Published:Updated:

அம்மா சந்தோஷப்படுவாங்க!

நா.கதிர்வேலன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''ஒரு பத்திரிகையில் 'சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண் நல்ல கதை தேடிக்கிட்டு இருக்கார்’னு ஒரு பெட்டிச் செய்தி படிச்சேன். உடனே ஹைதராபாத் கிளம்பிப் போய் அவரைப் பார்த்து கதை சொன்னேன். எதுவும் சொல்லாம, கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அப்படிக் கிடைச்சது தான் 'தொலி பிரேமா’ வாய்ப்பு. அடுத்தடுத்து தெலுங்கில் 13 வருஷத்துல எட்டுப் படங்கள். ஹிட் டைரக்டர்னு பேர் கிடைச்சது. என்ன... சினிமாவில் வரும் ஒரே பாட்டு... ஓஹோ வளர்ச்சி மாதிரி நாலே வரியில் சொல்லிட்டேனா என் கதையை!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் கருணாகரன். தெலுங்குப் படவுலகில்  வெற்றியைக் குத்தகைக்கு எடுத்த தமிழர். இரண்டு தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகளுக்குப் பிறகு 'ஏனென்றால்... காதல் என்பேன்’ மூலம் தமிழில் கதை சொல்ல வந்திருக்கிறார்.

 ''தேவகோட்டைக்காரன் நான். பாலிடெக்னிக் படிக்க ஆர்வம் இல்லாம, சென்னைக்கு வந்தேன். அங்கே எதுவுமே ஈஸி இல்லை. ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது லாட்டரியில் பரிசு விழற மாதிரி ஆச்சு. எனக்கு நல்லா மிமிக்ரி வரும். நண்பர்களிடம் அதைச் செஞ்சு காமிச்சு காசு வாங்கிச் சாப்பிடுவேன். எப்படியோ பல்டி அடிச்சு டைரக்டர் கதிர்கிட்ட சேர்ந் தேன். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில்தான் அந்தப் பெட்டிச் செய்தியைப் படிச் சேன்!''  

அம்மா சந்தோஷப்படுவாங்க!

''இத்தனை வருஷத்தில் தமிழ்ல ஏன் படம் பண்ணவே இல்லை?''

''நிறையத் தடவை கூப்பிட்டாங்க. ஆனா, தெலுங்கில் நான் படம் பண்ணின ஒவ்வொரு தயாரிப்பாளரும்

அம்மா சந்தோஷப்படுவாங்க!

அவங்களோட அடுத்தடுத்த படங்களிலும் என்னை கமிட் பண்ணிட்டே இருந்தாங்க. அந்த அளவுக்கு அங்கே ஹீரோ, தயாரிப்பாளர்கள்னு எல்லாரும் நண்பர்களாப் பழகிட்டோம். இருந்தாலும் தமிழ்ல படம் பண்ண ரொம்ப ஏக்கமா இருந்துச்சு. அதுக்கு இப்போதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதோ ஆட்டத்துக்கு ரெடி. இது அசல் தமிழ்ப் படம்.  ராம், தமன்னா ஜோடி. இதுக்கு மேல சினிமாவில் காதலைப் பத்திச் சொல்ல எதுவும் இல்லை. ஆனா, ட்ரீட்மென்ட் ரகளையா இருக்கும். என் பட போஸ்டரைச் சுவத்திலும் என் பேட்டியை விகடனிலும் பார்த்தா, என்னோட அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க!''

''என்னதான் தாய்மொழியா இருந்தாலும் தமிழில் படம் பண்ண எதுவும் சிரமம் இருக்கா?''

''மொழி வேற வேறயா இருந்தாலும் சினிமா எப்பவும்ஒண்ணு தான். எல்லா மக்களோட உணர்வுகளும் ஒண்ணுதான். நான் தமிழ்நாட் டில் பார்த்ததை, படிச்சதை, அனுபவிச்ச தைத்தான் அங்கே படமா எடுத்தேன். அதையேதான் இங்கேயும் பண்ணப்போறேன். என்னைப் பொறுத்தவரைக்கும் உலக சினிமாவும் தென்னிந்திய சினிமாவும் தரத்திலும் ரசனையிலும் ரொம்பப் பக்கத்துலதான் இருக்கு. என்ன, உலக சினிமா உள்ளதை உள்ளபடி கொடுக்குறாங்க. நாம அதை இன்னும் எளிமை ஆக்குறோம். அவ்வளவுதான்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு