என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

சார்லஸ்

'சிரிக்க மட்டும்தான் தெரியுது பொண்ணுக்கு!’ என்று குவிகிறது கமென்ட்கள். ஆனால், 'வேட்டை மன்னன்’, 'சேட்டை’, 'சிங்கம்-2’ என்று அள்ளுகிறது வாய்ப்புகள். இன்றைய நிலவரப்படி கோலிவுட்டின் ஹிட் ஹாட் ஹீரோயின் ஹன்சிகா.

 ''உங்களை 'சின்ன குஷ்பு’னு சொல்லிட்டு இருக்கோம். ஆனா, நீங்க பாட்டுக்கு 'ஸ்லிம் ஆகப்போறேன்’னு ட்ரீட்மென்ட்டுக்கு அமெரிக்கா போறீங்களாம்... உண்மையா?''

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

''ரொம்ப ஸாரி! நான் ஸ்லிம் ஆக ட்ரை பண்றேங்கிறது உண்மைதான். ஆனா, அதுக்கு அமெரிக்கா போகலை. அண்ணா நகர்ல வாக்கிங் போனாலே, நான் ஸ்லிம் ஆகிடுவேன். அதுவும் இப்போ ஆக்ஷன், டான்ஸ்னு ஓடிக்கிட்டே இருக்கேன். அது போல ஜாகிங், யோகான்னும் வெயிட் குறைச்சுட்டு இருக் கேன்.''

''சந்தானம் உங்களுக்கு ஏஞ்சலினா ஜோலினு பெட் நேம் வெச்சிருக்காராமே?''

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

''உங்க வரைக்கும் வந்திருச்சா அந்தப் பேரு? என்னைக் கலாய்ச்சுட்டு இருக்கிறதே அவர் வேலையாப்போச்சு. 'வேலாயுதம்’ படத்துல இருந்தே அவர் என்னைக் கிண்டலடிச்சுட்டே இருக்கார். நான் ரொம்ப வெள்ளையா இருக்கிறதால, 'ஏஞ்சலினா ஜோலி’யாம். பதிலுக்கு நான் அவரைக் கலாய்க்க தமிழ்ல வார்த்தை கேட்டேன். 'அரசன்’னு சொன்னாங்க. அது ஏதோ இடியட் மாதிரியாமே... இப்போலாம் நான் அவரை 'அரசன் சந்தானம்... அரசன் சந்தானம்’னுதான் கூப்பிடுறேன்.''

''சூர்யா, சிம்பு, ஆர்யானு எல்லார் படத்துலயும் ஒரே நேரத்துல ஹீரோயின். எப்படிச் சமாளிக்கிறீங்க?''

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

''ரொம்பத்தான் கஷ்டமா இருக்கு. 'வேட்டை மன்னன்’ படத்துல லேடி கேங்ஸ்டர் மாதிரி வரணும். 'வாலு’ படத்துல செம பப்ளி கேரக்டர். 'சிங்கம்-2’ல என்னன்னு இன்னும் சஸ்பென்ஸா இருக்கு. 'சேட்டை’ படத்துல செம ஃப்ரீக்கி பொண்ணு. ரொம்ப போல்டா நடிக்கணும். சும்மா வந்து சிரிச்சுட்டுப் போக முடியாம, நிஜமாவே இப்போ ரொம்ப கஷ்டப்படுறேன். வீட்ல தினமும் ஹோம் வொர்க்தான்.''  

''பிரபுதேவா - நயன்தாரா பிரிஞ்சிட்டாங்களாமே?''

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

''ஹலோ, இந்தக் கேள்வியை ஏன் என்கிட்ட கேட்குறீங்க?''

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

''செம இன்டெலிஜென்ட் நீங்க... தொடர்ந்து தமிழ்ப் படங்கள்லதானே நடிக்கிறீங்க? ஏன் தமிழ் கத்துக்கலை?''

தமிழகத்தின் ஏஞ்சலினா ஜோலி!

''இப்பத்தான் ஒரு தமிழ் டீச்சர் வெச்சிருக்கேன். ஷூட்டிங் ஸ்பாட்ல நான் தமிழ்லயே பேசத்தான் டிரை பண்றேன். ஆனா, நான் பேசுற தமிழைக் கேட்டு எல்லாரும் சிரிக்கிறாங்க. டைரக்டர் டென்ஷனா இருந்தா என்னைப் போய் அவர்கிட்ட தமிழ்ல பேசச் சொல்றாங்க. அதனால நான் நல்லா தமிழ் கத்துக்கிட்டுத்தான் இனி தமிழ் பேசணும்னு முடிவு பண்ணியிருக்கேன்.''

 ''குடும்பப் பின்னணி சொல்ல மாட்டீங்களா?''

''சொல்லலாம்... அப்பா, அம்மா, நான் தம்பி. அப்பா - அம்மா சேர்ந்து இல்லை. நான்தான் அம்மாவையும் தம்பியையும் பார்த்துக்கணும். அதனாலதான் ரொம்ப சின்ன வயசுலயே நடிக்க வந்துட்டேன். இன்னும் நிறைய நடிக்கணும். அவங்களை ரொம்ப நல்லாப் பார்த்துக்கணும்.''