''அடை... தேன்ன்ன்ன்ன் அடை.... ஜாங்ங்கிரி... அம்முக்குட்டி... பொம்முக்குட்டி!'' என 'ஓ.கே. ஓ.கே.’ படத்தில் சந்தானம் உருகி உருகிக் காதலிக்கும் 'ஐஸ்க்ரீம்’ காதலி யார் என விசாரித்தால்... ''ஹாய்... ஐ மதுமிதா. நைஸ் மீட் ஆஃப் யூ. ஐ வெரி பிஸி. யூ ஆஸ்க் கொஸ்டீன்... ஐ டாக் ஆன்ஸர்!'' எனக் கை குலுக்குகிறார்.

''பிறந்தது வண்ணாரப்பேட்டை. என் அப்பா வண்ணை கோவிந்தன், அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர். அப்பா - அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாலு பொண்ணுங்கள்ல நான்தான் கடைக்குட்டி. எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாங்க.

அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. மூணு அக்காக்களுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறதுக்குள்ள குடும்பத்துல கடன் கழுத்தை நெரிக்கவும் படிப்பை நிறுத்திட்டு ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் போயிட்டேன்.

அங்கே என் துறுதுறுப்பைப் பார்த்துட்டு, 'சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணு’னு சொன்னாங்க. அப்படியே நடிக்க வாய்ப்பு தேடி ராஜ் டி.வி. 'சூப்பர் காமெடி’, சன் டி.வி. 'சூப்பர் 10’, விஜய் டி.வி. 'லொள்ளு சபா’, ஜெயா டி.வி. 'காமெடி பஜார்’னு ஆரம்பிச்சு... 'அழகான நாட்கள்’, 'ரேகா ஐ.பி.எஸ்.’, 'பொண்டாட்டி தேவை’, 'அத்திப்பூக்கள்’, 'அழகி’னு சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்.

'சிவா மனசுல சக்தி’ படத்துலயே நான் நடிச்சு இருக்க வேண்டியது. அப்போ மிஸ் ஆகிடுச்சு. இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ ஆடிஷன்ல செலெக்ட் ஆனதும் சோடாபுட்டிக் கண்ணாடி, எடுப்பான பல்லு, தலைக்கு 'விக்’னு என்னை உலக அழகி ரேஞ்சுக்கு அலங்கரிச்சுட்டாங்க. 'இப்படி ரவுண்டு கட்டி அசிங் கப்படுத்துறீங்களே’னு நான் ஃபீலிங்ஸ் காட்ட... 'இப்போ அப்படித்தான் இருக்கும். பின்னாடி பேட்டி கொடுக்குறப்ப பெருமையா சொல்லிக்கலாம்’னு சொன்னாங்க. அது இப்போ நிஜமாகி இருக்கு.

எனக்கு ஹீரோயின் கனவெல்லாம் கிடையாது. கோவை சரளா மாதிரி நடிச்சுப் பேர் வாங்கணும். நான் சரியான சவுண்ட் பார்ட்டி. கோவை சரளா இடத்தை நான் நிரப்ப ஆசைப்படுறேன். ப்ளீஸ்... தமிழ் சினிமா படைப்பாளிகள் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்க. ஐ ஆக்ட் குட். சத்தியமா ஐ பிராமிஸ்!''