எஸ்.கலீல்ராஜாபடம் : பொன். காசிராஜன்
##~## |
அல்லு அர்ஜுன்... திருமணத்துக்குப் பிறகும் சார் ஸ்க்ரீனில் வரும்போது விசில் அடித்து தியேட்டர்களை அதிரச்செய்கிறார்கள் ஆந்திர யுவதிகள். தெலுங்கு சினிமாவில் பெரிய ஓப்பனிங் வைத்திருக்கும் சாக்லேட் ஹீரோ... டான்ஸ் ஆடுவதில் இன்னொரு சிம்பு... சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண் தேஜாவுக்குச் சொந்தக்காரர்... சென்னையில் சிம்புவோடு டான்ஸ் ஆடிக்கொண்டு இருந்தார். 'செவன் -அப்’ நடத்திய 'டான்ஸ் ஃபார் மீ’ நிகழ்ச்சிக்கு வந்திருந்தவரைச் சந்தித்தேன். திக்கித் திணறினாலும் தமிழ் பேசுகிறார்.
''சிம்புவோட செம செட் சேர்ந் துட்டீங்கபோல...''
''சிம்பு எனக்குப் பல வருஷ ஃப்ரெண்ட். டான்ஸ் எங்க ரெண்டு பேருக்கும் செட் ஆகிற வேவ்லெங்த். அதுதான் இந்தப் போட்டியிலும் எங்களை இணைச்சிருக்கு. 'டான்ஸ்ல நீ பெஸ்ட்டா... நான் பெஸ்ட்டா?’னு நாங்க ரெண்டு பேரும் போட்டி போட்டுட்டு இருக்க, இங்கே வந்த பல பசங்க எங்களை

ஜஸ்ட் லைக் தட் தூக்கிச் சாப்பிடுறாங்க. ரெண்டாவது இடம் பிடிச்ச டீமைப் பார்த்துட்டு சிம்பு செம ஃபீல் ஆகிட்டான். 'அவங்களும்நல்லாத் தான் பண்ணாங்க. சின்ன மிஸ்டேக்ல மிஸ் பண்ணிட்டாங்களே’னு புலம்பினான். போட்டின்னா ஒருத்தர்தானே ஜெயிக்க முடியும். அந்த அளவுக்குப் பின்னிட்டாங்க. இதுபோல நானும் சிம்புவும் அடிக்கடி போன்ல பேசிப்போம். என் படம் ரிலீஸ் ஆனதுமே பார்த்துட்டு போன் பண்ணுவான். நானும் அவன் படங்களைப் பார்த் துட்டு கமென்ட் அடிப் பேன். நான் நடிச்சதுல சிம்புவுக்கு 'ஆர்யா 2’ ரொம்பப் பிடிக்கும். எனக்கு அவனோட 'மன்மதன்’ பிடிக்கும். பேச எதுவும் விஷயம் இல்லைன்னா, நம்ம ஹீரோயின் களைப் பத்திப் பேசிட்டு இருப்போம்!''
''ஹை... இது நல்லா இருக்கே. ஹீரோயின்களைப் பத்தி அப்படி என்னதான் பேசுவீங்க?''
''ஹா...ஹா! அது எனக்கும் சிம்புவுக்கும் மட்டுமான ரகசியம். எனக்குக் கல்யாணம் ஆகிருச்சு. வீட்ல டின் கட்டிருவாங்க. சிம்பு பேச்சுலர்தானே. அவர்கிட்டயே நைஸா கேட்டுத் தெரிஞ்சுக்கங்க!''
''உங்க செட் ராம் சரண் தேஜாவோட நீங்க சேர்ந்து நடிக்கிற 'யெவடு’ படத்துக்குப் பயங்கர எதிர்பார்ப்புபோல?''
''நல்ல விஷயம்தானே! 'யெவடு’ படத்தில் ராம் சரண் தேஜாதான் ஹீரோ. எனக்கு அதுல சும்மா கெஸ்ட் ரோல்தான். ஆனா, பவர்ஃபுல் ரோல். ராம் சரணோட நடிக்கிறது எனக்குப் பிடிச்சிருக்கு. அந்தப் படம் இங்கிலீஷ் 'ஃபேஸ் ஆஃப்’ படத்தோட ரீ-மேக்னு சொல்றாங்க. அதுல இருந்து ஒன் லைன் எடுத்திருக்கோம். அப்படியே உட்டாலக்கடி அடிக்கலை!''

''தமிழ்ல உங்களுக்குப் பிடிச்ச டைரக்டர் யார்?''
''தமிழ்ல ஒவ்வொரு டைரக்டரும் ஒவ்வொரு ஸ்டைல். இப்போ நான் பார்த் ததுல 'மங்காத்தா’, 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ ரொம்பப் பிடிச்சது. இப்ப உடனே நான் தமிழ்ப் படம் பண்ணணும்னா, என் சாய்ஸ் 'ஓ.கே... ஓ.கே’ ராஜேஷ்தான். சான்ஸே இல்லை. அவ்வளவு காமெடி ஸ்க்ரிப்ட் அது!''
''தெலுங்கு சினிமா ஹீரோக்கள்ல மகேஷ் பாபுவை தமிழ்நாட்டுல நல்லாத் தெரியும். ராம் சரண் தேஜா 'மகதீரா’ ரீ-மேக் மூலமா தமிழ் பேசிட்டார். நீங்க எப்போ வரப்போறீங்க?''
''டப்பிங் மூலமா ஒரு மாநில மக்களிடம் அறிமுகம் ஆவது எனக்குப் பிடிக்காது. நேரடியா இறங்கணும். அதான் என் படங்களை தமிழ்ல டப்பிங்கூடப் பண்ண வேண்டாம்னு சொல்லிட்டேன். சீக்கிரமே நேரடிப் படம் மூலமா தமிழுக்கு வருவேன்!''
''த்ரிஷா உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்னு சொல்றாங்க... அவங்க யாரை லவ் பண்றேன்னு உங்ககிட்டயாச்சும் சொல்லியிருக்காங்களா?''
''நான் டென்த் படிக்கும்போது இருந்தே த்ரிஷாவை எனக்கு நல்லாத் தெரியும். அதனால எனக்கு எப்போ த்ரிஷாவைப் பார்த்தாலும் ஒரு ஹீரோயின் மாதிரியே தெரியாது. க்ளோஸ் ஃப்ரெண்ட்கிட்ட ஜாலியா பேசிட்டு இருக்கிற மாதிரியே இருக்கும். எனக்குத் தெரிஞ்சு அவ செமத் தியா ஊர் சுத்துவா. எல்லாரோடயும் நான்-ஸ்டாப்பா அரட்டை அடிப்பா. மத்தபடி காதல் கமிட்மென்ட்னு மாட்டிப்பானு எனக்குத் தோணலை!''

''தமிழ் ஹீரோயின்கள்ல வேற யார் உங்க பெஸ்ட் ஃப்ரெண்ட்?''
''நிறைய இருக்காங்க. ஆனா, ப்ரியாமணிதான் பெஸ்ட். ஃப்ரெண்ட்ஷிப்ல அவளை மாதிரி புரிஞ்சு நடந்துக்கிற ஒரு பொண்ணு இருப்பாளாங்கிறது சந்தேகம் தான்!''
''அரசியல் ஆர்வம் உண்டா?''
''சிரஞ்சீவி அங்கிள் அரசியல்ல இருக் கார். சினிமா, அரசியல் ரெண்டிலும் அவர்தான் எனக்கு குரு. அவர் எந்த சைடு போனாலும் நான் அவரை சப்போர்ட் பண்ணுவேன். அவ்வளவுதான்!''