அரசியல் கனவுக்கு வாழ்க்கையைப் பலி கொடுக்கும் இளைஞனே பச்சை என்கிற காத்து!

இறந்துகிடக்கிறான் 27 வயது பச்சை. அவன் மனைவி பிரியாணி சாப்பிடுகிறார். எதிரெதிர் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் கூட்டணி போடுகிறார்கள். காதல் நடக்கிறது. பச்சையின் இரண்டு நண்பர்கள் மட்டும் எரியும் சிதையைப் பார்த்தபடியே அவனது வாழ்வைப் பற்றிப் பேசுகிறார்கள்.

அரசியல் போதை ஒருவனை எப்படி எல்லாம் தடம் மாற்றும் என்பதை அசத்த லாகச் சொல்லிய விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் கீரா. போலீஸ் தேடும்போது, காவல் நிலையத்தின் மொட்டை மாடியிலேயே உட்கார்ந்து சரக்கடிப்பது, தலைவரை விட்டுவிட்டு ஊரெல்லாம் தன் படத்தை ஒட்டுவது, நண்டு சிண்டுகளுடன் வந்து கட்சியில் இணைவது, குரலைவைத்தே கொலை செய்ய முயன்றவர்களைக் கண்டுபிடித்து தீர்ப்பது எனப் பச்சையின் பாத்திரம் நுணுக்கமும் சுவாரஸ்யமும் நிறைந்தது.

பச்சையாக அறிமுகமாகி இருக்கும் வாசகரின் நடிப்பு அதிரிபுதிரி அட்டகாசம்! ஓர் அடி அடிக்காமலேயே அப்பாவை மிரளவைப்பது, மீசை வளரவில்லையே என்று உள்ளுக்குள் புழுங்கி, மீசை வளர்ந்ததும் பாட்டியிடம் மாமூல் வாங்குவது, காதலியைக் கலாய்ப்பது, குத்தவைத்து அமர்ந்து 'அரசியல்வாதி’யாக உருமாறுவது என ஓர் அரசியல் அடியாளின் 'வளர்ச்சி’யைத் துல்லிய உடல்மொழியுடன் வெளிப்படுத்தி இருக்கிறார்.

பூசின உடல்வாகுடன் பூக்காரியாக வரும் தேவதை (அறிமுகம்) கதைக்குப் பொருத்தமான ஹீரோயின். அரை டிராயருடன் வருபவனை 'தம்பி... போய்ப் படிடா...’ எனக் கையில் குச்சியுடன் அவர் விரட்டும்போது விசில் பறக்கிறது.

'ஏதோ மனிதன் வாழ்க்கையில் ஜாலியாக இருக்க வேண்டும். அதைத்தானே நான் தினம்தோறும் செய்கிறேன்’, 'என்னை மாதிரி இளம் தலைவர்களைத் திட்டுற வாத்தியாருங்க எல்லாம், பின்னாடி எங்க கிட்டதான் பென்ஷன் கேட்டு வந்து நிக்கணும்’, 'கர்த்தர் அழைத்தார்... காற்றாய் வந்தேன்’ - இப்படிப் படம் நெடுக பச்சை பேசும் வசனங்களில் கூர்மையும் எள்ளலும் செம தூக்கல்!

ஹரிபாபுவின் இசையும் மாபொ-அன்பு ஸ்டாலின் இரட்டையர்களின் ஒளிப்பதிவும் படத்துக்குப் பாதகம், சாதகம் எதுவும் ஏற்படுத்தாமல் கடந்துபோகின்றன. முன்பாதியில் விறுவிறுப்பு கூட்டும் படத் தின் பலமாக இருக்கும் அதே திரைக்கதை, பின்பாதியில் தள்ளாடித் தவித்துப் பலவீனமாகிறது.

அக்காவைக் கொன்றவனைப் பழிவாங்க, பள்ளிக்கூட மாணவியான தங்கச்சி காத்திருந்து, வளர்ந்து, நாயகனையே மணம் முடிக்கிறார். ஆனால், அதுவரை ஹீரோ மட்டும் அப்படியே இருப்பது என்ன மேஜிக்கோ? உள்ளூர் பெரும்புள்ளியின் கையை வெட்டிவிட்டு எந்தப் பிரச்னையும் இல்லாமல் ஹீரோ ஊருக்குள் திரிவது என்ன லாஜிக்கோ? காதலியை 'விளையாட்டாய்’ பச்சை கொல்வது பகீர்தான். ஆனால், பிறகு அந்த உறுத்தல் எதுவும் இல்லாமல் அவர் வளைய வருகிறாரே?!

ஆங்காங்கே குறைகள் இருந்தாலும் ஓர் அரசியல் அடியாள் எப்படி உருவாகிறான் என்பதைச் சொன்ன விதத்தில் இந்தப் பச்சை வசீகரிக்கிறான்!