Published:Updated:

சினிமா விமர்சனம் : சகுனி

விகடன் விமர்சனக் குழு

சினிமா விமர்சனம் : சகுனி

விகடன் விமர்சனக் குழு

Published:Updated:
##~##

ரசியல் சதுரங்கத்தில் சிப்பாயாக நுழைந்து ராஜாவை வீழ்த்தும் சகுனி!

 ரயில்வே பால வேலைகளுக்காக  இடிக்கப்படுவதில் இருந்து தங்களது காரைக்குடி பூர்வீக வீட்டைக் காப்பாற்ற சென்னை வருகிறார் கார்த்தி. வாக்கு கேட்டு தங்கள் வீட்டுக்கு வந்தபோது இனிமையாகப் பேசிய முதல்வர் பிரகாஷ்ராஜ், இப்போது அவமானப்படுத்துகிறார். இது போதாதா.... கார்த்தி பொங்கியெழுகிறார்... புது சரித்திரம் படைக்கிறார்!  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சகுனி என்கிற மகாபாரத நெகட்டிவ் கதாபாத்திரத்தின் சுவாரஸ்ய நாடி பிடித்துக்  களம் இறங்கி இருக்கிறார் அறிமுக இயக்குநர் சங்கர் தயாள். அரசியல் சிபாரிசு களுக்கு ரூட் பிடிக்கும் 'ஏழு கடல்... ஏழு மலை’ பிரயத்தனங்கள், 'ரஜினி’க்கு 'கமல்’ கதை சொல்லும் அத்தியாயம், பீடி சாமியார் கோடி சாமியார் ஆகும் லாஜிக் என ஆங்காங்கே ரசிக்கவைக்கும் சகுனிக்கு அரசியல் பரமபதத்தில்தான் தாயமே சிக்கவில்லை!

சினிமா விமர்சனம் : சகுனி

ஹீரோயிசம், பஞ்ச் எதுவும் இல்லாமல் தரை டிக்கெட் வரை இறங்கி அடித்திருக்கிறார் கார்த்தி. பாமாயில் பஜ்ஜி சாப்பிடு வதும் நீதிமன்றத்தில் 'உச்சா’ தண்டனைக்கு நியாயம் கேட்பதுமாகக் கலகலக்கவைக் கிறார். ஆனால், சாணக்கியத் தனம் டிமாண்ட் செய்யும் பின் பாதியில் அசட்டுச் சிரிப்பு, சைடு பார்வை மட்டுமே கை கொடுக்க வில்லையே கார்த்தி?

'கதைக்குள்ள கதை சொல்லாதீங்க கமல்... குழப்புது!’, 'ஓ... ஒண்ணுக்கு கேஸ்ல வந்தவன்கிறதால ஒண்ணுக்குள்ள ஒண்ணு ஆயிட்டீங்களோ?’ என்று 'ஆட்டோ’ சந்தானம் அடிக்கும் காமெடி சவாரிதான் சகுனியின் 'பவர் ப்ளே’ பட்டாசு. முன்பாதி முழுக்க விறுவிறுப்பு சேர்ப்பது கார்த்தி-சந்தானம் கெமிஸ்ட்ரி மட்டுமே.

இப்படியான கேரக்டர்களில் பிரகாஷ் ராஜ், கோட்டா சீனிவாச ராவ் ஆகியோர் முன்னரே தங்கள் 'பெஸ்ட்’ முத்திரையைப் பதித்துவிட்டதாலோ என்னவோ, ஜஸ்ட் கடந்து செல்கிறார்கள்.

பட்டர் மில்க் தேவதை ப்ரணீதாவுக்குப் பாடல் காட்சிகள் தவிர, சில இடங்களில் பரவச ஆச்சர்யம் காட்ட மட்டுமே ஸ்கோப். ராதிகா, ரோஜா, கிரண், ப்ரணீதா, சர்ப்ரைஸ் சர்க்கரைகள் அனுஷ்கா, ஆன்ட்ரியா என்று பல தலைமுறை ஹீரோயின்களில் கொஞ்சமே கொஞ்சம் ஸ்கோர் செய்வது ராதிகா மட்டுமே.

ஒரு முதல்வர் என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்குத் தமிழ்நாடே சாட்சி. ஆனால், பிரகாஷ்ராஜோ கார்த்தியிடம் இருந்து ஒரு ரயில் பால ஒப்பந்தத்தைக் காப்பாற்ற தோட்டம், மொட்டை மாடி என்று அல்லக்கைகளுடன் அலைந்து அலறிக் கொண்டே இருக்கிறார். ரஜினி-கமல் காமெடி முதலில் சுவாரஸ்யமாக இருந்தாலும், அதையே தொடர்வது... அலுப்பு ப்ளஸ் சலிப்பு. சீரியஸ்

சினிமா விமர்சனம் : சகுனி

பின்னணியை இவர்களே ஆரம்பத்தில் கலாய்த்திருப்பதால், பின்பாதி சீரியஸ் நிகழ்வுகளுக்குச் சிரிப்பதா... நம்புவதா என்று தெரியாமல் குழம்ப வேண்டி இருக்கிறது.

கார்த்தி வேட்டி கட்டினால், ராதிகா மேயர். அவர் கண்ணாடி அணிந்தால், கோட்டா முதல்வர்... இத்தனை ஈஸியா உங்க சகுனித்தனம்? சகுனியின் ஒரு காய் நகர்த்தலிலும் அரசியல் சாணக்யத்தனம் இல்லையே!    

ஜி.வி.பிரகாஷின் இசையில் 'வெள்ளை பம்பரம்...’ 'கந்தா கார வடை...’ பாடல்கள் முணுமுணுப்பு ரகம்!

காமெடியை வைத்தே கரை சேர்ந்துவிடலாம் என்று நினைத்திருக்கிறார் கள். ஆனால், பின்பாதியில் அதையும் மறந்து கோக்குமாக்காகத் தாயம் உருட்டி விட்டுட்டீங்களே சகுனி?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism