என் விகடன் - திருச்சி
என் விகடன் - சென்னை
என் விகடன் - கோவை
என் விகடன் - மதுரை
என் விகடன் - புதுச்சேரி
Published:Updated:

டபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்!

கோச்சடையான் அப்டேட்எம்.குணா

தனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால், ரஜினியின் 'கோச்சடையான்’ கதை... மதுரைக்கு அருகில் இருக்கும் 'கோச்சடையான்’ சாமியின் கதை அல்ல!   படம் முழுக்க முழுக்க ரஜினிக்குத் தீனி போடும் விறுவிறு... திகுதிகு திரைக்கதை... அதுவும் இரண்டு ரஜினி!

டபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்!

  கடவுள் கதை இல்லையே தவிர, முழுக்கவே ஃபேன்டஸி கதை. அப்பா, மகன் என இரண்டு வேடங்கள் ரஜினிக்கு. சீனியர் ரஜினி, நாசர், ஜாக்கி ஷெராஃப் என மூன்று மன்னர்கள். அவர் களின் வாரிசுகள்தான் ஜூனியர் ரஜினி, சரத்குமார், ஆதி ஆகியோர். சீனியர் ரஜினியோடு ஜாக்கி மோத, ஜூனியரோடு மோதுகிறார் ஜாக்கியின் வாரிசான ஆதி. இதுவரை படம் பிடித்த காட்சிகளைத் திரையில் பார்த்த ரஜினி வெரி ஹேப்பி. அனிமேஷன் ரஜினி வருவார் என்ற யூகத் துக்கு இடம் இல்லை. அமெரிக்காவில் இருந்து வந்திருக்கும் அனிமேஷன் நிபுணர் கள், ஃபேஸ் கேப்ச்சர் டெக்னாலஜி மூலம் ரஜினியைப் படம் பிடித்த காட்சி களைப் போட்டுப் பார்த்தால், 'சிவாஜி’, 'எந்திரன்’ படங்களைக் காட்டிலும் கோச் சடையானில் பொலிவாக இருக்கிறாராம் ரஜினி.

டபுள் ரஜினி... ட்ரிபிள் திகில்!

படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டது. ஹாங்காங், லண்டன், சென்னை என மூன்று இடங்களில் படத்துக்கு கிராஃபிக்ஸ் வேலைகள் மூலம் மிரட்டல் திகில் சேர்த்துவருகிறார்கள். கிட்டத்தட்ட 120 டெக்னீஷியன்கள் தினமும் இரவு பகலாக கோச்சடையானைச் செதுக்கும் பணியில் இருக்கிறார்கள். தீபாவளி தாண்டி 2012-ன் இறுதியில்தான் படம் திரையைத் தொடுமாம்!