Published:Updated:

பதினைந்து வருஷத்துக்கு அப்புறம்தான் தமிழ்நாடு!

பிரபுதேவா பளீர்ம.கா.செந்தில்குமார்

பதினைந்து வருஷத்துக்கு அப்புறம்தான் தமிழ்நாடு!

பிரபுதேவா பளீர்ம.கா.செந்தில்குமார்

Published:Updated:
##~##

ம்லத்துடனான விவாகரத்தோ, நயன்தாராவுடனான பிரிவோ... எப்போதும் சென்சேஷனல் செய்திகளில் தவறாமல் இடம் பிடிக்கிறது பிரபுதேவாவின் பெயர். மும்பை விமான நிலையத்தில் ஃப்ளைட் பிடிக்கக்  காத்திருந்த இடைவேளையில் பேசியதில் இருந்து...

 '' 'ரவுடி ரத்தோர்’ இந்திப் படத்தில் அக்ஷய் குமாருடன் நம்ம விஜய் டான்ஸ் ஆடி இருப்பது பெரிய ஆச்சர்யம். அப்படியே அவரை இந்தியில் நடிக்கவும் வெச்சிருவீங்களா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தமிழ் 'சிறுத்தை’ ரீ-மேக்தான் 'ரவுடி ரத்தோர்’. படத்தில் ஓப்பனிங் ஸாங்கா வர்ற 'ஜிந்தாத்தா ஜிந்தா ஜிந்தா ஜிந்தாத்தா’ பாட்டுக்கு விஜய் சார் ஆடினா நல்லா இருக்கும்னு தோணுச்சு.  'ஓ.கேங்ண்ணா.... பண்ணிடலாம்ண்ணா’னு ரெடியாகி வந் தார் விஜய். விஜய்க்கு தேங்க்ஸ். அதே போல விஜய்க்கு ஓ.கே-ன்னா, அவருக்காக இந்தியில படம் பண்ண நான் ரெடி!''

பதினைந்து வருஷத்துக்கு அப்புறம்தான் தமிழ்நாடு!

''அப்படியே மும்பையிலேயே செட்டிலாகிடலாம்னு முடிவு பண்ணிட்டீங்களா?''

''உண்மையைச் சொல்லணும்னா... நான் அடுத்தும் இந்திப் படம்தான் இயக்குறேன். தமிழுக்கு வர எனக்கும் ஆசைதான். ஆனா, கையில இருக்கும் கமிட்மென்ட்ஸ்லாம் முடிச்சுட்டு தமிழ்நாடு பக்கம் வர எப்படியும் பத்துப் பதினைஞ்சு வருஷம் ஆகிடும்போல. நெஜமாத்தாங்க சொல்றேன்... அவ்வளவு வேலை மும்பையில் இருக்கு. நம்புங்க!''

''ஒரு பேட்டியில், 'நான் உண்மையா இருந்தேன். ஆனால், அவர் அப்படி இல்லை’னு உங்களைப் பற்றி நயன்தாரா சொல்லியிருக்காங்களே..!''

''

பதினைந்து வருஷத்துக்கு அப்புறம்தான் தமிழ்நாடு!

போன கேள்வியோடவே பேட்டியை முடிச்சிக்குங்க. போதும்'' என்றவரிடம், ''இல்லீங்க... இன்னும் நாலைஞ்சு கேள்விகள் இருக்கு'' என்றதும், ''ஓ.கே. நெக்ஸ்ட்... நெக்ஸ்ட்...'' என்றார்.

''உங்க பிறந்த நாள் விழாவில் த்ரிஷாவுடன் நீங்கள் நெருக்கமாக போஸ் கொடுத்தது யாரையோ காயப்படுத்தத்தான்னு சொல்றாங்களே?''

''ஐயையோ... நெக்ஸ்ட் நெக்ஸ்ட்...''

''நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி, சோனாக்ஷி சின்ஹானு உங்க ஹீரோயின் எல்லார்கூடவும் உங்களைச் சேர்த்துவெச்சுப் பேசப்படுறதைப் பத்தி?''

''ஏங்க போதும்ங்க... ஃப்ளைட் வந்துடுச்சு. கிளம்புறேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism