Published:Updated:

சினிமா விமர்சனம் : மை

விகடன் விமர்சனக் குழு

பிரீமியம் ஸ்டோரி
##~##

ரசியல் அல்லக்கையை ஒரே நாளில் மேயர் ஆக்கும் தேர்தல் அடையாள மை!

 அரசியல் கட்சியின் பேச்சாளராக மேடையில் சவால்விட்டுத் திரியும் விஷ்ணுபிரியன், அவ்வப்போது லோக்கல் களவாணியாகத் திரிகிறார். ஊருக்கே இவர் திருட்டுத்தனம் தெரிந்தாலும் அரசியல் பின்னணி காரணமாக அடக்கி வாசிக்கிறார்கள். 'அஸ் யூஷ§வல்’ விஷ்ணுபிரியன், நாயகி ஸ்வேதா பாஸுவின் காதலுக்கு மட்டும் அடங்குகிறார். காதலி சொல்லியதால் கவுன்சிலர் பதவிக்கு சொந்தக் கட்சியை எதிர்த்து சுயேச்சையாக நிற்கிறார். அது வரை தோள் கொடுத்தவர்களே தொல்லை கொடுக்கிறார்கள். தேர்தலிலும் காதலிலும் நாயகன் ஜெயித்தாரா என்பது க்ளை மாக்ஸ்!

அல்லக்கை டு அரசியல்வாதியின் வாழ்க்கையை கலர்ஃபுல் காமெடியாகக் கொடுத்த விதத்தில் கவனம் ஈர்க்கிறார் அறிமுக இயக்குநர் சே.ரா.கோபாலன். காதலன்-காதலி இடையிலான 'மக்காச்சோளம்’

சினிமா விமர்சனம் : மை

எபிசோட் இயக்குநரின் திறமைக்கு சாம்பிள். ஆனால், பின் பாதியில் பார்த்துப் பழகிய அரசியல் படங்களின் பாதையிலேயே பயணிப்பதுதான் படத்தின் மைனஸ்.  

மேடைப் பேச்சுகளில் நக்கல் நையாண்டி தகராறு செய்தாலும், உதார் பாடி லாங்குவேஜில் பாஸ் ஆகிறார் விஷ்ணுபிரியன். 'என் பொதுக்கூட்டத்துக்கு வரலைன்னா, வராதவங்க வீடு புகுந்து திருடுவேன். அதனால எல்லாரும் மரியாதையா வந்திருங்க’ என்று அதட்டியே கூட்டம் கூட்டும்போது காமெடியிலும் கலக்குகிறார்.

முரட்டுக் காதலனைத் திருத்தும் நல்ல உள்ளமான ஸ்வேதா பாஸு, காதலனுக்காக அப்பாவிடம் உருகி மருகிப் பேசும்போது மட்டும் கவனம் ஈர்க்கிறார்.  

பலமுறை தானே நடித்திருக்கும் நயவஞ்சக, குரோத, துரோக, பழி வாங்கும் வில்லன் கேரக்டரை வெற்றிகரமாக ரீ-மேக்கி இருக்கிறார் ஜெயப்பிரகாஷ்.

''அரசியல் என் உடம்பு, பதவி என் சட்டை. எனக்குப் பதவி கொடுக்காம நிர்வாணமா

சினிமா விமர்சனம் : மை

நிக்கவெச்சுட்டீங்களே...'', ''பொணம்கூட எரியும்போது எழுந்து நிக்குது. நீயும் எந்திருச்சு நில்லு'' என்பன போன்ற அசோக்குமாரின் வசனங்களில் அழுத்தம்.

செங்கல் சூளையில் கொலையாகும் நபர்களை யாருமே தேடாதது ஏன், திருட்டு பயத்துக்காக மக்கள் ஒருவனுக்கு ஓட்டு போடுவது, ஓர் ஓட்டுக்காக ஆளும் கட்சி சுயேச்சை நாயகனை மேயர் ஆக்குவது, அவ்வளவு செல்வாக்கு நிரம்பிய வில்லன் ஜெயப்பிரகாஷை ஜஸ்ட் லைக் தட் தீர்த் துக்கட்டுவது... படத்தின் படா பொந்து களை காமெடி சிமென்ட்வைத்து அடைத் திருக்கிறார்கள்.  

பழகிய ட்ரீட்மென்ட். காமெடி கோட்டிங் மட்டுமே லேசுபாசாக முத்திரை பதிக்கிறது! 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு