Published:Updated:

"இளைஞர்களே இந்தி கத்துக்கங்க!"

நா.கதிர்வேலன்

"இளைஞர்களே இந்தி கத்துக்கங்க!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

ரண்டரை நிமிடங்களுக்கும் குறைவான அந்த டிரெய்லரில் அத்தனை உணர்வுகள்... 'பர்ஃபி’ (BARFI)  பாலிவுட்டே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் சினிமா. ரன்பீர் கபூர், பிரியங்கா சோப்ரா, இலியானா ஆகிய ஸ்டார் நடிகர்களைக்கொண்டு மனித மனத்தின் மென் உணர்வுகளை சினிமா ஆக்கியிருக்கிறார் அனுராக் பாசு. க்ரீட்டிங் கார்டு ரசனையோடு அழகழகாகத் திரை பரவும் காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருப்பவர் ரவிவர்மன். 'வேட்டையாடு விளையாடு’, 'அந்நியன்’, 'தசாவதாரம்’ படங்களின் ஒளிப்பதிவாளர். குரலில் அவ்வளவு குதூகலம்...  

'' 'பர்ஃபி’ டிரெய்லருக்கே இந்தியாவின் முக்கியமான ஒளிப்பதிவாளர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவியுது. ரொம்ப சந்தோஷமா இருக்கு. அவ்வளவு பாராட்டுக்கும் உரியவர் அனுராக் பாசுதான். 'லைஃப் இன் எ மெட்ரோ’, 'கேங்ஸ்டர்’, 'மர்டர்’னு திகீர் படங்களா எடுத் துட்டு இருந்தவர், இப்படி ஒரு கதை சொன்னப்போ என்னால நம்பவே முடியலை!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"இளைஞர்களே இந்தி கத்துக்கங்க!"

இன்னிக்கு இந்தில ரன்பீர் கபூர் பிராமிஸிங் ஸ்டார். ராஜ்கபூரின் பேரன். ஆனா, அந்த பந்தா எதுவுமே இல்லாம இந்தப் படத்தில் நடிச்சிருக்கார். 'மூன்றாம் பிறை’ கிளைமாக்ஸ்ல ஸ்ரீதேவியைச் சிரிக்கவைக்க கமல் சேட்டை பண்ணுவாரே... அப்படிப் படம் முழுக்க நடிச் சிருக்கார். டைரக்ஷன் படிச்சவர். சஞ்சய் லீலா பன்சாலிகிட்ட உதவியாளரா இருந் திருக்கார். தினமும் ஒரு படம் பார்த்துடு வார். இத்தனை உச்சத்துல இருக்குறப்போ காது கேட்காத, வாய் பேச முடியாத பாத்திரத்தில் நடிக்க பெரிய தில் வேண்டும். அது அவர்கிட்ட இருக்கு.

பிரியங்கா பத்தி சொல்லவே வேணாம். 'மூன்றாம் பிறை’ ஸ்ரீதேவி மாதிரியான ரோல். ஒவ்வொரு ஃப்ரேம்லயும் ஆச்சர்யப்படுத்துறாங்க. இலியானா இந்தப் படத்தில்  முன்னைவிட அழகு. படத்துல இலியானா கொடுக்குற ஒவ்வொரு முத்தமும் ஒரு கவிதை.''

''அனுராக் பாசு ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவராச்சே... அதை எப்படிச் சமாளிக்கிறார்?''

''நோயால் பாதிக்கப்பட்டு இருக்கேன்னு அவர் சொன்னால்தான் தெரியும். வலியின் சின்ன வேதனையைக்கூடக் காட்டிக்க மாட்டார். 'எப்ப ட்ரீட்மென்ட் எடுத்துக்குறீங்க?’னு கேட்டா, சிரிச்சுட்டே அந்த இடத்தைவிட்டு விலகிடுவார். 'இப்ப உடம்பு எப்படி இருக்கு?’னு கேட்டா, 'அதெல்லாம் சரியாயிடுச்சு’னு சொல்லிட் டுப் போயிடுவார். யார்கிட்டயும் ஆறுத லையோ, அனுதாபத்தையோ எதிர் பார்க்க மாட்டார். ஆறு மணி ஷூட்டிங் குக்கு விடியற்காலை நாலு மணிக்கே வந்து நின்னு பரபரனு வேலை பார்ப்பார். ஒரு தலைவலிக்கே ஷூட்டிங்கை கேன்சல் செய்றவங்க மத்தியில, அனுராக் நிச்சயம் ஆச்சர்யம்! அவர் நல்லபடியா குணம் அடைஞ்சா, அது இந்தியாவுக்கே நல்லது.''

"இளைஞர்களே இந்தி கத்துக்கங்க!"

''இப்போதைய இளம் ஒளிப்பதிவாளர்களில் உங்க கவனத்தைக் கவர்ந்தவங்க யார்?''

''ஸாரிங்க... அப்படி என்னை யாரும் பெரிசா ஈர்க்கலை. ஒரு ஒளிப்பதிவாளருக்கு அழகு, இயக்குநரோடு ஒன்றிப்போய்ப் படம் பண்றது மட்டும்தான். ஆனா, இங்கே பல படங்களில் ஒளிப்பதிவு தனியா துருத்திக்கிட்டு தெரியுது.

இரான் சினிமாக்களின் தரம் எங்கேயோ போயிருச்சு. இங்கே சினிமா இன்னும் வியாபாரம்தான். நானும் இன்னும் பின் தங்கித்தான் இருக்கேன். ஆனா, ஒரு உண்மையைப் புரிஞ்சுக்கணும்... நாம சினிமாவை வெறும் வியாபாரமா மட்டும் பார்க்கும்போது அதில் உன்னதத்தை எதிர் பார்க்கக் கூடாது. இளம் ஒளிப்பதிவாளர்களில் பெரிசா சாதனை செய்தவர்கள்னு என்னால் யாரையும் குறிப்பிட முடியலை. மன்னிச்சுருங்க.''

"இளைஞர்களே இந்தி கத்துக்கங்க!"

''ஆனா, தமிழக ஒளிப்பதிவாளர்கள்தான் பாலிவுட் சினிமாவை ஆள்றாங்க... என்ன காரணம்?''

''நல்லா உழைப்பாங்க. அதிகமா உழைச்சா யாருக்குத்தான் பிடிக்காது? அப்படித்தான்! நம்மளை அங்கே நிரூபிக்கணும்னு ரொம்ப வெறியா வேலை பார்ப்பாங்க. ஆனா, யார் சொன்னதையோ கேட்டுக்கிட்டு இந்தி கத்துக்காமவிட்டதை நினைச்சு இப்போ ரொம்ப வருந்துறேன். ஆங்கிலத்தில் பேசிச் சமாளிச்சாலும் உள்ளே ஒரு நெருடல் இருந்துட்டே இருக்கு. இனிமே இங்கே இருந்து மும்பை போற ஒளிப்பதிவாளர்கள் இந்தி கத்துக்கிட்டா ரொம்ப நல்லது.''

''தமிழுக்கு மறுபடி எப்போ வருவீங்க?''

''நீங்க சென்னைல இருந்து டெல்லி போகணும். அதுக்காக டிரெய்ன் டிக்கெட் டும் தர்றாங்க... ஃப்ளைட் டிக்கெட்டும் தர்றாங்க... நீங்க எதுல போவீங்க? ஃப்ளைட்லதானே! அப்ப என்னை மட்டும் ஏன் டிரெய்ன்ல வரச் சொல்றீங்க? ஃப்ளைட்ல பறக்க ஆசைப்படுறவனை டிரெய்ன்ல கூப்பிடுறீங்களே... ஏன் சார்?''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism