Published:Updated:

எல்லாமே விளம்பரம்தானா?

சினேகா - பிரசன்னா பதில்நா.கதிர்வேலன்

##~##

நியூஸிலாந்து ஹனிமூன் ட்ரிப் முடித்த குளிர்ச்சி இன்னும் மிச்சம் இருக்கிறது பிரசன்னாவின் குரலில்.

 ''கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமா, ரொம்ப அழகா இருக்கு. எங்களை ஒரு தனி வீட்டில் விட்டுட்டாங்க. என்ன சமைக்கிறது, எப்படிச் சமைக்கிறது... ரெண்டு பேருக்கும் எதுவும் தெரியாது. ஆனா, முதல் நாள்ல இருந்தே 'துறுதுறு’னு சினேகா எல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க. அம்மாகிட்ட, அக்காகிட்ட, எங்க அம்மாகிட்டனு கேட்டுக் கேட்டு, புத்தகங்களைப் படிச்சு சமையல் நடந்துச்சு. ஆனா, கல்யாணம் முடிஞ்ச சில வாரம் சொந்தக்காரங்க வீட்ல சாப்பிட்டுட்டே இருந்ததுல ரெண்டு பேருமே

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz
எல்லாமே விளம்பரம்தானா?

வெயிட் போட்டுட்டோம். இப்ப டயட்ல இருக்கோம். அரிசிச் சாப்பாடே கிடையாது. சப்பாத்தி, சென்னா மசாலா, மிக்ஸ்டு வெஜிடபிள், சான்ட்விச்... இவ்ளோதான் மூணு வேளையும்!''

''கல்யாணத்துக்கு முன், பின்... சினேகாகிட்ட என்ன வித்தியாசம்?''

''இன்னும் கூடுதல் பொறுப்போட இருக்காங்க. அவங்களே வீட்டைக் கூட்டிப் பெருக்கி, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள்ல சாமிக்குப் பூ போட்டு, பூஜை பண்ணி, சமைச்சு முடிச்சிட்டு ஷூட்டிங் போறாங்க. இவ்வளவு வேலை பண்றாங்கனு சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. என் அம்மா எதிர்பார்த்த மருமகளா இருக்காங்க. இப்ப என்னைவிட சினேகாதான் அம்மாவுக்கு உயிர்!''

''ஹனிமூன் பயணம் எப்படி இருந்தது?''

''நியூஸிலாந்துக்கு அதோட உச்சகட்ட வின்டர்ல போயிருந்தோம். ஒரு மாசம் தங்கலாம்னு பிளான். ஆனா, ரெண்டு வாரத்துக்கு மேல தாங்கலை. அவ்வளவு குளிர். எப்படிச் சொன்னாலும் அந்தக் குளிரைப் புரியவைக்க முடியாது. ஹனிமூன் ட்ரிப்ல மறக்க முடியாத அளவுக்கு சினேகாவுக்கு ஏதாவது வாங்கித் தரணும்னு அவ்வளவு ஆசைப்பட்டேன். ஆனா, மஃப்ளர்ல இருந்து வெளியே தலை காட்ட முடியலை. ஆனா, அங்கேயும் எங்களை அடையாளம் கண்டுபிடிச்சுட்டாங்க. அதில் இலங்கைத் தமிழர்கள்தான் அதிகம்!''

எல்லாமே விளம்பரம்தானா?

''ரஜினிகிட்ட ஆசீர்வாதம் வாங்கினீங்களே... என்ன சொன்னார்?''

''ரொம்ப அன்பாப் பேசினார். ராகவேந்திரர் படம் கொடுத்தார். அவர் ஆரம்பத்துல எங்க காதலை நம்பவே இல்லையாம். 'கிசுகிசுதான்... ஜஸ்ட் பாஸ் ஆகிடும்’னு நினைச்சாராம். லதாம்மாதான், 'இல்லைங்க... இரண்டு பேரும் லவ் பண்றாங்க. நிச்சயம் கல்யாணம் வரைக்கும் போகும்’னு சொன்னாங்களாம். 'அவங்க சொன்ன மாதிரியே நடந்திருக்கு. சூப்பர் சூப்பர். நல்லா இருங்க’னு ஆசீர்வாதம் பண்ணினார்!''

''உங்க கல்யாணம் சேனல்ல வந்தது, இப்போ பிரிஞ்சுட்டாங்கனு விளம்பரம் வருது. நிறையப் பேருக்கு அதை விளம்பரம்னு நினைக்கக்கூட அவகாசம் இல்லை. எல்லாமே விளம்பரம்தானா?''

''அது சும்மா ஜாலியான விளம்பரம். ஆடி மாசம் நியூலி மேரிட் ஜோடிகளுக்குப் பிரிவுங்கிறது கஷ்டமா இருக்குமேங்கிறதை வெச்சு எடுத்த விளம்பரம். அப்புறம்தான் அதை டீடெய்லாப் படிக்காம பலர் தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்கனு தெரிஞ்சுது. நாலு வருஷம் காதலிச்சு, ரெண்டு பேர் அப்பா, அம்மாவையும் சம்மதிக்கவெச்சு, அத்தனை பேர் ஆசியோடு நடந்த கல்யாணம் இது. எப்பவும் அது தப்பாகாது. எங்களை நேசிக்கிற எல்லோருக்கும் சொல்றது இதுதான். நாங்க இரண்டு பேரும் நல்லா சந்தோஷமா இருக்கோம்... இருப்போம்!''