Published:Updated:

என் மகன் இவன்! நந்திதா தாஸ்

கே.கே.மகேஷ்படங்கள் : எல்.ராஜேந்திரன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

''என் குழந்தையோடதான் போட்டோவுக்கு போஸ் கொடுப்பேன். சினிமா இண்டஸ்ட்ரியில் ஹீரோக்கள் மட்டும் கல்யாணம் பண்ணி, பேரன் பேத்தி எடுத்த பிறகும் குடும்பப் பேட்டிகள் கொடுத்துட்டு ஸ்க்ரீன்ல டூயட் பாடுறாங்க. ஹீரோயின்களுக்கு அந்த உரிமை இல்லையா?'' - செல்லமாக அதட்டுகிறார் நந்திதா தாஸ்.  

 இயக்குநர் சீனு ராமசாமியின் 'நீர்ப் பறவை’ படப்பிடிப்புத் தளம். தூத்துக்குடி கடற் காற்று கேசம் கலைக்கிறது. இரண்டு வயது மகன் விஹான் விளையாடக் கிளம்ப, அவன் பின்னால் ஓடி ஆடி உற்சாகமாக இருக்கிறார் நந்திதா.

என் மகன் இவன்! நந்திதா தாஸ்

''செகண்ட் இன்னிங்ஸ்ல முதல் படமே தமிழ்ப் படம். எதுவும் விசேஷ காரணம் இருக்கா?''

''2010-ல 'ஐ யம்’ படத்தில் நடிச்சப்ப, நான் அஞ்சு மாசக் கர்ப்பிணி. குழந்தை பிறந்த பிறகு, அவனைக் கவனிக்க மட்டுமே நேரம் இருந்தது. அதனால், ரெண்டு வருஷம் சினிமாபத்தி யோசிக்கலை. 'நீர்ப் பறவை’க்காக சீனு ராமசாமி சார் ரொம்ப மாசமா என்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தார். 'இல்லை சார். எப்பவும் ஓடிட்டே இருக்கிற குட்டிப் பையன் இருக்கான். எக்ஸாமுக்குப் படிக்கிற மாதிரி நிறைய தமிழ் டயலாக் மனப்பாடம் பண்ண வேண்டியது இருக்கும். இப்போ வேணாம்’னு சொன்னேன். ஆனா, அவர் விடலை. பெங்களூரு வந்து படத்தோட கதையைச் சொன்னார். எனக்கு மீனவப் பெண் கேரக்டர். தங்கர்பச்சான் மாதிரி ரொம்ப எமோஷனலான ஆளா இருக்கார். கதை சொல்லும்போதே பல இடங்களில் அழுதுட்டார். என்பெரும் பாலான படங்கள் எல்லா ஜெனரேஷனை யும் கவர்ந்திருக்கு. இப்பவும் இன்டர் நெட்டிலோ, டி.வி.டி-யிலோ நான் நடிச்ச படங்கள் 'மோஸ்ட் வான்டட்’டா இருக்கு. 'நீர்ப் பறவை’க்கும் அந்த கிரெடிட் கிடைக் கும்.''

''இயக்குநர், எழுத்தாளர், நடிகை, தாய்... நிஜ வாழ்க்கையில் எந்தப் பாத்திரம் உங்களுக்கு ரொம்பப் பிடிக்குது?''

''தண்ணீரை எந்தப் பாத்திரத்தில் ஊத்தினாலும், அது அந்தப் பாத்திரத்தின் வடிவத்துக்கு ஏற்ப நிறைஞ்சு நிக்கும். நானும் அப்படித்தான். அந்த நேரம் எந்தப் பாத்திரத்தில் இருக்கேனோ, அதுக்கு பெஸ்ட் ஃபிட்டா இருப்பேன். மூணு வருஷம் ரொம்பக் கஷ்டப்பட்டு 'ஃபிராக்’ படம் இயக்கினேன். மதம் என்பது ஒவ்வொருத்தரின் பெர்சனல் விருப்பம். அரசியல்வாதிகள் தங்களின் வசதிக்காக அதைச் சொல்லிச் சொல்லி, மக்களிடையே பிரிவினையை உண்டாக்குறாங்க என்பதுதான் படத்தின் ஒன் லைன். தேசிய விருது உள்பட 20 விருதுகள் ஜெயிச்சது. குழந்தை கள்னா எனக்கு ரொம்ப இஷ்டம். அவங் களுக்காக அ

என் மகன் இவன்! நந்திதா தாஸ்

ஞ்சு குறும்படங்கள் இயக்கி இருக்கேன். தெருவோரச் சிறுவர்களுக்காக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் கிரிக்கெட் மேட்ச் நடத்தியிருக்கேன். சில்ட்ரன் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியாவின் தலைவராக இருக்கேன். அதுக்கு நயா பைசாகூடச் சம்பளம் கிடையாது. ஆனா, குழந்தைகளுக்கான சிறந்த படங்களைத் தயாரிப்பது, விநியோகிப்பதுனு மன நிறை வைத் தரும் பணி.

'தி வீக்’ பத்திரிகையில் 'லாஸ்ட் வேர்டு’ என்ற தலைப்பில் கடைசிப் பக்கம் பத்தி எழுதுறேன். எதைப் பத்தியும் எழுதலாம்கிற சுதந்திரம் இருக்கு. என் குழந்தையைப் பத்தி எழுதுவேன். பார்த்த விஷயங்கள், பாதித்த சம்பவங்கள், ஷூட்டிங் அனுபவங்கள், இப்ப உங்ககூடப் பேசுறதுனு எல்லாம் எழுதுவேன். என் அம்மாவும் ஒரு எழுத்தாளர் தான். என் முதல் ரசிகரும் விமர்சகரும் அவங்கதான். சிம்பிளா... வாழ்க்கையை அந்தந்த நிமிடத்தில் வாழ்றேன்.''

''தங்கர்பச்சான், பார்த்திபன்கூட இப்பவும் டச்ல இருக்கீங்களா?''

''ஆமாம். என் திருமணம், குழந்தை பிறப்புக்கெல்லாம் முதல் ஆளாக வாழ்த்தினாங்க. 'அழகி - 2’ எடுத்தா, நீங்கதான் நடிக்கணும்’னு ரெண்டு பேரும் சொன்னாங்க. பார்க்கலாம்.''

''மணிரத்னத்தின் 'கடல்’ படத்தில் நடிக்கிறீங்களா?''

''இதே மணப்பாடு கிராமத்துல மணி சார் ஒரு மாசமா ஷூட்டிங் நடத்தினாராம். சர்ச் செட் எல்லாம் போட்டு இருந்ததா ஊர்க்காரங்க சொன்னாங்க. ஆனா, அந்தப் படத்தில் நான் நடிக்கலை. சிக்ஸ் டு சிக்ஸ் ஓடிட்டே இருக்கும் அவரோட 'வொர்க்கிங் ஸ்டைல்’ எனக்கு ரொம்பப் பிடிக்கும். இந்தக் கேள்விக்கு அப்புறம் மணி சார் படத்தில் மறுபடி நடிக்கிற ஆசை வந்திருச்சு. இப்பவே அவருக்கு மெசேஜ் அனுப்புறேன். 'ஏன் என்னைக் கூப்பிடலை?’னு!''

என் மகன் இவன்! நந்திதா தாஸ்

''இன்றைய தமிழ் சினிமா டிரெண்டை ஃபாலோ பண்றீங்களா?''

''டெல்லி, மும்பையில் தமிழ் சினிமா பார்க்கிற வாய்ப்பு ரொம்பக் குறைவு. ஆனா, 'தமிழ்ல நிறைய வித்தியாசமான படங்கள் வருது. திறமையான இளம் இயக்குநர் கள் வந்திருக்காங்க. யதார்த்தமான படங்கள் கிளாஸிக்கா வருது’னு என் தமிழ் ஃப்ரெண்ட்ஸ் அப்பப்போ சொல்வாங்க. அவ்வளவு நல்ல படங்களை சிலர் 'ரீஜனல் ஃபிலிம்’னு சொல்லும்போது, வருத்தமா இருக்கும். அப்படிச் சொல்றவங்ககிட்ட நான் சண்டை போடுவேன். 'டெல்லியும் மும்பையும்தான் இந்தியாவா? இந்தி சினிமா மட்டுமே, இந்திய சினிமா கிடையாது. தமிழ், மலையாளம், பெங்காலி, தெலுங்கு, கன்னடம்னு எல்லாமே இந்திய சினிமாக்கள்தான்’னு பின்னிருவேன்.''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு