Published:Updated:

22 வயசு ஸ்ரீதேவி!

ஆர்.சரண்படங்கள் : சந்தோஷ்ராஜ்

22 வயசு ஸ்ரீதேவி!

ஆர்.சரண்படங்கள் : சந்தோஷ்ராஜ்

Published:Updated:
##~##

''கரெக்டா ஒரு வருஷம்... தமிழ்ல என் படம் ரிலீஸ் ஆகி, கம்ப்ளீட்டா ஒரு வருஷம் ஆச்சு!'' - தமன்னாவே ஆரம்பித்துவைத்தார் அரட்டையை. ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் விளம்பரப் படப்பிடிப்புக்காக சென்னை வந்திருந்தார் ஆந்திரவாசியாகிவிட்ட அழகி!    

 ''தமன்னா, இப்பவும் சென்னைப் பொண்ணுதான். சம்மர் வெகேஷனுக்கு ஆந்திராவுக்குப் போயிருக்கேன்னு நினைச்சுக்கங்க. சீக்கிரமே தமிழ்ப் படம் நடிக்கணும். போன வருஷம் மட்டும் தெலுங்கில் நான் நடிச்ச மூணு படம் ரிலீஸ் ஆகி இருக்கு.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஆனா, தமிழ்ல உங்களுக்குப் படமே இல்லைனு சொல்றாங்களே?''

''சின்ன லாஜிக் சொல்றேன்... மார்க்கெட் வேல்யூ இருக்கும் ஹீரோயினைத்தான் விளம்பரத்துல நடிக்கச் சொல்லிக் கேட்பாங்க. எனக்கு இப்பவும் தமிழ்நாட்டுல இருந்துதான் நிறைய நிறைய விளம்பர வாய்ப்புகள் வருது. அதுலயும் ரொம்ப செலெக்டிவ் ஆன விளம்பரங்களில் நடிக்கத்தான் நான் ஓ.கே. சொல்றேன். அதனால் எனக்கு மார்க்கெட் இல்லைனு நானே சொன்னாக்கூட நம்பாதீங்க!''

22 வயசு ஸ்ரீதேவி!

''அறிமுகமான புதுசுல 'சந்திரமுகி’ ஜோதிகா மாதிரி நடிக்கணும்னு எல்லாம் சொன்னீங்க. ஆனா, இத்தனை வருஷத்துக்கு அப்புறமும் 'ஸ்வீட் க்யூட் பொம்மை’யா மட்டும்தானே வந்துட்டுப் போறீங்க?''

''நீங்க சொல்ற 'ஸ்வீட் க்யூட் பொம்மை’யா வந்துட்டுப் போறதுக்கே இண்டஸ்ட்ரியில் 'ஹிட் ஹீரோயின்’ அடையாளம் அவசியம். ஒவ்வொரு படத்துலயும் ஒரு ஹீரோயின் பெர்ஃபார்ம் பண்ணிட்டே இருக்க முடியாது. ஆனா, இப்போ நான் இந்தியில் நடிக்கிற 'ஹிம்மத்வாலா’ படம் நிச்சயம் என் கேரியருக்குப் பெருமை சேர்க்கும்.  1983-ல ஜிதேந்திரா-ஸ்ரீதேவி நடிச்சு, மெஹா ஹிட் ஆன 'ஹிம்மத்வாலா’ படத்தின் ரீ-மேக்தான் அது. இப்போ நான் அஜய் தேவ்கனுக்கு ஜோடியா நடிக்கிறேன். ஸ்ரீதேவிபோலவே பார்வை, நடை,ஸ்டைல், காஸ்ட்யூம், மேனரி ஸம்னு தினமும் ஹோம் வொர்க் பண்றேன். கேரக்டருக்காகக்  கொஞ்சம் வெயிட் போட்டேன். தினமும் கண்ணாடி முன்னாடி நின்னு என் எக்ஸ்பிரஷன்களை மேனேஜ் செஞ்சுட்டு இருக்கேன். போன வாரம் ஸ்ரீதேவி மேடத்தைச் சந்திச்சேன். நிறைய டிப்ஸ் கொடுத்தவங்க, 'அந்த ஒரே படம் என்னை பாலிவுட்டின் எல்லாத் தரப்பு ரசிகர்களிடமும் கொண்டுபோய் சேர்த்தது. அதனால், கேர்ஃபுலா இரு. உனக்கும் அந்த ரீச் கிடைக்க வாழ்த்து கள்’னு சொன்னாங்க. டெஸ்ட் ஷூட் பண்ணாங்க. ரிசல்ட் ரொம்பத் திருப் தியா வந்திருக்கு.''

''தமிழ்ல படங்கள் இல்லைன்னாலும் உங்களைப் பத்தி கிசுகிசு மட்டும் வந்துட்டே இருக்கே?''

''ப்ச்... அதெல்லாம் பழகிடுச்சுங்க. என்னைப் பத்தின முதல் கிசுகிசு படிச்சப்போ எனக்கு எவ்வளவு அதிர்ச்சியா இருந்துச்சு தெரியுமா? 'அச்சோ... அது பொய் ஆச்சே... இதனால நம்மளுக்குக் கெட்ட பேர் வந்து கேரியரே ஸ்பாய்ல் ஆகிருமே’னு பயந்துட்டு தூக்கமே வராம கவலைப்பட்டுட்டு இருந்தேன். ஆனா, இப்போ 'இன்னைக்கு அப்டேட்’ என்னன்னு நானே கேக்குற அளவுக்கு மனசு ட்யூன் ஆகிருச்சு. சினிமால இது சகஜம். காதல் தோல்வி, தமன்னா சீஸன் முடிஞ்சிருச்சு, கல்யாணம் பண்ணி செட்டில் ஆகப்போறாங்கனு எவ்வளவோ பார்த்தாச்சு. போன வாரம் படிச்சது செம காமெடி... 'சிரஞ்சீவி சார் படத்துல நடிக்கிற வாய்ப்புக்காக, காசு வாங்காம ராம் சரண் கல்யாணத்துல டான்ஸ் பண்ணேன்’னு ஒரு செய்தி. மை காட்... எப்படி இப்படி எல்லாம் யோசிக்கிறாங்க. இப்போ எனக்கு 22 வயசுதான். நிச்சயம் 30 வயசு வரைக்கும் நடிப்பேன். அப்புறம்தான் கல்யாணம்!''

''ஃபேஸ்புக்ல இருக்குற 'தமன்னா பாட்டியா’ நீங்கதானா?''

''அது நான் இல்லைங்க. நிறைய ஃப்ரெண்ட்ஸ் பார்க்குறப்போ, 'என்னடி ஃபேஸ்புக்ல 'ஹாய்’ சொன்னா உடனே 'பை’ சொல்லிடுறே’னு திட்டுறாங்க. நான் எந்த சோஷியல் நெட்வொர்க் அக்கவுன்ட்டிலும் இல்லை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism