Published:Updated:

தண்ணீர் தேவதையின் தமிழ்நாட்டுக் காதல்!

ம.கா.செந்தில்குமார்படம் : பொன். காசிராஜன்

தண்ணீர் தேவதையின் தமிழ்நாட்டுக் காதல்!

ம.கா.செந்தில்குமார்படம் : பொன். காசிராஜன்

Published:Updated:
##~##

ப்ரணிதா என்றால், பரிசுத்தமான நீர் என்று அர்த்தமாம். ம்... 'காவேரி தண்ணீர்’ தராத கர்நாடகத்தின் பொண்ணு.

 ''நான் ப்ரணிதா சுபாஷ்... வீட்ல ஒரே பொண்ணு. அப்பா, அம்மா ரெண்டு பேருமே டாக்டர்ஸ். என்னையும் டாக்டருக்குப் படிக்கச் சொல்லி பயங்கர பிரஷர். ஆனா, எனக்கு பயலாஜின்னாலே அலர்ஜி. 'போக்கிரி’ படத்தின் கன்னட ரீ-மேக்கில் நடிக்கக் கூப்பிட்டாங்க. அப்பா ரொம்பவே யோசிச்சார். நான் அடம்பிடிக்கவும், 'இந்த ஒரே ஒரு படம்தான்’கிற கண்டிஷனோட அனுமதிச்சார். ஆனா, ஷூட்டிங் ஸ்பாட் வந்தவருக்கு சினிமா ரொம்பப் பிடிச்சுப்போக, பயாலஜியில் இருந்து நான் எஸ்ஸ்ஸ்கேப். கன்னடத்தில் 'போக்கிரி’, தெலுங்கில் 'பவா’, இப்போ தமிழ்ல 'சகுனி’!''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''கார்த்தி, சந்தானத்துக்கே பயங்கர கெமிஸ்ட்ரி இருக்கும். இதுல உங்களுக்குப் படத்துல என்ன ஸ்கோப் இருக்கும்?''

தண்ணீர் தேவதையின் தமிழ்நாட்டுக் காதல்!

''அது என்னவோ உண்மைதான். ஸ்பாட்ல ரெண்டு பேரும் பண்ற சேட்டை தாங்காது. கார்த்தி ரொம்ப ஃப்ரெண்ட்லி. எனக்கு மட்டும் இல்லை... செட்ல இருக்கிற எல்லாருக்கும்தான். இந்த சந்தானத்தைத் தான் என்ன பண்றதுன்னே தெரியலை. செட்ல என்ட்ரி கொடுத்தாலே, சிரிக்கவெச்சிடுவார். எனக்குத் தமிழ் தெரியாதுன்னு நினைச் சுட்டு இங்கிலீஷ் வார்த்தைகளைத் தேடிப் பிடிச்சு உடைச்சு உடைச்சுப் பேசிட்டு இருந்தார். அப்புறம் எனக்குத் தமிழ் தெரி யும்னு தெரிஞ்சதும் பயங்கரமா டென்ஷனா கிட்டார். 'ஏம்மா, இதை முன்னாடியே சொல்லி யிருந்தா, நான் இவ்ளோ நாளும் கஷ்டப்பட்டு இருக்க மாட்டேன்ல’னு பத்து நிமிஷம் விடாம டயலாக் பேசினார். அவர் சொன்னதில் இதுதான் பெஸ்ட் ஜோக்னு சொல்ல முடியாத அளவுக்கு எக்கச் சக்க ஜோக்ஸ்!''

''தமிழ்நாடு பழகிருச்சா?''

''ரொம்ப! சென்னைல எங்கே இருந்தாலும் பத்து நிமிஷத்துல பீச்சுக்குப் போக முடியிறது ரொம்ப ரொம்பப் பிடிச்சிருக்கு. அப்புறம் 'ரங்கநாதன் ஸ்ட்ரீட் ரொம்பப் பிடிச்சிருக்கு’. அங்கே உள்ளவங்க எந்த அளவுக்கு ஹார்டு வொர்க் பண்றாங்க... சான்ஸே இல்லை! அப்புறம் அயிட்டம் ஸாங்கை தமிழ் ரசிகர்கள் ரசிச்சு ஆடிக் கொண்டாடுறது பிடிக்குது. சிம்பிளா... ஐ லவ் தமிழ்நாடு. போதுமா?

''தமிழ்ல 'உதயன்’னு ஒரு படம் பண்ணீங்களே... மறந்துட்டீங்களா?''

'' 'உதயன்’ நல்ல படம்தான். ஆனா, பெருசா போகலை. ஆனா, எனக்கு அருள்நிதினு ஒரு நல்ல ஃப்ரெண்ட்

தண்ணீர் தேவதையின் தமிழ்நாட்டுக் காதல்!

கிடைச்சார். அருள்நிதி நடிச்ச 'மௌனகுரு’ பார்த்துட்டு அவருக்கு விஷ் பண்ணேன். எனக்கு 'சகுனி’ சான்ஸ் கிடைச்சதும் அவர் போன் பண்ணி சந்தானம் மாதிரி, 'நீலாம் நல்லா வருவேம்மா... நல்லா வருவே’னு கலாய்ச்சார்!''

''நடிகைகள்ல யாரும் அப்படி நல்ல ஃப்ரெண்ட் இருக்காங்களா உங்களுக்கு?''

''ஸ்ருதிஹாசனை ஒரு ஃபங்ஷன்ல சந்திச்சேன். பல விஷயம் ஷேர் பண்ணிக்கிட்டாங்க. எனக்கு அவங்க வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும். அவங்க அப்பா மாதிரியே ஸ்ருதி இன்டெலி ஜென்ட்னு சொல்வாங்க. அன்னைக்கு அதை நானே நேர்ல ஃபீல் பண்ணேன்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism