என் விகடன் - திருச்சி
என் விகடன் - கோவை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - சென்னை
Published:Updated:

நீங்க எதிர்பார்க்கிறதுக்கு மேல கிளாமர் இருக்கும்!

ஆர்.சரண்படங்கள் : ஆ.முத்துக்குமார்

##~##

ல்லிக்குச்சியாய் இருந்தாலும் பஞ்சு மிட்டாய்போலப் பளபளக்கிறார் பார்வதி ஓமனக்குட்டன். இடம் ரேடிசன் ப்ளூ ஹோட்டல். 'பில்லா-2’வில் அஜீத்துடன் கிளாமர் அட்டகாசம் செய்து முடித்த திருப்தி தெரிகிறது முகத்தில்.

 '' 'பில்லா-2’க்கு முன்னாடி என்ன பண்ணிக்கிட்டு இருந்தீங்க?''

''மும்பையில் நிறைய மாடலிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். 'யுனைடெட் சிக்ஸ்’னு இந்தியில ஒரு ஆக்ஷன் படத்துல நடிச்சேன். அப்புறம் 'மதன் கொள்ளி’னு ஒரு மலையாள பேய் படத்துல நடிச்சேன். அந்தப் படத்துல பேயாகவும் போலீஸ் அதிகாரியாகவும் டபுள் ரோல் பண்ணேன். நான் நடிச்ச ரெண்டு படங்களுமே டெரரான ஆக்ஷன் படங்கள். அதனால இந்தப் பொண்ணுக்கு ஆக்ஷன்தான் சரிப்பட்டு வரும்னு அடிதடி கதைகளோட வர ஆரம்பிச்சுட்டாங்க. அப்போ வந்ததுதான் பில்லா வாய்ப்பு. படத்துல அஜீத்கூட கொஞ்சமா ஆக்ஷனும் நிறைய ரொமான்ஸும் பண்ணி இருக்கேன்!''

நீங்க எதிர்பார்க்கிறதுக்கு மேல கிளாமர் இருக்கும்!

''அஜீத் என்ன சொல்லிக் கொடுத்தார்?''

''மத்தவங்க மேல எடுத்துக்கிற அக்கறை அஜீத் ஸ்பெஷல். லைட்பாய்ல ஆரம்பிச்சு கூட நடிக்கிறவங்க வரை ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுறார். அவர் கோபப்பட்டு பார்த்ததே இல்லை. எல்லோருக்கும் அவர் கையால டீ போட்டுக் கொடுக்கிறது வரை இறங்கி செய்றார். ஷூட்டிங் பிரேக்ல கேரவனுக்குள்ள போய் உட்கார்ந்துக்க மாட்டார். சாதாரணமா யூனிட் ஆளுங்களோட அவர் நிக்கிறதைப் பார்க்கவே ஆச்சர்யமா இருக்கும்!''

'' 'பில்லா-2’ படத்துல உங்க கேரக்டர் என்னனு சொல்லுங்களேன்?''

''டேவிட் பில்லாங்கிற கேங்ஸ்டர்க்கு நான்தான் ஜோடி... லேடி கேங்ஸ்டர் கேரக்டர் தான். படத்துல என் பேர் ஜாஸ்மின். நீங்க எதிர்பார்க்கிறதுக்கு மேல கிளாமர் இருக்கும். போதுமா?''

''நீங்க நயன்தாராவோட நல்ல ஃப்ரெண்ட்ஷிப்ல இருக்கீங்களாமே...''

''ஆமா... நான் நயன்தாராவோட தீவிர ரசிகை. மும்பைல என் வீட்டுக்கு வந்திருக்காங்க. கிறிஸ்டியனா இருந்தாலும், என் அம்மா கொடுக்குற பிரசாதத்தை நெற்றியில் வெச்சுக்குவாங்க. எனக்குள் சினிமா பற்றிய ஆசையை முதலில் விதைத்ததே நயன்தாராதான். அவங்க அளவுக்கு இங்கே வளரணும். அதுதான் என் கனவு!''

''2008-ல் மில்லி மீட்டர் கேப்பில் உலக அழகி டைட்டிலை மிஸ் பண்ணிய வருத்தம் இன்னும் இருக்கா?''

''இல்லவே இல்லைனு சொன்னா அது பொய். அந்த நேரத்துல வெடிச்சு அழணும்போல இருந்துச்சு. இப்போ நினைச்சா அது குழந்தைத்தனமான விஷயமா இருக்கு. ஃபைனல் வரை வந்து 'ஃபர்ஸ்ட் ரன்னர் அப்’ வந்ததே சந்தோஷமான அனுபவம்தான். வாழ்க்கையில நமக்கு நடக்குற சம்பவங்கள் எல்லாமே நல்லதா இருக்கும்னு சொல்ல முடியாது. ஆனா, நல்ல அனுபவங்களைக் கொடுக்கும்னு உறுதியா சொல்வேன்!''