Published:Updated:

`Ostrich’ முட்டை முதல் `Repeat’ வரை! - 2021-ல் இணையத்தைக் கலக்கிய கோலிவுட் மீம்ஸ்

2021 மீம்ஸ்

2021-ல் நெட்டிசன்கள் கலாய்த்த, கொண்டாடிய, வைரலாக்கிய மீம்ஸ்களின் ஒரு ரீவைண்ட்தான் இந்தத் தொகுப்பு.

`Ostrich’ முட்டை முதல் `Repeat’ வரை! - 2021-ல் இணையத்தைக் கலக்கிய கோலிவுட் மீம்ஸ்

2021-ல் நெட்டிசன்கள் கலாய்த்த, கொண்டாடிய, வைரலாக்கிய மீம்ஸ்களின் ஒரு ரீவைண்ட்தான் இந்தத் தொகுப்பு.

Published:Updated:
2021 மீம்ஸ்

ஒவ்வொரு வருடமும் தமிழ் சினிமாவில் எத்தனையோ திரைப்படங்கள் வெளியாகும். அதனை பாக்ஸ் ஆபிஸ் ஹிட், மெகா ஹிட், சூப்பர் ஹிட் என ஒவ்வொரு பாணியில் தங்களுடைய வெற்றியை வெளிப்படுத்துவார்கள் படக்குழுவினர்.

ஆனால் எந்தத் திரைப்படம் வெளியானாலும் அதன் ‘ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்’ தொடங்கி முழு திரைப்படம் வரை மீம் கிரியேட்டர்ஸ் தங்களது பாணியில் வெளியிடும் மீம்ஸ்களின் வெற்றியை ‘மீம் ஹிட்’ என்றுதான் கூறவேண்டும்.

அப்படி 2021-ல் நெட்டிசன்கள் கலாய்த்த, கொண்டாடிய, வைரலாக்கிய மீம்ஸ்களின் ஒரு ரீவைண்ட்தான் இந்தத் தொகுப்பு.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘Ostrich’ முட்டை தெரியுமா?

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

2020ல் முடக்கிய கொரோனா சற்று ரெஸ்ட் எடுக்கச் சென்ற சமயத்தில் 2021ல் தியேட்டரில் வெளியான திரைப்படம்தான் 'மாஸ்டர்'. விஜய் - விஜய் சேதுபதி காம்போவில் பக்கா கமர்ஷியல் பொங்கலாக ரசிகர்களுக்கு அமைந்தது. விஜய் சேதுபதியின் நக்கல் நையாண்டியான நடிப்பு, மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு பெரும் தீனியாக அமைந்தது. சேதுபதியின் “Ostrich முட்டை தெரியுமா?” தத்துவமும், “அந்த வாத்தி மண்டைக்குள்ள ஓடிட்டே இருக்கான்…” வசனமும் வெகுவாக இணையத்தில் வளம் வந்தன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

டேய் சும்மா இர்றா..! - S.J. சூர்யாவின் புலம்பல்

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

செல்வராகவன் இயக்கத்தில் S.J. சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான 'நெஞ்சம் மறப்பதில்லை' திரைப்படத்தின் ‘Sneak Peak’ காட்சியில் இடம்பெற்ற "டேய் சும்மா இர்றா..." மற்றும் “It's ok, shit happens, that's life..!” என்ற S.J. சூர்யாவின் புலம்பல் நெட்டிசன்களுக்குக் கொண்டாட்டமாய் அமைந்தது.

பாக்ஸிங்னா எனக்கு நீதான் வாத்தியாரே..!

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

பா.இரஞ்சித் இயக்கத்தில் 2021-ல் மிக முக்கிய திரைப்படமாகவும், வெற்றிப் படமாகவும் அமைந்தது அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியான 'சார்பட்டா பரம்பரை'. ஆர்யா, பசுபதி இணைந்து கபிலன், ரங்கன் வாத்தியாராக மாஸ் காட்டிய கதாபாத்திரங்களை ஒற்றை சைக்கிளைக் கொண்டு தமாஷ் ஆக்கினர் மீம் கிரியேட்டர்கள். சோஷியல் மீடியாவை திறந்தாலே கபிலனும், ரங்கன் வாத்தியாரும் சைக்கிளில் செல்லும் மீம்ஸ்தான் கண்ணில் படும். ஒரு கட்டத்தில் அதுவே திரைப்படத்திற்கும் புரமோஷனாக மாறி படக்குழுவினரும் அதைப் பகிரத் தொடங்கினர்.

“இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல…”

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

சந்தானத்தின் மாறுபட்ட நடிப்பில் வெளியான 'டிக்கிலோனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. மனநலம் பாதிக்கப்பட்டவராக வரும் லொள்ளு சபா மாறனின் “இன்னும் என்ன நீ பைத்தியக்காரனாவே நெனச்சிட்டு இருக்கல்ல…” மற்றும் “விடுதலை ரொம்ப முக்கியம் தம்பி” டயலாக்குகள் மீம் மெட்டீரியலாக உருவெடுத்து, அது லொள்ளு சபா மாறனை மீம்ஸ் மூலம் மக்கள் மனதில் பதிய வைத்தது.

“எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா நீ…”

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

நெல்சன் இயக்கி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டாக்டர்' படம் பாக்ஸ் ஆபிஸில் பட்டையைக் கிளப்பியது. டார்க் காமெடியை கையில் எடுத்து பெரிய நடிகர் பட்டாளத்தையே ஒன்று சேர்த்து, தியேட்டரில் அனைவரையும் வயிறு வலிக்க சிரிக்க வைத்திருந்தார் நெல்சன். படத்தின் க்ளைமாக்ஸில் இடம்பெற்ற “எங்க கொண்டு வந்து நிறுத்திருக்க பாத்தியா நீ…” டயலாக்தான் இன்றைய டிரெண்ட்.

“வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு…” - இது S.J. சூர்யாவின் கம்பேக்..!

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, S.J. சூர்யா நடிப்பில் வெளியான தமிழின் முதல் ‘டைம் லூப்’ படம்தான் மாநாடு. இந்த கான்செப்ட் எப்படி நம்ம மக்களுக்குப் புரியும் என்று யோசித்த வேலையில், அனைவரையும் தியேட்டருக்கு ரிப்பீட்டாக திரண்டுச் செல்ல வைத்தது இந்த மாநாடு. S.J. சூர்யாவை காமெடியான வில்லனாக மாற்றி “வந்தான் சுட்டான் செத்தான் ரிப்பீட்டு…” எனக் குழம்ப வைத்து மக்களுக்கு டைம் லூப் கான்செப்டை புரிய வைத்திருப்பார் வெங்கட் பிரபு. இந்த ரிப்பீட்டு மீம்ஸ் எல்லா நெட்டிசன்களிடமும் புகுந்து விளையாடியது.

கூல் சுரேஷ்-ஐ ஹாட் ஆக்கிய மீம்ஸ் கிரியேட்டர்ஸ்..!

2021 மீம்ஸ்
2021 மீம்ஸ்

சிம்புவின் தீவிர ரசிகராகவும், அவரின் உதவியாளராகவும் எப்போதும் அவர் கூடவே இருக்கும் கூல் சுரேஷிற்கும் மீம் கிரியேட்டர்களுக்கும் ஒரு நெருங்கிய பந்தம் உண்டு. எப்படா கூல் சுரேஷ் பேசுவார் என நோட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள் நெட்டிசன்கள். அப்படி அவர் கொடுத்த கன்டென்ட்தான் இந்த 'தானையத் தலைவன் STR-ன் மாநாடு எல்லாரும் வழியை விடு..!' இது மீம் கிரியேட்டர்களால் இணையத்தில் சக்கைப் போடு போட, கூல் சுரேஷ் கோபத்தால் ஹாட் ஆனார்.

‘நீரின்றி அமையாது உலகு’ என்பது போல, ‘மீம் இன்றி இயங்காது இணையம்’ என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிக் கண்ணில் பட்டதை எல்லாம் கன்டென்ட்டாக உருவாக்கி, தற்போது மக்களும் அனைத்தையும் மீம்ஸ் கண்ணோட்டத்திலேயே பார்க்கும் வகையில் மாறியிருக்கிறது இந்த மீம்ஸ் கலாசாரம்.

வரும் 2022 புத்தாண்டை மீம்ஸ் மூலம் கொண்டாட தற்போதே தொடங்கிவிட்டனர் மீம் கிரியேட்டர்கள் மற்றும் நெட்டிசன்கள்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism