Published:Updated:

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

நா.கதிர்வேலன், க.நாகப்பன்

பிரீமியம் ஸ்டோரி

'விட்டாச்சு லீவு’ என்று தமிழ்நாடே சுற்றுலா திட்டமிடலில் பரபரத்துக்கிடக்கிறது. ''நீங்கள் சென்ற சுற்றுலாக் களில் உங்களுக்குப் பிடித்த இடம் எது... ஏன்?'' என்று சில சுற்றுலா விரும்பிகளிடம் கேட்டோம். அவர்கள் பகிர்ந்துகொண்டதில் இருந்து...  

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

 ஸ்ரீகாந்த்: ''ஹாங்காங் பக்கத்துல 'மக்காவ்’னு ஒரு ஊர். ஆசியாவின் லாஸ் வேகாஸ்னு அதைச் சொல்வாங்க. நமக்குப் பெரிய தூரம் இல்லை. பெரியவங்களுக்கு கேம்ஸ், தீம் பார்க், குழந்தைகளுக்கு டிஸ்னி லேண்ட்னு எல்லாருக்கும் ஏத்த இடம். அந்த ஊர் தூங்கவே தூங்காது. அதிகாலை மூணு மணிக்குக்கூடப் பரபரனு இருக்கும். உலக நாகரிகங் களின் எல்லா அடையாளங்களும் அங்கே இருக்கும். சீனா வுக்கு ரொம்பப் பக்கத்துல இருந்தாலும், அங்கே பொதுமக்களின் சுதந்திரம் மற்றும் பிரைவஸிக்குத்தான் முன்னுரிமை. ஃப்ளைட் டிக்கெட் தவிர, வட இந்தியச் சுற்றுலாவுக்கான செலவுதான் ஆகும். மினிமம் பிரைஸ்ல மேக்ஸிமம் சந்தோஷம் அனுபவிக்க மக்காவ் பக்கா கியாரன்ட்டி!''  

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

கீர்த்தனா பார்த்திபன்: ''ஆஸ்திரியாவின் கேப்பிடல் வியன்னாதான் என் ஃபேவரைட். நானும் தம்பி ராக்கியும் காலேஜ்ல கஷ்டப்பட்டு லீவு வாங்கிட்டு, அப்பாவைக் கூட்டிக்கிட்டு வியன்னா போயிட்டோம். வியன்னாவைச் சுத்தி இருக்கும் கிராமங்கள் அவ்வளவு அழகு. மாடு மேய்க்கிறது, தோட்டப் பராமரிப்பு, வில்வித்தை, ஹார்ஸ் ரைடிங் போன்ற விஷயங்களை அங்கே பொழுதுபோக்கு விளையாட்டுக்களாவே வெச்சிருக்காங்க. ஒவ்வொரு தெருவும் கோடு போட்டு வரைஞ்ச மாதிரி அவ்வளவு நேர்த்தியா, சுத்தமா இருக்கு. அங்கே ரோட்ல ஆங்காங்கே சேட்டை செய்யிற மாதிரி நிறைய சிலைகள் இருக்கும். பார்த்தாலே சிரிப்பு வந்து நம்ம மனசு ரிலாக்ஸ் ஆகும். இன்னொரு பெரிய லீவ்ல மீண்டும் வியன்னா போகணும்!''

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

த்ரிஷா: '' 'பாடிகார்ட்’ பட ஷூட்டிங் குக்காக கனடா போயிருந்தோம். அங்கே கல்கரினு (Calgary) ஒரு இடம். ஏரி, பனி மலைகள், பனி படர்ந்த புல்வெளிகள்னு... சான்ஸே இல்லை!  இத்தனைக்கும் நாங்க போயிருந்தப்ப, அங்கே சம்மர் சீஸன்தான். ஆனா, குளிர் உருட்டி எடுத்திருச்சு. சேலை, ஷார்ட்ஸ், மிடினு போட்டு டான்ஸ் பண்ணும்போது கை, கால் அப்படியே விறைச்சுக்கும். டான்ஸ் மாஸ்டர் பிருந்தாதான் என்னை அணைச்சுப் பிடிச்சு நார்மல் ஆக்குவாங்க. எங்களுக்குனு கொடுத்த அபார்ட் மென்ட் ஒரு கண்ணாடி வீடு. பெட்ல படுத்துட்டுப் பார்த்தா, வெளியே பனி மலை வெயில்ல மின்னுறது தெரியும். சூப்பர் ஃபீல்! வெளிச்சம் இருக்கிறப்ப தான் ஷூட்டிங். அது முடிஞ்சதும் ராத்திரின்னுகூடப் பார்க்காமல் ஷாப்பிங் பண்ணிட்டே இருந்தேன். பதினஞ்சு நாள்ல ஷூட்டிங் முடிஞ்சாலும் அங்கிருந்து கிளம்ப மனசே இல்லை. எக்ஸ்ட்ரா அஞ்சு நாள் இருந்து சைட் சீயிங், டிரக்கிங் எல்லாம் பண்ணிட்டுத் தான் கிளம்பினோம். அங்கே குளிர்காலமா இருக்கிறப்ப திரும்ப ஒரு  முறை போகணும். அந்த இடத்தை நான் பூமியின் சொர்க்கம்னு சொல்லுவேன். ஐ மிஸ் யூ கல்கரி!''

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.: ''சான்ஃபிரான்சிஸ்கோ எனக்கு ரொம்பப் பிடிச்ச இடம். அங்கே 'தி மிஸ்ட்ரி ஸ்பாட்’னு ஒரு இடம் இருக்கு. விஞ்ஞானத்தில் உள்ள அத்தனை விநோதங்களையும் அங்கே பார்க்க லாம். அதாவது, இறக்கத்தில் உருட்டிவிடும் பேனா, உருட்டிவிட்ட இடத்துக்கே திரும்ப வரும். நாம சரிவில் இறங்கி நடக்குற மாதிரி இருக்கும். ஆனா, நம்மைப் பார்க்கிறவங்களுக்கு நாம நேரா நடக்கிற மாதிரி இருக்கும். தரையில நடந்துக்கிட்டே இருக்கிற மாதிரி இருக்கும். திடீர்னு பார்த்தா சுவரோட மையத்தில் இருப்போம். இப்படி அறிவியல் குறும்புகள் நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் இடம் அது!''

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

ஆதி: ''என் சாய்ஸ் சுவிட்சர்லாந்தின் குட்டிக் குட்டி கிராமங்கள். அம்மா, அப்பா, தம்பியோட சுவிஸ் போயிட்டு வந்தேன்.  மதுரைக்குப் பக்கத்தில் இருக்கிற பட்டிக் காட்டுக் கிராமங்கள் மாதிரிதான் இருக்கும் சுவிட்சர்லாந்தின் ஒவ்வொரு கிராமமும். ஆனா, புல்லட் டிரெயின், ஷாப்பிங் மால், இன்டர்நெட் வசதினு நகரத்தின் அத்தனை வசதிகளும் இருக்கும். ஊருக்கு நடுவுல எங்கே நின்னு பார்த்தாலும் ஓவியம் மாதிரி இருக்கும். அழகு, பசுமை, பாரம்பரியம்னு எல்லாமே கச்சிதமான கலவை. பனி மலை தாண்டியும் சுவிட்சர்லாந்தில் வசீகரங்கள் நிறைய!''

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன்: ''சுற்றுலா என்றாலே அடிப்படையில் அறியாமையும் வியப்பும் மேலிடும். ஆனால், இவை எல்லாம் வாழ்க்கை அனுபவத்தில் வடிந்துபோய்விட்டன. என் துணைவியார் வெள்ளத்தாயுடன் வட இந்தியச் சுற்றுலாவுக்குச் சென்றிருந்தேன். யமுனை நதியைப் பாடாத இந்தி இலக்கியங்கள் இல்லை. வறண்ட பகுதியில் அமைந்திருக்கும் ஒரே நதி என்பதால் யமுனையை

சிலையான த்ரிஷா... கொலையான மும்தாஜ்!

அங்கே கடவுளுக்கு நிகராக மதிக்கிறார்கள். யமுனையின் ஒரு கரையில் ஆக்ரா கோட்டை, மறு முனையில் தாஜ்மகால். மும்தாஜின் காதல் சின்னம் என்பதுதானே தாஜ்மகாலின் அடையாளம். ஆனால், நுழைவாயில் குறிப்பு என்னை அதிரவைத்தது. 12-வது பிரசவத்தின்போது மும்தாஜ் இறந்தாராம். தாஜ்மகால் மீது இருந்த காதல் பிம்பம் சுக்குநூறாக உடைந்துபோனது. மும்தாஜ் கிட்டத்தட்ட கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அவரை 'நம் அன்னை’ என்று மதிக்கத் தோன்றியது. தாஜ்மகால் புனிதமான காதல் சின்னம் என்ற எண்ணம் அடியோடு தகர்ந்துவிட்டது. பன்னிரண்டு குழந்தைகள் பெற்றுப் போட பெண்கள் அந்தக் காலத்தில் குழந்தை பெறும் இயந்திரமாகப் பயன்பட்டு இருக்கிறார்கள் என்ற வேதனையே மிஞ்சியது. அறியாமையே வரம் என்பதை அப்போதுதான் நான் உணர்ந்தேன். அதன் பிறகு, சுற்றுலா என்ற குறுகுறுப்போ, குதூகலமோ எனக்கு ஏற்படவே இல்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு