Published:Updated:

இது... 15வருடப் போராட்டம்!

ஆர்.சரண், படங்கள் : ஆ.முத்துக்குமார்

இது... 15வருடப் போராட்டம்!

ஆர்.சரண், படங்கள் : ஆ.முத்துக்குமார்

Published:Updated:
##~##

செம குஷியாக இருக்கிறார் அருண் விஜய். 'தடையறத் தாக்க’ மூலம் எல்லாத் தரப்பு ரசிகர்களிட மும் சென்று சேர்ந்த திருப்தி முகத்தில்.

''இந்த சந்தோஷத்தை வர்ணிக்க வார்த்தையே இல்லை சார். படம் பார்த் துட்டு அப்பா ரொம்ப ஆச்சர்யப்பட்டார். என்னோட செல்போன் ரிங் ஆகிட்டே இருக்கு. பாக்யராஜ் சார் போன் பண்ணி, 'நல்லா நடிச்சிருக்கேப்பா’னு சொன்னார். எல்லோரும் பாராட்டுறாங்க. ரொம்ப நெருக்கமான ஒரு நண்பர் மட்டும், 'அருண்... இது டைரக்டர் மூவி. உனக்கு இந்த மாதிரி படங்கள்தான் ஃபிட் ஆகுது. இது மாதிரியான கேரக்டர்களையே செலெக்ட் பண்ணி நடி’னு சொன்னார். எனக்கு அதுதான் கரெக்ட்னு படுது. அதனால இந்த வெற்றியை நான் என் தலைக்கு ஏத்திக்கலை. இனி, இன்னும் கவனமாப் பண்ணுவேன்'' - அருண் விஜயின் ஒவ்வொரு வார்த்தையிலும் அவ்வளவு பக்குவம்.

''இந்தப் படத்துக்காக எப்படி எல்லாம் மெனக்கெட்டீங்க?''

இது... 15வருடப் போராட்டம்!

''நிறைய. குறிப்பா, ஒரே வாரத்துல லெஃப்ட் ஹேண்ட் பழக்கத்துக்கு மாறினதைச் சொல்லலாம். சண்டைக் காட்சிகள்ல ரொம்பவே மெனக்கெட்டு இருக்கேன் சார். க்ளைமாக்ஸ் சண்டைக்காக நானும் அந்த வில்லன் நடிகரும் நிஜமாவே மோதினோம். எனக்கு சினிமா டெக்னிக் தெரியும்கிறதால அவரை அடிக்கிற மாதிரி பாவ்லா பண்ணி னேன். ஆனா, அவர் என்னை அடிச்ச அடிகள் எல்லாமே நிஜம். அப்போ சிந்தின ரத்தமும் வியர்வையும்தான் இப்போ கைத் தட்டல்களா மாறி இருக்கு.''

''உங்களுக்குப் பின்னாடி நடிக்க வந்தவங்க எங்கேயோ போய்ட்டாங்க. நீங்க அதை நினைச்சு எப்பவாச்சும் வருத்தப்பட்டது உண்டா?''

''நிறைய நேரங்கள்ல மனசு உடைஞ்சு போயிருக்கேன் சார். ஒட்டுமொத்தக் குடும்பமும் என் வெற்றிக்காக இவ்வளவு சிரமப்படுறாங்களே... இவங்களுக்காக நாம என்ன செஞ்சிருக்கோம்னு மனசுக்குள்ள தவிச்சிருக்கேன். மாமனார்கூட சொந்தமாப் படம் தயாரிச்சு என்னை நிலைநிறுத்த முயற்சி பண்றார். நாம பண்ணுறது சரியானு பல நேரங்கள்ல கேள்வி வரும். இதுக்காகவே கடுமையா உழைக்கணும்னு நினைப்பேன். இப்போ எனக்கு 34 வயசு. 19 வயசுல முதல் படம் 'முறை மாப்பிள்ளை’ பண்ணினேன். அன்னைக்கு இருந்து இன்னைக்கு வரைக்கும் உடற்பயிற்சி செய்றதை ஒரு நாள்கூட நிறுத்தினது இல்லை. கிட்டத்தட்ட மனசும் உடம்பும் இறுகிப்போய்க் கிடந்தேன். ரஜினி சார்கூட அப்பாவிடம், 'அவனைக் கவனிங்க விஜயகுமார்’னு சொல்வாராம். அப்பாவுக்கு நான் நானாகவே

இது... 15வருடப் போராட்டம்!

உருவாகிக் காட்டணும்னு ஆசை. என் மேல் எல்லோருமே அனுதாபப்பட் டாங்க. ஆனா, வாய்ப்புகள் தர யோசிப்பாங்க. எனக்கு வருத்தமா இருக்கும். நடிப்பைத் தவிர எதுவுமே எனக்குத் தெரியாது. 'உனக்கு நடிப்பு எல்லாம் சரிப்பட்டு வராதுப்பா. ஏதாச்சும் பிசினஸ் பண்ணு!’னு அப்பா சொல்லிடுவாரோனு பயந்துட்டே இருப்பேன். அப்படிச் சொல்லி இருந்தா, நான் காணாமலே போயிருப்பேன் சார். ஏன்னா, சினிமாவைத் தவிர எனக்கு எதுவுமே தெரியாது. இப்போ இந்த வெற்றியால் ஒட்டுமொத்தக் குடும்பமும் சந்தோஷத்தை உணர்றோம். மகிழ் திருமேனிக்கு என் நன்றி.''

''சினிமாவில் உங்களுக்கு யார்லாம் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்?’'

''இப்போ இருக்கிற யங்ஸ்டர்ஸ் எல்லாரும் திக் ஃப்ரெண்ட்ஸா இருக்கோம். சூர்யா சார் தான் என்கூடப் பிறக்காத அண்ணன் மாதிரி. மனசுக்குக் கஷ்டமா இருக்கிறப்போ, அவரை நினைச்சுப் பார்த்துப்பேன். அவரை நினைச்சாலே அவ்ளோ உற்சாகமா ஆகிடுவேன். தன்னம்பிக்கைன்னா சூர்யா சார்தான். லயோலால அவர் எனக்கு சீனியர். ஆனாலும், சினிமால அவருக்கு நான் ரெண்டு வருஷம் சீனியர். நாங்கள்லாம் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் கிளாஸுக்கு ஒண்ணாப் போவோம். ரொம்ப ஜாலியா இருக்கும். ரொம்ப சாதுவா வகுப்புகளுக்கு வருவார். அப்போ பார்த்த சூர்யாவா இதுனு எனக்கே ஆச்சர்யமா இருக்கு. ஜிம்ல ரொம்பக் கஷ்டப்படுவார். இந்த உயரத்துக்காகத் தன்னை எந்த அளவுக்கு வருத்திக்கிட்டார்னு எனக்குத்தான் தெரியும். அதேபோல, அஜீத் சார். எங்கே பார்த்தாலும், 'அருண், நீ ஆன்ட்டி ஹீரோ ரோல் ட்ரை பண்ணு... அது உன் நடிப்பை மக்கள்கிட்ட ஈஸியா கொண்டுசேர்க்கும்’னு சொல்வார்.''

''உங்க தங்கை வனிதாவுடனான பிரச்னை என்ன ஆச்சு? இப்போ அவங்களோட பேசுவீங்களா?''

''இன்னும் பேசலை சார். சில விஷயங்களை நான் மறக்கணும். அஞ்சு விரல்களும் ஒண்ணுபோல இருக்கிறதில்லை. அப்பாதான் பாவம். மனசு உடைஞ்சுபோய் இருந்தார். ஒருத்தரோட செயல்கள் ஒட்டுமொத்தக் குடும்பத்தையும் பாதிக்குதுங்கிறதுக்கு இந்த விஷயம்தான் உதா ரணம். எல்லாம் சரியாகிட்டு வருது. இனிமேலாவது நல்லதே நடக்கும்னு நம்புறேன்!''