Published:Updated:

'ராஜபாட்டை'க்காக மன்னிப்பு கேட்கிறேன்!

நா.கதிர்வேலன்

'ராஜபாட்டை'க்காக மன்னிப்பு கேட்கிறேன்!

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

''காதல்னா மழை மாதிரி... இசை மாதிரி... அந்த ஃபீலிங்கில் கரையணும். காதல் சொல்றது இல்லை... அள்றது. 'ஆதலால் காதல் செய்வீர்’னு ஒரு படம் பண்ணிட்டு இருக்கேண்ணே!' ஒவ்வொரு வார்த்தையிலும் காதல் தெளித்துப் பேசுகிறார் இயக்குநர் சுசீந்திரன்.

 ''காதல்ல சொல்லாதது இன்னும் சினிமாவில் இருக்கா என்ன?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''ஒவ்வொருத்தர் மனசிலயும் இன்னும் என்னென்னமோ இருக்கே! கவிதை கிறுக்கி டார்ச்சர் பண்றது, தனியாப் புலம்பறது, ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருக்கிறது எல்லாம் இன்னும் தமிழ்நாட்டுல நடந்துட்டுதானே இருக்கு. 'நான் மகான் அல்ல’ படத்துல திடீர்னு யாருமே எதிர்பார்க்காம பசங்களோட முரட்டு முகம் காமிச்சோமே... அப்படி இந்தப் படத்திலும் காதலின் இன்னொரு பக்கத் தைக் காமிச்சிருக்கோம்.

எந்த ஹீரோவும் இல்லாம சினிமாவில் நுழைஞ்சேன். பெரிசா ஜெயிச்சுட்டு யாரும் எதிர்பார்க்காம 'அழகர்சாமியின் குதிரை’ பண்ணேன். ஒவ்வொரு படத்திலும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம ஒரு இயக்குநர் வெளிப்படணும். அதுதான் அழகு!

'ராஜபாட்டை'க்காக மன்னிப்பு கேட்கிறேன்!

'ஆதலால் காதல் செய்வீர்’ ஒரு மியூஸிக்கல் ஃபிலிம். ஆனா,ஹீரோவோ   ஹீரோயினோ இசைக் கலைஞர்கள் கிடையாது. இருந்தாலும் படம் முழுக்க  இசை கலந்து இருக்கும். அதனால, யுவன் ஷங்கர்தான் படத்தின் நிஜ ஹீரோ. சந்தோஷ்னு ஒரு தயாரிப்பாள ரின் மகன். இழுத்த இழுப்புக்கு எல்லாம் வந்தான். அவனையும் லயோலாவில் படிக் கும் நாலு பசங்களையும் பிடிச்சு ஒரு நடிப்புப் பட்டறையில் போட்டு வதக்கி நடிக்கவெச்சிருக்கேன். காலேஜ் கதைதான். ஆனா, முழுக்க கல்லூரியை மட்டுமே சுத்தாது. ’வழக்கு எண்’ படத்தில்  நடிச்ச மனி ஷாவை எனக்கு ரொம்பப் பிடிச்சது. இன்னும் அந்தப் பொண்ணுகிட்ட இருந்து நடிப்பை எடுத்திருக்கோம்!'

''கமர்சியல் ஹீரோக்களே கிடைச்சிருப்பாங்களே... 'அழகர்சாமியின் குதிரை’ அப்புக்குட்டிக்கு தேசிய விருது கிடைச்ச சென்ட்டிமென்ட்ல அறிமுகங்களை வெச்சுக்கிட்டு களம் இறங்கிட்டீங்களா?''

'ராஜபாட்டை'க்காக மன்னிப்பு கேட்கிறேன்!

''இந்தப் படத்துக்கு கமர்சியல் சாயம் தேவைப்படலை. தேசிய விருது... எனக்கு கிடைச்சதைவிட அப்புக் குட்டிக்குக் கிடைச்சதுதாங்க சந்தோஷம். எத்தனை தடவை புறக்கணிக்கப் பட்டு, கேலி செய்யப்பட்டு வந்திருக்கான். டெல்லி விருது விழாவில் வித்யாபாலன் பக்கத்துல இவனுக்கு இடமாம். என்கிட்ட செல்போன்ல கிசு கிசுக்கிறான்.... 'அண்ணே... அண்ணே பக்கத்துல.... ரொம்ப பக்கத்துல வித்யாபாலன் உட்கார்ந்திருக்கு. பேசவா’னு  கேட்டான். 'பேசுடா பேசு.... அவங்களுக்குத் தமிழ் தெரியும்’னு கிளப்பிவிட்டேன். நான் சினி மாவுக்கு வந்ததுக்கு ரொம்ப சந்தோஷப்படவெச்சுட்டான் அவன்!''

''நீங்க கடைசியா எடுத்த 'ராஜபாட்டை’ யாருக்கும் திருப்தி அளிக்கலையே.... ஏன்?''

''நான் நல்ல படம் எடுக்கிற வன்தான். ஒரேயடியாக நம்பிக்கை இழந்திட வேண்டாம். என் நண்பர்களே, 'என்னப்பா உன் படம்னு நம்பிப்போனால் அப்செட் ஆக்கிட்ட!’னு  சொன்னாங்க. எனக்கு என்ன வரும், என்ன ஏரியாவில் விளையாடலாம்னு தெரியாம கொஞ்சம் அசந்துட்டேன். கணக்கு தப்பிருச்சு. எனக்கு வர்ற விஷயங்களை மட்டுமே இனிமேல் எடுப்பேன். 'ராஜபாட்டை’ எடுத்ததுக்காக, தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கிறேன்!''