பிரீமியம் ஸ்டோரி
##~##

டல்மொழி, குரல்மொழி இரண்டிலும் அழகு ததும்புகிறது ஆண்ட்ரியாவிடம். டப்பிங் ஆர்ட்டிஸ்ட், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட், பின்னணிப் பாடகி, நடிகை என மெதுமெதுவாக மீடியா கவனத்துக்கு வந்த ஆண்ட்ரியாவுக்கு, 'விஸ்வரூபம்’ பம்பர் லைம் லைட்!

 '' 'விஸ்வரூபம்’ கமல் என்ன கற்றுக்கொடுத்தார்?''

''கவிஞர், எழுத்தாளர், நடிகர், இயக்குநர், இசைக் காதலர்னு அவர்கிட்ட இருக்குற ஒவ்வொரு திறமையும்... சான்ஸே இல்லை. ஒவ்வொரு படத்திலும் ஏதாவது சாதிக்கணும்னு நினைக்குற லட்சியவாதி அவர். 'விஸ்வரூபம்’ ஷூட்டிங் நடந்தப்போ தொடர்ந்து பல நாட்கள் சந்தோஷமா இருந்தேன். அது என் தன்னம்பிக்கை நிறைய அதிகரிச்சிருக்கு. தேங்க்ஸ் டு கமல் சார்.''

''உங்க குடும்பத்தைப் பத்திலாம் பேசவே மாட்டேங்குறீங்களே?''  

''யாரும் கேட்கவே மாட்டேங்குறீங்களே! இப்போ சொல்றேன்... நான் ஆங்கிலோ இந்தியன். அரக்கோணத்துல இருந்து அப்பா-அம்மா சென்னை வந்ததுக்கு அப்புறம் நான் பிறந்தேன். அதனால, நான் சென்னைப் பொண்ணுதான். ஒரே ஒரு தங்கச்சி. அப்பா ஹைகோர்ட் லாயர். அம்மா ஹோம் மேக்கர். தங்கச்சி பெல்ஜியத்துல ரிசர்ச் அசிஸ்டென்ட்டா இருக்கா. நான் பத்து வயசுல இருந்து பாடுறேன். 'வேட்டையாடு விளையாடு’ படத்துல கமாலினி முகர்ஜிக்கு பின்னணிக் குரல் கொடுத்தேன். அதுதான் 'பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்தது. 'ஆடுகளம்’ டாப்ஸி, 'நண்பன்’ இலியானாவுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கேன். இப்போ 'தி ஷோ மஸ்ட் கோ ஆன்’னு ஒரு கம்பெனி நடத்திட்டு இருக்கேன். ஜாஸ், பேண்ட் மியூஸிக், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட்னு பெரிய டீம் அதுல இருக்கோம். ரொம்ப க்ரியேட்டிவ்வான, ஜாலியான வேலை!''

99% பேர் உண்மையா இல்லை!

''உங்க காஸ்ட்யூம்ஸ்லாம் வித்தியாசமா இருக்கே... எப்படி டிசைன் பண்றீங்க?''

''ரொம்ப சிம்பிள். நான் அழகான டிரெஸ்னு பார்த்து எதையும் வாங்குறது இல்லை. எனக்கு எது நல்லா இருக்குமோ, அதை மட்டும் வாங்கிப் போட்டுப்பேன். அது நல்ல டிரெஸ்னு நான் ஃபீல் பண்றதால, முகத்துல அந்த எனர்ஜி அப்படியே பிரதிபலிக்கும். ஈஸி சைக்காலஜி இது. இதை எல்லாரும் ட்ரை பண்ணலாம்!''  

'' 'புதிய திருப்பங்கள்’ படத்துல பாலியல் தொழிலாளியா நடிச்சிருக்கீங்களாமே?''

''குழந்தைக் கடத்தலை மையமாவெச்சு வர்ற அந்தப் படத்துல நான் ஒரு ஜர்னலிஸ்ட். சில ரகசியங்களைக் கண்டுபிடிக்க, கால்கேர்ள் கெட்-அப்ல வருவேன். அவ்ளோதான். அந்தப் படத்தின் இயக்குநர் சாரதா ராமநாதன் 'சிருங்காரம்’ படத்துக்காக மூணு தேசிய விருதுகள் வாங்கியவர். பெண் இயக்குநர் படத்துல அப்படி ஒரு நல்ல கேரக்டர்ல நடிக்கிறதைத் தப்பா பப்ளிசைஸ் பண்ண வேண்டாமே!''

''சினிமா லட்சியம் ஏதாவது?''

''என் இசையில் நான் பாடணும். முக்கியமா இசைஞானி இசையில் பாடியே ஆகணும்.''

''ஆண்ட்ரியாவின் நிஜ கேரக்டர்..?''

''ஒரே மாதிரி வாழ, ஒரே மாதிரி யோசிக்க என்னால முடியவே முடியாது. எதில் ஈடுபட்டாலும் அதில் முழுக்க மூழ்கிடுவேன். ஒரு விஷயத்தை நம்மளால நல்லா செய்ய முடியும்னு நம்பிக்கை வந்தா மட்டுமே அதைக் கையில எடுப்பேன். இல்லைன்னா, சிம்பிளா 'பை’ சொல்லிடுவேன். தினம் ஒரு இஞ்ச்சாவது என் இலக்கு நோக்கி முன்னேறிட்டே இருக்கணும்னு நினைப்பேன். நான் ரொம்ப நேர்மையான பொண்ணு. எதைப் பேசினாலும் 100 சதவிகிதம் உண்மையா பேசுவேன். ஆனா, இங்கே 99 சதவிகிதம் பேர் உண்மையா இல்லை. அதுதான் எனக்குப் பெரிய ஏமாற்றமா இருக்கு!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு