அதேதான்... ஒரு கல் ஒரு கண்ணா டியை உடையாமல் மோதிக் காதலிக்கும்... 'ஓ.கே. ஓ.கே.’! 'சிவா மனசுல சக்தி’ படத்தின் எஸ்.எம்.எஸ். ஸ்டைல் கதை... அதை 'பாஸ்கரன்’ முன் மொழிய 'டபுள் ஓ.கே’-வாக வழிமொழிந்து இருக்கிறார் இயக்குநர் ராஜேஷ்.

இதைவிட 'சேஃப்’ அறிமுகம் உதயநிதிக் குக் கிடைத்திருக்கவே முடியாது. பெரும் பாலும் கலாய் காமெடி டயலாக் டெலிவரி தான் நடிப்பு. அதனால், உறுத்தாமல் பொருந்திப்போகிறது உதயநிதியின் துடிப்பு. சரக்கு பாட்டிலை ஸ்மெல் பண்ணியே கிக்காகி அவர் பேசும் 'ஐ யம் ஆஃப் தி யூ ஆஃப் தி’ இங்கிலீஷ் செம சிரிப்பு லகலக! உதறல் இருந்தா லும், நடிப்பில் சமாளித்து பாஸ் மார்க் வாங்குபவர், டான்ஸில் உதறியே போங்கு வாங்குகிறார்.

படத்தின் இன்னொரு அல்ல... இணை நாயகன்... சந்தானமே! சாருக்கு இது செம சிக்ஸர் சினிமா. ஜானவாச கார் ஓட்டுனராக, அக்ரஹாரத்து பார்த்தசாரதியாக, 'தேன்ன்ன்ன்ன்ன் அடை’ காதலனாக மனிதர் சவட்டி எடுக்கிறார். 'புன்னகை அரசிதான்பா. நான் என்ன புழுங்கல் அரிசின்னா சொன்னேன்...’, 'சாகப்போற நேரத்துல தேங்கா எண்ணெயை வெச்சுக்கிட்டு நாங்க என்ன பண்றது’, 'ராணுவத்தால் அழிஞ்சவனைவிட ஆணவத்தால் அழிஞ்ச வன்தான் அதிகம்’ என மனிதர் தோன்றும் காட்சிகளில் எல்லாம் சிரிப்பு ரவுசு. திருவல்லிக்கேணி பார்த்தாவாகக் குழறல் ஆங்கிலம் பேசுவதாகட்டும், திருமண மண்டபத்தில் உதயநிதியின் 'ஆஃப் தி’ ஆங்கிலத்தை மொழிபெயர்ப்பதாகட்டும்... எல்லாரையும் பின்னுக்குத் தள்ளி 'ஒன் மேன் ஷோ’ ஆக்குகிறார்.

'இன்று திருமண நாள். இது எனக்கு இன்னுமொரு கறுப்பு தினம்’ என்று போர்டில் எழுதி, மனைவியிடம் வெறுப்பை உமிழும் கணவன் அழகம்பெருமாள், அதே மனைவியைக் காணாமல் தேடித் தவித்து 'மௌன விரதம்’ உடைக்கும் இடத்தில் நெகிழ்ச்சியூட்டுகிறார். டிகிரி பாஸ் பண்ண முடியாமல் வருத்தப்படுவதும் 'உங்கப்பா பேசிட்டாருடா’ என்று குதூ கலிப்பதுமாக சரண்யா... வழக்கம்போல... கலகல!

பாடல் காட்சிகளின் இறுக்க நெருக்கமான க்ளோஸப்கள் மட்டுமே 'மொத் மொத்’ ஹன்சிகா மோத்வானிக்கு டெடிகேட். ஆனால், முந்தைய படங்களுக்குப் பரவா யில்லை. உதயநிதியின் காதலை ரகசியமாக ரசிப்பதும் நேரில் படீர் பட்டாசாக வெடிப் பதுமாக ஈர்க்கிறார்.

பாசிட்டிவ் காமெடிகளே கலகலக்க வைக்கின்றனவே ராஜேஷ்... பிறகேன் 'இதெல்லாம் ஒரு மூஞ்சியா... காறித் துப்பலாம்போல இருக்கு!’ என்று தோற்றத்தை வைத்துப் பெண்களை டீஸ் செய்யும்

காமெடிகள்? படம் எப்போதோ முடிந்த பிறகும் பிரேக் பிடிக்காத எக்ஸ்பிரஸாக நழுவி ஓடிக் கொண்டே இருக்கிறது பின்பாதி!

'இயக்குநருக்கு மட்டும்தான் ஏற்கெனவே ஹிட்டடித்த தன் கதை, காமெடி ஃபார்முலாவை காப்பி அடிக்கும் உரிமை இருக்கிறதா?’ என்று 'காப்பிரைட்’ உரிமை கோருகிறது ஹாரிஸ் ஜெயராஜின் இசை!

படத்தில் கதை மூச்... லாஜிக் மூச்... இருந்தாலும் திரைக்கதையின் காமெடி ட்ரீட்மென்ட் மட்டுமே 'மூச்சு’ப் பிடித்து ஓடவைத்து டபுள் ஓ.கே. சொல்லவைக்கிறது!