Published:Updated:

ஈமு கோழி கொத்துது மச்சான்!

க.நாகப்பன்படங்கள் : உசேன்

பிரீமியம் ஸ்டோரி
##~##

டங்களில் நடிக்கிறாரோ இல்லையோ... பரபரப்பாகவே இருக்கிறார் நமீதா. குட்டிப் பாப்பா ஆடைகளில் பயம் காட்டுகிறார். பப்ளிகுட்டிக்காக சாலையோரக் கல்யாணத்தில் 'வான்டட்’ ஆகத் தலை காட்டுகிறார்... 'சோனா மீது வழக்குப் போடுவேன்’ என்று கொந்தளித்துவிட்டு, அவரோடு பார்ட்டியில் கொஞ்சுகிறார். ஈமு கோழிக் கடைகளில் நமீதா ஏறி 'மச்சான்ஸ்’ என்றாலே அப்ளாஸ் அள்ளுகிறது!  

 '' 'தி டர்ட்டி பிக்சர்’ தமிழ்ல யார்தான் நடிக்கப்போறீங்க... நீங்க, அனுஷ்கா, நயன்தாரானு வதந்தி றெக்கை கட்டுதே?''

''யார் நடிக்கிறாங்க எனக்குத் தெரியாது. ஆனா, நான் இப்போ அது தமிழ் ரீ-மேக்ல நடிக்க பிராக்டீஸ் பண்ணுது. பெர்சனல் ட்ரெய்னர் வெச்சு வொர்க் பண்றேன். டயட்ல இருக்கேன். டெய்லி எக்சர்சைஸ் பண்றேன். வெஜிடபிள்ஸ் மட்டும் சாப்பிட றேன். ஐ லவ் சிக்கன். பட் அதுக்குக்கூட ஸ்ட்ரிக்ட் நோ சொல்லிட்டேன். 'நான் எப்படி ஸ்லிம் ஆக முடியும். நான் எப்படி சில்க்கா நடிக்க முடியும்’னு நிறைய கேட்கி றாங்க. ஆனா, சில்க் கேரக்டர்ல நடிக்க நான்தான் பெஸ்ட். வெயிட் அண்ட் சீ!''

ஈமு கோழி கொத்துது மச்சான்!

''சோனாவோட ராசி ஆகிட்டீங்களா?''  

''அப்படி யார் சொன்னது? நான் சொல்லலையே. சோனா பர்த் டேவுக்கு இன்வைட் பண்ணுது. நான் போனேன். விஷ் பண்ணேன். தட்ஸ் ஆல்!''

ஈமு கோழி கொத்துது மச்சான்!

''ஆனா, ரெண்டு பேரும் அந்த பார்ட்டியில அவ்வளவு க்ளோஸா இருந்தீங்களாமே?''

''பார்ட்டிக்கு இன்வைட் பண்ணவங்ககிட்ட நாம எனிமிட்டி காட்ட முடியுமா? சோனாவும் என்னை மாதிரி ஒரு ஆக்டர்தானே? நாங்களே ஃப்ரெண்ட்ஸா இல்லைன்னா, அப்புறம் யார்தான் இருப்பா? சினிமால குஷ்பு என் வெரி க்ளோஸ் ஃப்ரெண்ட். அதுக்கப்புறம் எல்லாரும் எனக்கு ஃப்ரெண்ட்தான். அதுல சோனாவும் உண்டு!''

''எதுக்குத் திடீர்னு டாட்டூ குத்தி இருக்கீங்க?''

''எனக்கு ரொம்ப வருஷ ஆசை. ஆனா, ஒரு டாட்டூ குத்தி, 'அது ஏன் குத்துனோம்’னு அப்புறம் திங்க் பண்ணக் கூடாது. அதான் எனக்குப்  பிடிச்ச டாட்டூ தேடிக்கிட்டே இருந்தேன். 27 ஸ்டார் இருக்குற டாட்டூ பார்த்ததும் பிடிச்சது. ஹேப்பி ஹேப்பியா முதுகுல குத்திக்கிட்டேன். அறுபது வயசான பிறகும்கூட இந்த டாட்டூ எனக்குப் பிடிக்கும்!''

''ஈமு கோழி வளர்ப்பு லாபம் தராதுனு சொல்றாங்க. ஆனா, நீங்க அதுக்கு பிராண்ட் அம்பாஸடரா இருக்கீங்களே?''

''ஈமு சிக்கன் நல்லா இருக்கும்னு சொன்னாங்க. எல்லா விளம்பரங்கள்லேயும் நடிக்கிற மாதிரிதான் அதுல நான் நடிச்சுது. மத்தபடி எனக்கு எதுவும் தெரியாது. இப்போ கோலா ட்ரிங்ல பெஸ்டிசைட் இருக்குது சொல்றாங்க. ஆனா, ஸ்டார்ஸ் நடிக்கிதே. ஓ.கே... ஈமு சிக்கன் நான் சாப்பிட்டது இல்லை. இனி கரெக்ட் பண்ணிக் குது. ஆனா, ஈமு பக்கத்துல போனாலே கொத்துது. நான் டிஸ்டன்ஸ்ல இருந்தே பார்த்தது!''

''திடீர்னு ஒரு கல்யாணத்துல அழைப்பே இல்லாமக் கலந்துக்கிட்டீங்களே... ஏன்?''

''எனக்கு எப்பவும் தமிழ் கல்ச்சர் பிடிக்கும். கரூருக்குப் போய்ட்டு இருக்கும்போது, ஒரு கல்யாண ஃபங்ஷன் பார்த்தேன். கோயில்ல ரொம்ப சிம்பிள் கல்யாணம். என்னால நம்பவே முடியலை. மெஹந்தி,

ஈமு கோழி கொத்துது மச்சான்!

சாட் அயிட்டம்ஸ், கேம்ஸ், பாப்கார்ன், சோன்பப்டி, பெர்ஃப்யூம் ஸ்பிரே... இது எதுவுமே இல்லாமக் கல்யாணம்... லவ் அண்ட் லவ் ஒன்லி. வாவ்! அந்த இடத்துல கல்யாணப் பொண்ணு, பையனுக்கு விஷ் பண்ணணும்னு தோணுச்சு. அதான் பண்ணேன். அந்தக் கோயில்ல இருந்த 15 நிமிஷம்... வாழ்க்கையில மறக்க முடியாது!''

''வேற எதெல்லாம் தமிழ்நாட்ல மறக்க மாட்டீங்க?''

''மதுரைக்குப் போனப்போ ஒரு பாட்டி ரொம்ப ஸ்டைலா தம் அடிச்சுட்டு இருந்தாங்க. அவங்க ஏஜ் கேட்டேன்... எய்ட்டியாம். 'இதுக்குப் பேரு சுருட்டு’னு பாட்டி சொல்லுச்சு. அப்படியே ஸ்ட்ராங்கா ஒரு பஃப் இழுத்துவிட்டாங்க. நான் ஷாக் ஆகிட்டேன். அதுதான் என்னால மறக்கவே முடியலை. இப்போ எனக்கே சுருட்டு பிடிக்கணும்னு ஆசை வந்திடுச்சு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு