என் விகடன் - கோவை
என் விகடன் - புதுச்சேரி
என் விகடன் - திருச்சி
என் விகடன் - மதுரை
Published:Updated:

அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்!

அடித்துச் சொல்கிறார் விக்ரம்நா.கதிர்வேலன்

##~##

'தாண்டவம்’, 'ஐ’ என அடுத்த சீஸனுக்கு கியர்-அப் ஆகிவிட்டார் விக்ரம். தாண்ட வத்தைத் தாண்டியும் நீண்ட உரையாடல் களில் பளிச்சென மனம் திறந்தார் விக்ரம்...

   ''அதே 'தெய்வத் திருமகள்’ டீம். ஆனா, 'தாண்டவம்’ எப்படி வேற கலர் கொடுக்கும்?''

''எல்லாருக்கும் அதே ஆச்சர்யம்தான். அமலா பாலுக்குப் பதிலா ஏமி ஜாக்ஸன் வந்திருக்காங்க. அவ்வளவுதான்! ஆனா, அந்த ஆச்சர்ய மேஜிக் நடந்திருக்கு. எனக்கு போலீஸ் ஆபீஸர் கேரக்டர். அனுஷ்காவுக்கும் எனக்கும் க்ரீட்டிங் கார்டு காதல். ஏமிக்கு என் மேல பப்பி லவ். இதுக்கு நடுவுல சந்தானம் கொடுக்குற காமெடி மிக்ஸர். ரொம்ப ஸ்டைலிஷா வந்திருக்கு படம். 'தெய்வத் திருமகள்’ எடுத்த விஜய், 'தாண்டவம்’ மாதிரியும் படம் எடுப்பார்னு அவருக்கு நல்ல பேர் வரும். ரொம்ப அழகா என்னை ஃபேமிலி ஆடியன்ஸுக்குக் கொண்டுபோகும் இந்தத் 'தாண்டவம்’.''

'' 'அந்நியன்’ படத்துக்குப் பிறகு மறுபடியும் ஷங்கரோட கூட்டணி. 'ஐ’ என்ன மெசேஜ் சொல்லும்?''  

அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்!

'' 'அந்நியன்’ பண்ணும்போதுதான் 'ஷங்கர்... ஷங்கர்’னு எல்லாம் ஏன் பேசுறாங்கன்னு புரிஞ்சது. யோசிக்கிறதே ரொம்பப் பெரிசாதான் யோசிக்கிறார்.  'ஐ’ படத்துக்கு 'அந்நியன்’ படத்தைவிடப் பத்து மடங்கு  அதிகமா உழைக்க வேண்டி இருக்கும். நிறையப் புது விஷயங்கள் வெச்சிருக் கார் ஷங்கர். அவர் எதிர்பார்க்கிறதை நான் பண்ணிட்டா, என் கேரியருக்கே பெருமை சேர்க்குற படமா இருக்கும். கதையைக் கேட்டதுமே, 'ரொம்ப நல்லா ஒரு எபிக் மாதிரி இருக்கு’னு சொல்லியிருக்கார் ரஹ்மான். மணி சார், ஷங்கர், பாலா இவங்ககிட்டே எவ்வளவு படங்கள்னாலும் நடிச்சுக்கிட்டே இருக்கலாம். நிறையக் கத்துக்கிட்டே இருக்கலாம். இப்போ 'ஐ’ன்னு சொல்றீங்க. அநேகமா தலைப்பு மாறலாம்.''

''திடீர்னு 'டேவிட்’னு இந்திப் படம் வேற பண்றீங்க...''

'' 'சைத்தான்’ எடுத்த பிஜய் நம்பியார் டைரக்ட் பண்ற படம். ஒரே படத்தில் மூணு கதை. மூணிலும் 'டேவிட்’ கேரக்டர் வரும். எனக்கு அதில் மீனவன் கேரக்டர். ஒரு ஹீரோ எப்படிலாம் இருக்கக் கூடாதோ அப்படிலாம் இருப்பேன். அடிச்சுக்குவோம். சண்டை பிடிப்போம். திட்டுவாங்க. நானும் திட்டுவேன். 'ராவணன்’ல இந்தி பேசப் பயப்பட்டேன். 'எல்லாம் பண்றீங்க. ஆனா, இந்தி பேசும்போது மட்டும் கண்ல ஒரு சின்ன பயம் இருக்கு’னு மணி சார் சொன்னார். ஆனா, இந்தப் படத்தில் நான் இந்தி பேசுறதைப் பார்த்துட்டு கேமராமேன் ரத்னவேல் 'என்னடா இந்தியில பின்ற’னு மனசு வந்து பாராட்டினான்.''

அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்!

''தமிழில் குரோர்பதி ஷோவை நீங்கதான் பண்ணப்போறதா கிட்டத்தட்ட உறுதியாச்சு. அப்புறம் என்னாச்சு?''

''ஆமா. என்னைக் கூப்பிட்டது உண்மைதான். பண்ண லாம்னு நானும் ஆர்வமாத்தான் இருந்தேன். ஆனா, அப்புறம் நிதானமா யோசிச்சா, அது சரியா தோணலை. அதில் ஹிட்டானா, அந்த ஷோவுக்குத் தான் பேர் கிடைக்கும். இந்தியில் அமிதாப், ஷாரூக், அமீர்லாம் டி.வி-யில் பண்றது சகஜமா இருக்கு. ஆனா, இங்கே நம்ம முகத்தைத் தினம் பார்த்துட்டே இருந்தா, பழகிப்போய்டும். படத் துல நாம மட்டும் இருக்க மாட் டோம். மத்த நடிகர்கள், பாட்டு, மியூஸிக்னு எவ்வளவோ விஷயங் கள் இருக்கும். ஆனா, டி.வி-யில் ஒரு மணி நேரம் முழுக்க உங்களைச் சுத்தியே இருக்கும். நாம் முழுசா எக்ஸ்போஸ் ஆக வேண்டி இருக் கும். ஆறு மாசத்துக்கு ஒரு தடவை நம்ம படம் வரும்போது, 'அடடா... விக்ரம் நடிச்சிருக்கார்’னு ஆசையா பார்ப்பாங்க. தினம் நம்ம முகத்தைப் பார்த்துக்கிட்டே இருந்தா 'நாளைக்குப் பார்த்துக் கலாம்’னு போயிடுவாங்க. என் டி.வி. ஃப்ரெண்ட்ஸும் 'உங்க ளுக்கு இது வேண்டாம்’னு சொன்னாங்க. அவங்க சொன்ன தைக் கேட்டுக்கிட்டேன்.''

''ரஜினி, கமல்லாம் வேற லெவலுக்குப் போயிட்டாங்க. 'அடுத்த சூப்பர் ஸ்டார்’  ரேஸ்ல நீங்க, அஜீத், விஜய், சூர்யானு  கொஞ்சம் பேர்தான் இருக்கீங்க. இப்போ உங்க பிளான் என்ன?''

அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்!

''நான் என்னைக்கும்  ரேஸ்ல சேர்ந்ததும் கிடையாது. சேர்த்த தும் கிடையாது. 'ஹிட்’ முதலிடம் தரும். ஆனா, திறமைதான் நம்ம காலத்துக்கு அப்புறமும் நிக்கும். எனக்கு ஜெயிக்கணும்கிற வெறி யைவிட என் கேரக்டருக்கு லைஃப் கொடுக்கணும்கிற எண்ணம்தான் எப்பவும் மனசுல நிக்கும். நான் சினிமாவுக்குள்ள வரும்போதே வசந்தம் வரவேற்கலை. முதல் படம் ஹிட், அடுத்த படம் மெகா ஹிட்னுலாம் எந்த ஹிஸ்ட்ரியும் இல்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு படமும் போராடி வந்த வாழ்க்கை இது. போட்டின்னா எனக்கு நானேதான். ஷாரூக் கானை லண்டன்ல பார்த்தா, 'நீங்க எப்பவும் சூப்பர்’னு சொல்றார். அமீர் கான் என் படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கார். சஞ்சய் தத், 'இவரை மிஞ்சிக்க முடியாது’னு சொல்லியிருக்கார். 'ராவணன்’, எனக்கு வாங்கிக்கொடுத்த மரியாதை அது. 'ராஜபாட்டை’யில்கூட 'இந்தப் படத்துக்கு இவ்வளவு உடம்பை இரும்பாக்கி... தேவையா?’னு கேட்டாங்க. அந்தக் கதையில் ஓட்டை இருந்திருக்கலாம். கோட்டை விட்டிருக்கலாம். ஆனா, அதிலும் என் சின்சியர் உழைப்பு இருந்திருக்கு. சுசீந்திரன் மேலயும் தப்பு இல்லை. ஏதோ ஒண்ணு தவறிப்போச்சு. இதே முகத்தை வெச்சுக்கிட்டு எந்த ரிஸ்க்கும் எடுக்காம பத்துப் படங்களில் நடிக்க முடியும். அதுக்கான தெம்பு, சக்தி, தகுதி எல்லாம் எனக்கு இருக்கு. ஆனா, அது என் விருப்பம். இதே வேற யாரோ ஒரு ஹீரோ வெயிட் போட்டா 'அடடா’னு சொல்றாங்க. வேற நடிகர் நடிச்ச படமும் வந்ததால், 'இவர்தான் விருதெல்லாம் வாங்கிட்டாரே... அவருக்குக் கொடுங்க’னு சொல்றாங்க. அந்த மாதிரி சமயங்கள்லதான் எரிச்சலாகுது!''

'' 'தெய்வத் திருமகள்’ படத்துக்காக உங்களுக்குத் தேசிய விருது கிடைக்காத வருத்தமா இது?''

''இல்லாம இருக்குமா? ஆனா, ரசிகர்கள் கொடுத்த ஆதரவு போதும்னு இப்ப நினைக்கிறேன். முதல் விருதே விகடன் கொடுத்தது தானே? அதிலேயே மக்களோட பல்ஸ் தெரிஞ்சதே! இப்பவும் எங்கே போனாலும் 'நிலா எங்கே’னு கேட்கிறாங்க... அந்தச் சந்தோஷம் போதும்.''

''சிம்பு, தனுஷ், ஜீவா, ஆர்யா, கார்த்தின்னு அடுத்த செட் திகுதிகுன்னு வந்துட்டாங்க. அவங்களை எப்படிப் பார்க்குறீங்க?''

'' 'பாஸ்கரன்’ பட கேரக்டருக்கு ஆர்யா  செம ஃபிட். அப்படி அவர் லைவ்வா இருக்குறப்போ படம் முழுக்கவே ரசிக்கலாம்.ஜீவா 'கோ’ படத்தில் கச்சிதமாக மோல்டாகி வந்தார்.  சிம்பு எல்லாத்திலும் துடிப்பா இருக்கார். சினிமா மேல உண்மையாவே அவருக்கு ஆர்வம் அதிகம். என்ன, கொஞ்சம் அதிகமா வெளிப்படுகிறாரோனு தோணும். 'விண்ணைத் தாண்டி வருவாயா’ல்லாம் சான்ஸே இல்லை.  தனுஷ் தனியா ஒரு டிராக்கில் வந்துட்டு இருக்கார். எனக்கு கார்த்தியோட மேனரிசம், நடிப்பு,

அடுத்த நம்பிக்கை நட்சத்திரம் கார்த்திதான்!

சிரிப்பு எல்லாம் பிடிக்குது. புதுசா இருக்கு. என்னைக் கேட்டா அடுத்த நம்பிக்கை நட்சத்திரம்னு கார்த்தியைத்தான் சொல்வேன்.''

''உங்க பையன் துருவ் நெகுநெகுனு வளர்ந்துஇருப்பாரே... என்ன செய்யப்போறதா ஐடியா?''

''என்னை மாதிரியே இருக்கான்னு வீட்ல சொல்றாங்க. பேச்சு, பார்வை, நடை, மேனரிசம்னு எல்லாமே அப்படியே நான் தான். 'பசங்க’ படத்துலகூட நடிக்கக் கூப்பிட்டாங்க. நான்தான் இப்ப தேவை இல்லைனு சொல்லிட்டேன். படிக்கிற பருவத்தை மிஸ் பண்ணக் கூடாது என்பதும் ஒரு காரணம். துருவ் நிச்சயம் நடிகனாவோ,  டைரக்டராவோவருவான்னு தோணுது. நான் நடிக்க வந்தப்போ முதல் வரிசையும் இல்லாம கடைசி வரிசையும் இல்லாம இருந்தேன். நானே கையைக்  காலை ஊணி எழுந்திருச்சு நடந்தேன். ஆனா, துருவுக்கு அந்தக் கஷ்டம் இல்லை. அவனுக்கு என்ன வேணுமோ அந்தச் சுதந்திரம் இருக்கும். ஆனா, இப்ப படிக்கிறது மட்டும்தான் முக்கியம்னு சொல்லி இருக்கேன். துருவ் ஆர்வம் எதுவோ அதுல நிச்சயம் மாஸ்டர் ஆக்குவார் 'அப்பா ’ விக்ரம்.''