Published:Updated:

த்ரிஷா இடத்தை நான் பிடிக்கணும்!

ம.கா.செந்தில்குமார்

பிரீமியம் ஸ்டோரி
##~##

கார்த்திகா நடித்து இன்னும் தமிழில் இரண்டாவது படமே வெளியாகவில்லை. அதற்குள் கார்த்திகா தங்கை நடிக்க வருகிறார் என்று செய்திகள். 'அப்படியா?’ என்று கண்ணழகியிடம் விசாரித்தால், 'ஆமாவா... இல்லையா’ என்று புரியாத விதத்தில் அபிநயிக்கின்றன அவரது விழிகள்.  

 ''என் தங்கச்சி துளசி இப்பதான் நைன்த் படிக்கிறா. 'படிப்பா, நடிப்பா’னு எதைக் கேட்டாலும் 'ஓ.கே.’னு சொல்ற வயசு. முதல்ல அவ ஸ்கூலிங்கை முடிக்கட்டும். அப்புறம் பார்ப்போம். அதான் வீட்ல சினிமா சீனியர்ஸ் அம்மா, பெரியம்மா, நான்லாம் இருக்கோமே... பார்த்துக்குவோம்.''

'' 'கோ’ ஹிட்டுக்குப் பிறகு ஹீரோ ஜீவாவே முழுசா மூணு படம் முடிச்சுட்டார். ஒரு ஹீரோயினா நீங்க அந்த வெற்றியைத் தக்கவெச்சுக்கலையே?''

''கரெக்ட்தான். ஆனா, நான் ஒண்ணும் சும்மா இல்லையே... 'மகரமஞ்சு’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். நல்ல பேர் கிடைச்சது. அப்புறம் ஜூனியர் என்.டி.ஆர்.கூட 'தம்மு’னு ஒரு தெலுங்குப் படம் நடிச்சேன். 'கோ’வுக்குப் பிறகு தமிழ்ல பளிச்சுனு பேர் சொல்ற மாதிரி படம் அமையலை. இப்ப 'அன்னக்கொடியும்  கொடிவீரனும்’ படத்துலதான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. தேனிப் பக்கம் சந்தோஷமா மாடு மேய்ச்சிட்டு இருக்கேன்!''

த்ரிஷா இடத்தை நான் பிடிக்கணும்!

''அப்படி என்ன அந்தப் படத்தில் ஸ்பெஷல் ஸ்கோப் இருக்கு?''

''என்னங்க இது? டைட்டில்லயே என் பேர் இருக்கு. பாரதிராஜா சார் படம். இதுக்கு மேல என்ன வேணும்? சிறுமி, இளம் பெண், மெச்சூர்ட் கேர்ள், அம்மானு நாலு ஸ்டேஜ்ல வர்ற கேரக்டர். படிச்சது, வளர்ந்தது, நடிச்சதுனு எல்லாமே சிட்டியிலேயே இருந்துட்டதால கிராமத்துச் சூழல் ரொம்பவே புதுசா இருந்துச்சு. ரொம்பக் கஷ்டப்பட்டேன். ஆனா, 'உனக்கு அதுதான் ப்ளஸ். அந்தப் புதுச் சூழலுக்கு நீ இயல்பாவே வெட்கப்படுற. அதுதான் உன் கேரக்டரை ரசிக்கவைக்குது’னு அம்மா சொன்னாங்க. மிஸ் பண்ணவே முடியாத படம்.''  

''என்ன... திடீர்னு அமீர் - இனியா ஜோடியைப் படத்துல இருந்து நீக்கிட்டார் பாரதிராஜா?''

''அமீர் சாரோட 'கட்டுவிரியன்’ கேரக்டர் ரொம்ப பவர்ஃபுல். அது ஒரு முழுப் படத்தையே தாங்கி நிக்கும். அதை இந்தப் படத்தோட சேர்த்தா, அந்த கேரக்டர் முழுசா வெளிப்படாமல் போயிருமோனு சார் நினைச்சிருப்பார். அப்படித்தான் இருக்கும்னு நான் நினைக்கிறேன். வேற காரணம் எதுவும் எனக்குத் தெரியலை!''

''சினிமாவில் உங்களுக்கு ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்களா?''

த்ரிஷா இடத்தை நான் பிடிக்கணும்!

''என்ன இப்படிக் கேட்டுட்டீங்க? 'தம்மு’ படத்தில் த்ரிஷாவும் நானும் சேர்ந்துதான் நடிச்சோம். அப்ப ரொம்ப திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். த்ரிஷா ஸோ ஸ்வீட். 10 வருஷத்துக்கும் மேல ஃபீல்டுல இருக்காங்க. ஃப்ரெண்ட்லியா என்ன கேட்டாலும் எல்லா வேலையையும் விட் டுட்டு பண்ணிக்கொடுப் பாங்க. கேரியரிலும் பெர்சனலாவும் அவங்க நல்ல ரோல் மாடல். தமிழ்ல அவங்க இடத்தை நான் பிடிக்கணும். அப்படி நான் யோசிக்கிறப்ப மட்டும் அவங்களை நான் எனிமியா நினைச்சுக்குவேன். அப்பத்தானே அவங்க இடத்தைப் பிடிக்க முடியும்!''

''உங்க உயரம்தான் பல ஹீரோக்களை உங்களுடன் நடிக்கவிடாமப் பண்ணுதாமே?''

''உயரம்கிறது என் அடையாளம். தன் மீது நம்பிக்கை உள்ள ஹீரோக்கள் என்கூட சேர்ந்து நடிச்சிருக்காங்க; நடிக்கிறாங்க. அப்படி தன்னம்பிக்கை உள்ள ஹீரோக்கள்கூட நடிச்சாலே எனக்குப் போதும்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு