எனக்கு அனுஷ்கா பிடிக்கும். அதனாலேயே, அவங்க நடிச்ச கால்கேர்ள் கேரக்டர் மேல ஒரு கிரேஸ். அப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைச்சா, மிஸ் பண்ணுவேனா என்ன?''    

'சில்க்'குக்குப் பிடித்த அனுஷ்கா!

''உங்களை ஜூனியர் சில்க்னு சொல்றது ப்ளஸ்ஸா... மைனஸா?''

''சில்க்கையும் என்னையும் கம்பேர் பண்ணவே முடியாது. ஆனா, 'சில்க் மாதிரியே இருக்கீங்க!’, 'உங்க கண்ணு சில்க் மாதிரியே இருக்கு’னு நிறையப் பேர் சொல்றதை என்னால் தடுக்க முடியலை. சீக்கிரமே சில்க் மாதிரி சினிமாவில் ஒரு பளிச் இடத்தைப் பிடிக்கணும். அதுக்கு நான் இன்னும் ரொம்ப தூரம் டிராவல் பண்ணணும். 'டர்ட்டி பிக்சர்’ படத்தின் தமிழ் வெர்ஷனில் சில்க் கேரக்டரில் நடிக்க அவ்வளவு ஆசை. ப்ச்... ஆனா, அதில் அனுஷ்கா நடிக்கிறாங்க. எனக்கு அனுஷ்கா மேலதான் இப்போ பொறாமையா இருக்கு!''

''பிந்து மாதவியின் நிஜ கேரக்டர்?''

''ரொம்ப சிம்பிள் பொண்ணு. எல்லாருக்கும் உண்மையாவும் நம்பிக்கையாவும் இருப்பேன். கோபமே வராது. எந்த நல்ல விஷயத்தையும் அப்பா முகம் பார்த்துட்டுத்தான் ஆரம்பிப் பேன். சிவனோட தீவிர பக்தை!''

''சினிமாவில் லட்சியம்?''

'சில்க்'குக்குப் பிடித்த அனுஷ்கா!

''அஜீத்துடன் நடிக்கணும். தங்கச்சி கேரக்டர், ஒரு சீன்ல வந்துட்டுப் போறது, கனவுல டூயட் பாடுறது, அயிட்டம் டான்ஸ் பண்றதுனு இல்லாம, படம் முழுக்க அஜீத்துக்கு ஜோடியா நடிக்கணும். ஏன்னா, எனக்கு அஜீத்னா அவ்வளவு இஷ்டம்ம்ம்ம்!''

''காதல் சொதப்பல்கள்?''

''ரெண்டு தடவை! ஸ்கூல்ல என் சீனியர் ஒருத்தர் என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னார். நான் எங்கே போனாலும் சுத்திச் சுத்தி வருவார். ஆனா, பேச மாட்டார். அவர் மேல எனக்குக் காதலே வரலை. பாவமாத்தான் இருந்துச்சு. பயோடெக் செகண்ட் இயர் படிக்கும்போது என் சீனியர் புரொபோஸ் பண்ணார். நானும் அவரை சின்ஸியராக் காதலிச்சேன். ஆனா, எம்.எஸ். படிக்க அமெரிக்கா போனவர், அங்கே இன்னொரு பொண்ணோட ரிலேஷன் வெச்சுக்கிட்டார். நான் வாழ்க்கையில அதிகமா அழுதது அப்போதான். ஆனா, இப்போ நினைச்சா எப்படி எல்லாம் இருந்திருக்கேன்னு சிரிப்பா வருது. அவர் எங்கிருந்தாலும் வாழ்க!''

அடுத்த கட்டுரைக்கு