என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
Published:Updated:

ஆறு மெழுகுவத்தி... எங்கள் புதிய 'முகவரி'!

ஆர்.சரண்

##~##

மாலை நேர மக்ரிஃப் தொழுகை முடித்துவிட்டு என் முன் வந்து அமர்ந்தார் வி.இஸட்.  துரை. 'முகவரி’, 'நேபாளி’ படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர், இப்போது 'ஆறு மெழுகுவத்தி’களை ஏற்றுகிறார்.

 ''அதென்ன தலைப்பே மெழுகுவத்தியின் சிம்பலா... சிம்பிளா... வித்தியாசமா இருக்கே?''

''ஆறு மெழுகுவத்தி, உருகும் மெழுகுவத்தி, சிக்ஸ் கேன்டில்ஸ்னு உங்க மனசுக்கு என்ன தோணுதோ அதுதான் படம். இல்லைன்னா, ஆறு வருஷம், ஆறு மாசம், ஆறு நாள், ஆறு மணி நேரம், ஆறு நிமிஷம், ஆறு நொடிகள் நடக்கும் கதையாவும் நீங்க இதை எடுத்துக்கலாம்.''

ஆறு மெழுகுவத்தி... எங்கள் புதிய 'முகவரி'!

''முதல் படமே அஜீத்தை வெச்சுப் பண்ணீங்க நீங்க... அறிமுகமான படத்துலயே சிம்ரன், ஜோதிகாவுக்கு ஜோடியா நடிச்சு சென்சேஷன் கிளப்பினவர் ஷாம்... இப்போ ரெண்டு பேருக்குமே ஒரு பெரிய பிரேக் தேவையாச்சே...''

''என்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு. நான் அனுபவிச்ச வலியைப் போலவே, வெற்றிக்குப் பக்கத்துல நின்னும் அதை ருசிக்க முடியாத ஷாம் கிட்டத்தட்ட என் தம்பி. 'ஏதாவது பண்ணணும்ணே’னு சொல்லிட்டே இருப்பான். ஷாமுக்கு இது லைஃப் சைஸ் படம். தமிழ்நாட்டில் ஆரம்பிக்கிற கதை ஆந்திரம், மகாராஷ்டிரம், கோவா, அஹமதாபாத், லக்னோ, கான்பூர்னு பயணிச்சு, கொல்கத்தாவில் முடியும். குடும்பத்தை பெங்களூருக்கு அனுப்பிட்டு, ஒன்றரை வருஷம் ஷாம் எங்ககூடவே இந்தியா முழுக்க சாப்பாடு, தூக்கம் மறந்து உடலை வருத்தி ஒரு பரதேசிபோல நடிச்சிருக்கான். க்ளைமாக்ஸ் கொல்கத்தாவில்... 'உன்கிட்ட என்னமோ மிஸ் ஆகுதுடா ஷாம்... ஆடியன்ஸுக்கு உன்னைப் பார்த்ததுமே ஒரு ஃபீல் வரணும்’னு சொன்னேன். 'நீங்க முன்னாடி போங்க... நான் பின்னாடி வர்றேன்’னு சொல்லிட்டு ரெண்டு மூணு நாள் கழிச்சுக் கிளம்பி வந்தான். ஷூட்டிங் அன்னிக்குக் காலையிலதான் அவனைப் பார்த்தேன்... அதிர்ச்சியடைய வெச்சுட்டான். கண்ணுக்குக் கீழே அவ்வளவு பெரிய வீக்கம். முகமெல்லாம் அடிபட்ட மாதிரி ரணம். சும்மா கண்ணைத் திறந்து பார்த்தாலே, வலியில துடிக்கிறான். இப்போ வரை அந்த வீக்கம் எப்படி வந்துச்சுனு சொல்ல மாட்டேங்கிறான். வலியோட துடிச்சுக்கிட்டே அவன் நடிச்சப்போ மொத்த யூனிட்டும் கண் கலங்கிடுச்சு.

ஆறு மெழுகுவத்தி... எங்கள் புதிய 'முகவரி'!

இந்தக் கதை எனக்குள் நிகழ்ந்ததும் அதுக்கு ஷாம் தன் உடலை வருத்தி நடிச்சதும் அல்லாவின் கருணை. ரெண்டு பேருமே ஆயுசுக்குமான நம்பிக்கையோட காத்திருக்கோம்...''

ஆறு மெழுகுவத்தி... எங்கள் புதிய 'முகவரி'!

''இவ்வளவு கஷ்டப்பட்டு எடுக்கும் படத்துல என்ன மெசேஜ் சொல்லி இருக்கீங்க?''

'

ஆறு மெழுகுவத்தி... எங்கள் புதிய 'முகவரி'!

'சக மனிதர்கள் மேல நாம வெச்சிருக்கிற மதிப்பீடுகள் மாறும். யாரையும் தோற்றத் தைப் பார்த்து எடை போடக் கொஞ்சம் யோசிப்பீங்க. படத்தோட ரஷ் பார்த் துட்டு, நண்பர்கள் எல்லாரும் 'கலக்கிட் டடா’னு மனசுவிட்டுப் பாராட்டுறாங்க. என் நண்பர் இயக்குநர் சசி 'இப்படி ஒரு படம் நீயே நினைச்சாலும் இனி எடுக்க முடியாது’னு கட்டிப் பிடிச்சு வாழ்த்தினார். துணை நடிகர்கள் யாரையும் பயன்படுத்தாம அங்கங்கே பார்த்த வித்தியாசமான மனிதர்களையே படம் முழுக்கநடிக்க வெச்சிருக்கோம். மொத்த யூனிட்டும் ஈகோ பார்க்காம ரிகர்சல் பண்ணிட்டு ஷூட்டிங் போனோம். இத்தனை கஷ்டங்கள் இந்தக் கதைக்குத் தேவைப்பட்டுச்சு. நாளைய இயக்குநர்ல வர்ற ஒரு சின்னப் பையன் அஞ்சு நிமிஷத்துல ஒரு மேஜிக் செஞ்சுடறான். நாம இத்தனை படங்கள் எடுத்திருக்கோம். இன்னொரு கட்டத்துக்குப் போகணும் இல்லையா... இந்தப் படத்துல அந்தப் பாய்ச்சல் இருக்கும்!''