Published:Updated:

"இசைன்னா சில இடங்கள்லதான் இருக்கணும்!"

இடிக்கிறார் தங்கர்நா.கதிர்வேலன்

"இசைன்னா சில இடங்கள்லதான் இருக்கணும்!"

இடிக்கிறார் தங்கர்நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

ளவாடிய பொழுதுகளுக்குக் காத்திருக்காமல் 'அம்மாவின் கைபேசி’யைக் கையில் எடுத்துவிட்டார் தங்கர்பச்சான். படம் தொடர்பான பேட்டிகளைக்கூடப் பரபரக்கவைக்கும் தங்கர்பச்சான் பாணிக்கு, இந்தப் பேட்டியும் தப்பவில்லை.  

 '' 'அம்மாவின் கைபேசி’ என்ற உங்க நாவலின் தலைப்பே அழகு. படத்தில் என்ன விசேஷம்?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''விசேஷம்னு சொல்லிக் கூத்தடிக்க நான் ஒண்ணும் கேளிக்கைக்காரன் கிடையாது. இப்ப எவனுக்கும் அம்மா, அப்பாவை வீட்டோட வெச்சுக்கிட்டு வாழ முடியலை. பொண்டாட்டி, பிள்ளைகளோட சந்தோஷமா இருக்கானுங்க. பகட்டு வாழ்க்கைக்குப் பழகிட்டு, வேரடி உறவுகளை அறுத்தெறிஞ்சுட்டோம். முதியோர் இல்லங்கள் பெருகி நிக்குது. கிராமங்களில் பெரியவர்கள் மட்டும் இருக்காங்க. பிள்ளைகள் பேச ஒரு நிறம், அணைக்க ஒரு நிறம்னு பூசி அலைபேசியைக் கையில கொடுத்துட்டு, அடுத்த வண்டியைப் பிடிச்சு தொலைதூரம் பறந் துடுறானுங்க. 'உரிச்சு உப்புக்கண்டம் போட்டுட்டான்’னு சொல்வாங்கள்ல... அப்படிப் போட்டு வெளுத்து வாங்கியிருக்கேன். அடுத்த காட்சியை யூகிக்க முடியாம, விறுவிறுப்பா வந்திருக்கு படம்.''

"இசைன்னா சில இடங்கள்லதான் இருக்கணும்!"

''இதுவரை சாந்தனு பளிச்னு எந்தப் படத்திலும் வெளிப்படலை. படத்தோட கனத்தை அவர் தாங்கி இருக்காரா?''

''படத்தில் வேலைவெட்டி இல்லாமத் திரியும் கடைசி மகன் அண்ணாமலையாக வாழ்ந்திருக்கார் சாந்தனு. நான் சாந்தனு நடிச்சு ஒரு படமும் பார்த்தது இல்லை. கேட்டா,  ஏழெட்டுப் படம் நடிச்சிட்டாராம். இப்பப் போய் சாந்தனுவை அவங்க வீட்ல பாருங்களேன்... பேன்ட், சட்டையோடு இருக்க மாட்டார். கைலி கட்டிக்கிட்டு, தோள்ல துண்டைப் போட்டுக்கிட்டுத்தான் இருப்பார். இந்தப் படம் பாக்யராஜ் அண்ணனுக்குப் பெரிய அதிர்ச்சியைத் தரும். நம்ம பையன் இவ்வளவு திறமைசாலியாங்கிற அதிர்ச்சிதான் அது!''

''என்ன திடீர்னு இசைக்கு மும்பைக்குப் போயிட்டீங்க?''

''இளையராஜா, வித்யாசாகர், பரத் வாஜ்னு நிறையப் பேர்கூட வேலை பார்த் துட்டேன். இங்கே படத்துல தேவைக்கு அதிகமா இசை இருக்கு. இசைன்னா சில இடங்கள்லதான் இருக்கணும். காசு கொடுக்குறோம்னு அடிஅடின்னு அடிச்சுவிட்டுடுறாங்க. படம் சர்வதேச அரங்குகளுக்குப் போகும்போது, அதனால அலேக்காத் தூக்கி வெளியே வெச்சிடுறாங்க. மும்பையில் இருந்து ரோகித் குல்கர்னினு ஒரு புது இசையமைப்பாளரைக் கொண்டுவந்திருக்கேன். புதிய திசைக்குப் போகும் இசை. என்னைப் போல பல இயக்குநர் களின் தேவையை அவர் நிரப்புவார்!''

"இசைன்னா சில இடங்கள்லதான் இருக்கணும்!"

''ஜெயலலிதாவின் ஒரு வருட ஆட்சி எப்படி இருக்கு?''

''பல நல்ல திட்டங்களும் இருக்கு. சில மோசமான திட்டங்களும் இருக்கு. எல்லாம் சரி... இந்த மதுக் கடைகள்தான் பிரச்னை. ஏற்கெனவே உயிரைக் கையில் புடிச் சுக்கிட்டு இருக்கிறவன்கிட்ட அவன் பிள்ளைங்க படிப்புக்கு, பொண்ணு கல்யாணத்துக்குனு அவன் வெச்சிருக் குற எல்லாக் காசையும் சாராயத்தைக் காட்டி உருவிக்கிட்டு விட்டுடுறாங்க. இதை எதிர்த்து எல்லா கட்சிகளும் போராட வேணாமா? கருணாநிதி மதுவிலக்கை ரத்து செஞ்சார்னா, இந்த அம்மா அதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய்ட்டாங்க. எதிர்காலத்தில் மதுக் கடைகளும் ஆஸ்பத்திரிகளும்தான் ஊர் முழுக்க நெறைஞ்சு கிடக்கும்போல இருக்கு. ஒவ்வொரு ஆம்பளையும் இப்படி சாராயத்தைத் தொடர்ந்து குடிச்சா, ஊர்ல உள்ள பொம்பளைங்க எல்லாம் பூ, பொட்டு இல்லாம இருக்க வேண்டியதுதான். இதைவிடக் கொடுமை... அவனைக் குடிக்கவும் வெச்சிட்டு, அவனுங்களுக்கே மருத்துவக் காப்பீடும் கொடுக்கிற விந்தையும் இங்கேதான் நடக்குது. துணிச்சலுக்குப் பேர்போன முதல்வர் முதல்ல மதுக் கடைகளை ஒழிக்கணும். மக்கள் காத்துட்டு இருக்காங்க. இது அவரது வாழ்நாள் சாதனையாக இருக்கும். கொஞ்சம் மனசுவைங்கம்மா!''

''எதிர்க் கட்சித் தலைவராக விஜயகாந்தின் செயல்பாடுகள் எப்படி இருக்கு?''

"இசைன்னா சில இடங்கள்லதான் இருக்கணும்!"

''அய்யோ பாவங்க! தமிழ் மக்களுக்கு அரசியல் விழிப்பு உணர்வு இருந்திருந்தா, விஜயகாந்த் எல்லாம் இங்கே வந்திருக்க முடியுமா? எல்லாமே இங்கே சீர்கேடுங்க. பாருங்க, ஒவ்வொரு அரசியல் தலைவர் வரும்போதும் போகும்போதும் விர்விர்னு அம்பது அறுபது காருங்க கூடவே பறக்குது. அந்த கார்கள்ல இருக்கிற மூஞ்சிகளைப் பாருங்க, அவங்களைப் பார்த்தா மக்களுக்கு நல்லது பண்ற மாதிரியா தெரியுது? அஞ்சு வருஷத்துக்கு ஒரு கட்சியைப் பாதாளத்துக்குத் தள்றாங்க. இன்னொரு கட்சியை அரியணையில் ஏத்திவிட்டுடுறாங்க. அப்படி இல்லாம எதிர்க் கட்சிகளுக்கும் சம பலம் இருக்கணும்.''

''திடீர்னு 'தமிழ்க் கூடு’னு இயக்கம் ஆரம்பிச்சிருக்கீங்களே?''

''ஆமா... தேவை இருக்கு. வாக்குரிமையை மட்டும் பயன்படுத்திக்கிட்டு இருக்கிற தமிழ் இளைஞர்களுக்கு இன்னும் அரசியல் புரியணும். அதை மாணவர்கள்கிட்ட இருந்து தொடங்கினா நல்லா இருக்கும்னு நினைச்சு ஆரம்பிச்சேன். இதுவரைக்கும் ஏழரை லட்சம் பேர் சேர்ந்து இருக்காங்க. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒருத்தராவது அரசியலுக்கு வந்து, இந்தச் சீர்கெட்ட அரசியலுக்கு மாற்று உருவாக்கணும்னு நினைக்கிறேன்!''