Published:Updated:

சிங்கப்பூரில் சில்க்!

சரண்

சிங்கப்பூரில் சில்க்!

சரண்

Published:Updated:
##~##

சிங்கப்பூரில் கலகலவென செம கலக் கலாக நடந்து முடிந்திருக்கிறது 13-வது ஐ.ஐ.எஃப்.ஐ. (International Indian Film Academy Awards) விருது வழங்கும் விழா. ஹைலைட்ஸ் டிட் பிட்ஸ்...

 சோயா அக்தரின் இயக்கத்தில் உருவான 'ஸிந்தகி நா மிலேகே டோபாரா’தான் சிறந்த படம். சிறந்த டைரக்டர், சிறந்த கதை, சிறந்த துணை நடிகர் என விருதுகளை வாரிக் குவித்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சிறந்த நடிகருக்கான விருதினை 'ராக் ஸ்டார்’ படத்தில் லட்சியத் தாகம்கொண்ட பாடகர் கேரக்டரில் கவனம் ஈர்த்த ரன்பீர் கபூர் பெற்றார். அமிதாப், ஷாரூக், சல்மான், ஹ்ரித்திக் எனப் பெருந்தலைகளைப் பின்னுக்குத் தள்ளி இந்த விருதை எட்டிப் பிடித்த ரன்பீர், 'அமிதாப்ஜிதான் இந்த விருதுக்கு உரியவர்’ என அந்த விருதை  அமிதாப்பிடம் கொடுக்க, நெகிழ்ந்துபோன அமிதாப் பதிலுக்குக் கட்டி அணைத்து, 'நீதான் ரியல் ராக் ஸ்டார்’ என அதை அவருக்கே பரிசளிக்க... ஜாலி ஹோலி கொண்டாடியது மொத்த ஏரியாவும்.

சிங்கப்பூரில் சில்க்!

ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கம்போல இறைவனுக்கு எல்லாப் புகழையும் சொல்லி 'ராக் ஸ்டார்’ படத்துக்காக சிறந்த இசையமைப் பாளர் விருதினைத் தட்டிச் சென்றார்.

சிறந்த நடிகை யாராக இருக்கக் கூடும்? யெஸ்! 'டர்ட்டி பிக்சர்’ படத்துக்காக வித்யா பாலன் அந்த விருதைத் தட்டிச் சென்றார். 'சில்க்குக்கு இந்த விருதினைச் சமர்ப்பிக்கி றேன்’எனநெகிழ்ந்து சொன்னார் வித்யா.

செல்லம் பிரகாஷ்ராஜுக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. இந்தி 'சிங்கம்’ படத்துக்காக சிறந்த வில்லன் விருதைப் பெற்றார். 'என் ஃபேவரைட் நடிகர்கள் நஸ்ருதீன் ஷா, பொமான் இரானி, இர்ஃபான் கானை எல்லாம் ஓவர் டேக் செய்து, இந்த விருது எனக்குக் கிடைத்திருப்து எனக்குப் பெருமை. அவர்களின் ஆசீர்வாதம் என்னை இந்தியிலும் வழிநடத்தும்’ என்று சிலிர்த்தார்.

விழாவில் கலந்துகொள்ள கமல்ஹாசனும் அவரது நண்பர் 'லார்ட் ஆஃப் த ரிங்ஸ்’ புகழ் பேரி ஆஸ்போர்னும் வந்திருந்தனர். 'விஸ்வரூபம்’ படத்தின் டிரெய்லரோடு ஓர் இனிப்பான செய்தியையும் விழாவில் சொல்லிச் சென்றார்கள். அது... கமல், ஆஸ்போர்னோடு கூட்டுத் தயாரிப்பில் இயக்கி நடிக்கப் போகும் ஹாலிவுட் படம்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism