Published:Updated:

கோலிவுட்டை கலக்கும் ஆந்திர ஆர்டிஎக்ஸ்கள்!

ஆர்.சரண்படங்கள் : பொன்.காசிராஜன்

கோலிவுட்டை கலக்கும் ஆந்திர ஆர்டிஎக்ஸ்கள்!

ஆர்.சரண்படங்கள் : பொன்.காசிராஜன்

Published:Updated:
##~##

கூத்தும் பாட்டும் தமிழர்களின் அடையாளம். அப்போ, குத்துப் பாட்டு தமிழ் சினிமாவின் அடையாளம் என்பதுதானே லாஜிக்!

 குத்துப் பாடல்களைத்தான் இப்போது அதிகம் டெடிகேட் கேட்கிறான் தமிழன். அந்த குத்துப் பாட்டுக் கழகத்தில் கொடிகட்டிப் பறக்கும் சில அழகிய டான்ஸர்களின் 'யார் இவர்கள்?’ விவரம் இங்கே...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆந்திர ஜில்லாவிட்டு தமிழக ஜில்லா வந்த சுஜாதா, எண்பது - தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்கள் அனைவருடனும் ஆடியவர்.

'' 'தளபதி’ படத்துல 'ராக்கம்மா கையத் தட்டு...’, 'காட்டுக் குயிலு மனசுக்குள்ள...’ பாட்டுக்கள்ல ரஜினி சார்கூட நான் ஆடி இருக்கேன். அதனால, அப்பவே நான் போற இடங்கள்ல என்னைக் கண்டுபிடிச்சு கை

கோலிவுட்டை கலக்கும் ஆந்திர ஆர்டிஎக்ஸ்கள்!

கொடுத்து, ஆட்டோகிராஃப் வாங்கி போட்டோ எல்லாம் எடுத்துப்பாங்க. பிரபுதேவாகூட 'அக்னி நட்சத்திரம்’ படத்துல ஆடி இருக்கேன். ரம்லத்தும் நானும் அப்ப செம ஃப்ரெண்ட்ஸ். ஸ்டன்ட் மாஸ்டர் விக்ரம் தர்மாவோட தம்பி பாபுசீலன் என்கூட டான்ஸ் பண்ணிட்டு இருந்தவர். அவரைக் காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டேன். நானும் அவரும் சேர்ந்து 'சுஜாதா - பாபு’வா 'கிழக்குச் சீமையிலே’, 'காதல் தேசம்’னு பல படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரா இருந்தோம். 11 வருஷத்துக்கு முன்னாடி பாபு, ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டார். அதோட சினிமாவுல இருந்து ஒதுங்கி, பிசினஸ் பண்ண ஆரம்பிச்சுட்டார். நானும் பிள்ளைங்களைப் பார்த்துக்கிட்டு வீட்ல இருந்துட்டேன். அப்போ ஒரு நாள் தினேஷ் தம்பிதான் ஒரு பாட்டுக்கு ஆடணும்னு சொல்லிக் கூப்பிட்டு 'ஈசன்’ல நடிக்க வெச்சிருச்சு. இப்ப அதே மாதிரி நிறைய பாட்டுக்கு ஆடக் கூப்பிடு றாங்க. ஆனா, வயசாகிடுச்சு... பசங்களும் வளர்ந்துட்டாங்க’னு சொல்லி, நடன வாய்ப்புகளைத் தவிர்த்துட்டு, நடிக்கக் கேட்டா மட்டும் நடிச்சுட்டு வர்றேன்!'' - சொல்லிச் சிரிக்கிறார் சுஜாதா.

 இன்றைய தேதிக்கு நாகு என்ற நாகமல்லேஸ்வரியின் நடனம் இடம் பெறாத படங்கள் இண்டஸ்ட்ரியில் சொற்பமே. 'நாடோடிகள்’ படத்தில், 'யக்கா... யக்கா...’, 'மைனா’வில், 'ஜிங் ஜிக்கா...’, 'மனம்கொத்திப் பறவை’யில், 'டங் டங்... டிக டிக... டங் டங்...’ என்று கோலிவுட்டில் பட்டொளி வீசிப் பறக்கிறது நாகுவின் கொடி!

''ஆளு எடையைப் பார்த்து என்னை எடை போட்டுடாதீங்க. எனக்கு இன்னும் கல்யாணம்கூட ஆகலை'' என்று கறாராகப் பேசும் நாகு, ராஜமுந்திரி இறக்குமதி.

''என்அம்மா டான்ஸர். அதனால ரொம்ப சின்ன வயசுலயே நானும் டான்ஸர் யூனியன் கார்டு வாங்கிட்டேன். சாமி சத்தியமா நான் ஆடுன பாட்டுக்கள் இவ்ளோ ஹிட் ஆகும்னு நினைக்கவே இல்லை. இப்போ நிறைய அறிமுக இயக்குநர்கள் 'நாகு டான்ஸ்’னே ஸ்க்ரிப்ட்ல குறிச்சுவெச்சுக்கிறாங்களாம். நம்புறதா என்னன்னு தெரியலை. ஆனா, கேக்க சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறையப் படங்கள்ல டான்ஸ் ஆடி, அம்மா - அப்பாவுக்காக அழகா ஒரு வீடு கட்டி, அவங்களைச் சந்தோஷமா வெச்சுக்கணும்னு ஆசை. என்ன படம், யார் ஹீரோ, யார் டைரக்டர்னு விசாரிக்க மாட்டேன். நான் பாட்டுக்குப் போய் ஆடிட்டு வந்துருவேன். இப்பக்கூட 'டங் டங்...’னு ஒரு பாட்டுக்கு ஆடிட்டு வந்தேன். இப்ப படம் ரிலீஸான பிறகுதான் தெரியுது... அந்தப் படம் 'மனம் கொத்திப் பறவை’னு!

கோலிவுட்டை கலக்கும் ஆந்திர ஆர்டிஎக்ஸ்கள்!

எல்லாரும் நினைக்கிற மாதிரி குத்துப் பாட்டுக்கு ஆடுறது அவ்வளவு சுலபம் இல்லை. ஷாட் சரியா வரலைன்னா, நாள் முழுக்க ஆடிட்டே இருக்கணும். உடம்பு முழுக்க வலி பின்னி எடுக்கும். அதைக்கூடச் சமாளிச்சுடலாம். ஆனா, பொது இடங்கள்ல ரசிகர்களின் அன்புத் தொல்லையைச் சமாளிக்கவே முடியாது. ஆனா, என்னையும் ஒரு ஸ்டாரா நினைச்சுத்தானே போட்டோ எடுக்க ஆசைப்படுறாங்கனு எனக்கு நானே சமாதானம் சொல்லிக்குவேன்!''

'தடையறத் தாக்க’வில் ''பூந்தமல்லிதான்... புஷ்பவள்ளிதான்...'' என்று எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலுக்குக் குத்தி எடுத்த கல்யாணி... 1,000 பாடல்களுக்கு மேல் ஆடிய நடன சிகாமணி. அம்மணிக்கும் ஆந்திராதான் பூர்வீகம்.

''போன வாரம் பாங்காக். முந்தா நாள் கேரளா... நேத்து ராத்திரி வி.ஜி.பி. கோல்டன் பீச்ல பார்ட்டி ஸ்பெஷல் குத்து டான்ஸ் ஷோ. விடிய விடிய ஆடிக் களைச்சு வீட்டுக்கு வந்து அடிச்சுப் போட்ட மாதிரி சாயங்காலம் வரை தூங்கி எந்திரிச்சா, வீட்டுல எல்லோரும் 'பீச்சுக்குப் போலாமா?’னு கேப்பாங்க. எனக்குச் சிரிப்புதான் வரும்.

கோலிவுட்டை கலக்கும் ஆந்திர ஆர்டிஎக்ஸ்கள்!

ஒரே மாசத்துல பத்து பாட்டு வரைகூட டான்ஸ் ஆடி இருக்கேன். ஆனா, மாசம் இருபதாயிரம் தாண்டி சம்பாதிச்சது இல்லை. இப்போ தனியா பாட்டுக்கு ஆடினா, கம்பெனிக்கு ஏத்த மாதிரி கூடக்குறைச்சுக் கிடைக்கும். என்னைப் போல டான்ஸர்களுக்கு ஒரே ரிலாக்ஸ்... தூக்கம்தான். இண்டஸ்ட்ரில

கோலிவுட்டை கலக்கும் ஆந்திர ஆர்டிஎக்ஸ்கள்!

எங்களுக்கு நல்ல மரியாதை இருக்கு. ஆனா, பப்ளிக்ல சிலர் பார்க்கிற பார்வைதான் எங்களை ரொம்ப சங்கடப்படுத்துது. டான்ஸ் ஆடும்போது செட் சரிஞ்சு விழுந்து, என் உடம்புல நாலஞ்சு இடத்துல எலும்பு மூட்டு ஜவ்வு கிழிஞ்சிருக்கு. ஏகப்பட்ட ஃப்ராக்சர். அதுக்கெல்லாம் சிகிச்சை எடுத்துக்கிட்டேதான், குடும்பத்தைக் காப்பாத்தணுமேனு ஆடிட்டு இருக்கேன்.  

ஒரு சித்தாள் எப்படி உடம்பை வருத்தி வேலை பார்க்கிறாங்களோ, அப்படித்தான் நாங்களும். எங்களுக்குக் கிடைக்கிற அதிகபட்ச சந்தோஷம் உங்க கைதட்டலும் விசில் சத்தமும்தான். என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒருத்தரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, அவருக்கு மூணு வேளை ஆக்கிப் போடணும்கிறது என் ஆசை. அது நிறைவேறுமானு தெரியலை. ஆனா, நிறைவேறும்னு நம்பிக்கை இருக்கிற கனவு ஒண்ணு இருக்கு... அது தினமும் மூணு வேளை நேரத்துக்கு நல்லா சாப்பிடணும்!''