Published:Updated:

எதுக்கும் துடியா இருப்பேன்!

நா.கதிர்வேலன்படம் : கே.ராஜசேகரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

'பச்சை என்கிற காத்து’ படத்தில் கதாநாயகனுக்கான கமர்ஷியல் மரபுகளை மீறி மிரட்டி இருக்கிறார் அறிமுக நடிகர் வாசகர். 'சார் யார்?’ என விசாரித்தால், ''அய்யா, நான் தேனிக்காரன்யா!'' என்று கை கூப்பி நிற்கிறார். வார்த்தைக்கு வார்த்தை 'அய்யா’!

 ''அய்யா, எனக்கு தேனிக்குப் பக்கத்துல சின்ன மனூர்ங்க! அங்கே மாணிக்கவாசகர் கோயில் ஒண்ணு இருக்கு. ரொம்ப விசேஷமான கோயில். அந்த சாமி ஞாபகமாத்தான் வாசகர்னு அப்பா எனக்கு பேர் வெச்சார். படிப்பு ஏறல. சினிமா கிறுக்குப் புடிச்சுக்கிருச்சு. ஐந்நூறு ரூபாயோட சென்னைக்குக்

எதுக்கும் துடியா இருப்பேன்!

கிளம்பிட்டேன். பத்து வருஷம் பட்ட கஷ்டம் கொஞ்சநஞ்சம் இல்லை. அதை எல்லாம் கேட்டா, புல்லும் புறாவும் தண்ணி குடிக்காது. அப்போதான் டைரக்டர் கீரா அறிமுகம். ரெண்டு பேரும் சேக்காளி ஆயிட்டோம்.

'பச்சை என்கிற காத்து’ கதையைத் தயாரிப்பாளர்கள் கிட்ட சொன்னா, யாருக்கும் சட்டுனு புரியலை. வசனம் லாம் கொஞ்சம் வலுத்து இருக்கும். படத்தை 13 நிமிஷக் குறும்படமா எடுத்தோம். அதில் நடிக்கிறேன்னு சொன்ன சில உதவி இயக்குநர்கள் கடைசி நேரத்துல வரலை. 'நீயே நடிச்சிருடா’ன்னு கீரா சொன்னார். குறும்படம் பார்த்தவங்க என் நடிப்பை ரொம்பவே சிலாகிச்சாங்க. அப்பவே, 'டேய் வாசகா... படமா எடுத்தா நீதாண்டா ஹீரோ’னு சொல்லிட்டார் கீரா. இப்போ இந்தப் 'பச்சை’யை எல்லோருக்கும் பிடிக்குது. சசி, சற்குணம்னு பெரிய இயக்குநர்கள்லாம் 'பிரமாதம்டா’னு பாராட்டுறாங்க. எங்க ஆத்தா பாப்பாத்தி, ஊரு கொட்டாய்ல திரை முழுக்க நான் தெரியவும் அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி இருக்கு. ஆனா, படத்தில் நான் செத்துப்போறது அதுக்குப் பிடிக்கலை. 'ஒண்ணுமில்லை பாப்பாத்தி, சினிமா நடிப்பு அது’னு சொல்லிச் சமாதானப்படுத்தினேன்.

நான் அழகன்லாம் கிடையாது. ஆனா, எதுக்கும் துடியா இருப்பேங்கய்யா. 28 வயசுதான் ஆகுது. கல்யாண நெனைப்பெல்லாம் இல்லை. கரடுமுரடா இருக்கிற நம்மளைப் பார்த்தா பொண்ணுங்களுக்குப் பிடிக்குமா என்ன?'' என்றபடி ஒரு பார்வை பார்க்கிறார். அதே பயமுறுத்துகிற முரட்டுப் பார்வை!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு