Published:Updated:

சினிமா விமர்சனம் : மனம் கொத்திப் பறவை

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : மனம் கொத்திப் பறவை

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

சிவகார்த்திகேயன், கடத்தச் சொல்லவில்லை. ஆத்மியா, தன் காதலைக்கூடச் சொல்லவில்லை. 'அவ என்னை ரொம்ப லவ் பண்றாடா!’ என சிவகார்த்திகேயன் தன் நண்பர்களிடம் பீலாவிட... அந்தப் பக்கம் அதே பொண்ணுக்கு வேறு மாப்பிள்ளையுடன் மறுநாள் கல்யாணம்... நண்பர்கள் கடத்துகிறார்கள்... ஊரே தேடுகிறது... கண்டுபிடிக்கிறது... சுபம்!

ஆனால், சும்மா சொல்லக் கூடாது காமாசோமா திரைக்கதையில் ஜோவெனக் கொட்டுகிறது இயக்குநர் எழிலின் ஜோக்ஸ் மழை!

அப்பாவி வெட்டி ஆபீஸர் கேரக்டருக்கு சிவகார்த்திகேயன் நச். உடான்ஸ்களை உதாராக அள்ளிவிடுவதும் அலட்டலாக அத்தனை பேரையும் கலாய்ப்பதுமாகக் கலக்குகிறார். கூச்சநாச்சமே இல்லாமல் குத்தாட்டம் ஆடுவது இன்னும் அசத்தல்!

அறிமுக ஆத்மியா அழகி... வேறென்ன சொல்ல? திருமணத்துக்கு முந்தைய இரவு தன்னைக்

சினிமா விமர்சனம் : மனம் கொத்திப் பறவை

கடத்தியது தெரிந்து ஒரு பெண்ணுக்கு எவ்வளவு கோபம் வர வேண்டும்? அதுகூட வர மாட்டேன் என்கிறது. ம்ஹூம்!  

சிங்கம்புலி, சூரி, ரவிமரியா, ஷாம்ஸ், ஸ்ரீநாத் காமெடி டீம்தான் கலக்கல் காம்பினேஷன். முறுக்கு மீசை ரவிமரியாவிடம் மாட்டிக்கொண்டு, ஊர் ஊராக அடி வாங்கும்போதும் ஹைவேஸ் ஓரத்தில் தேன் கிண்ணத்துக்கு நடனமாடும்போதும் கோபத்தில் உருமி ரவிமரியா பந்தாட, 'நல்லாத்தான்யா இருந்தான்... ரீ-சார்ஜ் பண்ணிவுட்டாய்ங்க!’ என்று கலங்கும்போதும் தியேட்டரை அதிரடிக்கிறார் சிங்கம்புலி.

'அவன் என்னை 'மச்சான்’னு கூப்பிட்டுட்டாண்டா!’ என்று வெந்து வெம்பும் இடத்தில் குபீர் பட்டாசு கொளுத்துகிறார் ரவிமரியா. வெளியூரில் சூரி, மாப்பிள்ளையை விசாரிக்கும் அலட்டலுக்கு அள்ளுது அப்ளாஸ்!  

சீரியஸாக ஆரம்பித்து, தடாலடி காமெடி டிராக்கில் தடம் புரண்டு மீண்டும் சென்டிமென்ட் யு டர்ன் அடித்து கதை கிறுகிறுப்பதால், 'படத்தின் ட்ரீட்மென்ட் என்ன’ என்று கடைசி வரை குழப்பமாகவே இருக்கிறது.

சிவகார்த்திகேயன் - ஆத்மியா காதலில் எந்த அழுத்தமும் இல்லை. தங்கை ஆத்மியா மீதான அண்ணன்களின் பாசத்தில் எந்த உயிர்ப்பும் இல்லை. தங்கையைத் தேடும் அண்ணன்களின்

சினிமா விமர்சனம் : மனம் கொத்திப் பறவை

முயற்சியில் எந்த லாஜிக்கும் இல்லை. காமெடி கதைக்கு லாஜிக் பார்க்கக் கூடாதுதான். அதற்காக லாஜிக்கே பார்க்கக் கூடாதா என்ன? ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, பின்னணி இசை எல்லாமே ஓ.கே. ரகம்தான். ஆனால், இமான் - யுகபாரதி பாடல்கள் ஆடியோவில் கேட்க, அத்தனை இன்பம் என்பது நிஜம்.

'இந்தியாவில் எங்கே இருந்தாலும் உன் பொண்ணைக் கண்டுபிடிச்சுக் கூட்டிட்டு வர்றேன்’ என்கிறாரே ஒரு தாத்தா... 'அவன் உலகத்துல எங்கே இருந்தாலும் கொல்லாம விட மாட்டேன்’ என்று சபதம் போட்டுக் கிளம்புகிறாரே ஒரு ரௌடி மாப்பிள்ளை... அவங்கள்லாம் எங்கே சார்?

மேக்கிங்கில் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால், இன்னும் அழகாக, ஆழமாக மனம் கொத்தியிருக்கும் பறவை!