Published:Updated:

''சினிமாவுக்குப் படிப்பு அவசியம்!''

சார்லஸ், படங்கள் : கே.கார்த்திகேயன்

''சினிமாவுக்குப் படிப்பு அவசியம்!''

சார்லஸ், படங்கள் : கே.கார்த்திகேயன்

Published:Updated:
##~##
'ஸ்
ரேயாவுக்கு சினிமா பற்றி இவ்வளவு தெரியுமா?’

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சென்னை ஐ.ஐ.டி கல்லூரியின் 'சாரங்’ கலாசார விழாவில் சினிமா பற்றி சிறப்புரை கொடுக்க வந்திருந்த விருந்தினர்... ஸ்ரேயா! மாணவப் பட்டாளத்தின் எண்ணிக்கை 1,000 அப்புறம் 1,500 என அதிகரிக்க... இட நெருக்கடியால் பெரிய அரங்கத்துக்கு கடைசி நேரத்தில் மாறியது ஸ்ரேயாவின் லெக்சர்!

''இந்தியாவில் தமிழ் சினிமா இண்டஸ்ட்ரிதான் இரண்டாவது பெரிய மார்க்கெட். இந்தி சினிமா ரசிகர்களைப்போலவே தமிழ் சினிமா ரசிகர்கள் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஐரோப்பா, வட அமெரிக்கா எனப் பல நாடுகளில் பரவி இருக்கிறார்கள். 'காளிதாஸ்’ துவங்கி தமிழ் சினிமா இன்று வரை 80 வருடங்களைக் கடந்து வந்திருக்கிறது. இன்று வரை இந்தியாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நடிப்பை யாராலும் மிஞ்ச முடியவில்லை. எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் சினிமா மூலம் அரசியலுக்கு வந்து நாட்டை ஆள முடியும் என்று நிரூபித்தவர்கள். இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர் கமல்ஹாசன், இந்தியாவின் சிறந்த இசையமைப்பாளர்- ஆஸ்கர் விருது பெற்றவர் ஏ.ஆர்.ரஹ்மான்... இவர்கள் அனைவருமே தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோய் இருக்கிறார்கள்!'' என்று தமிழ் சினிமா பற்றி ஸ்ரேயா பேசப் பேச... மாணவர்கள் முகங்களில் ஆச்சர்ய ரேகைகள்.

''சினிமாவுக்குப் படிப்பு அவசியம்!''

கேள்வி நேரம் துவங்க, ''பெர்சனல் கேள்விகள் வேண்டாம்... சினிமா பற்றி என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்!'' என்று கண்டிஷன் சொல்லி அமர்ந்தார் ஸ்ரேயா.

''உங்களுக்குத் தெரியாத மொழிகளில்தான் நீங்கள் அதிகம் நடிக்கிறீர்கள். நன்றாக நடிக்க வேண்டும் என்றால், மொழி தெரிந்திருக்க வேண்டாமா? அப்போதுதானே சரியான எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்க முடியும்?''

''சினிமாவுக்குப் படிப்பு அவசியம்!''

''மொழி தெரிந்திருக்க வேண்டியது அவசியம். ஆனால், கட்டாயம் கிடையாது. கலை என்பது மொழிகளைக் கடந்தது. நான் என்ன காட்சியில் நடிக்கப்போகிறேன், என்ன வசனம் பேசப்போகிறேன் என்பதை முன்கூட்டியே டைரக்டர்களிடம் கேட்டு வாங்கிவிடுவேன். ஒவ்வொரு வார்த்தைக்கும் அர்த்தத்தைக் கேட்டு தெரிந்துகொண்டு, வசனத்தை மனப்பாடம் செய்த பிறகே நடிப்பேன். நாம் என்ன பேசப்போகிறோம் என்பது தெரிந்துவிட்டாலே, நல்ல எக்ஸ்பிரஷன்ஸோடு நடிக்க முடியும்!''  

''சினிமாவுக்குள் நுழைய என்ன தெரிந்திருக்க வேண்டும்?''

''நல்ல ஸ்க்ரிப்ட்டும், சினிமா மேக்கிங்கும் தெரிந்திருந்தால் போதும். முன்புபோல் பல வருடங்கள் உதவி இயக்குநராக இருக்க வேண்டியது இல்லை. மணிரத்னம், மதுர் பண்டார்கர் போன்றோர் உதவி இயக்குநராக வேலை செய்யாமலேயே, இயக்குநர் ஆனவர்கள்தான். அவர்களை ரோல் மாடலாக எடுத்துக்கொள்ளுங்கள்!''

''நன்றாகப் படித்திருக்கிறீர்கள். திறமையான கதக் டான்ஸர். ஏன் டான்ஸை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தீர்கள்?''

''ஏன்... நன்றாகப் படித்தவர்கள் சினிமாவுக்கு வரக் கூடாதா? சினிமாவுக்குப் படிப்பும் அவசியம். டான்ஸ் என்பது சின்ன வட்டம்தான். சினிமா என்பது மிகப் பெரிய ஏரியா. எல்லோருக்குமே 'அதிகமாக சாதிக்க வேண்டும்’, 'அதிகமாகப் புகழ் பெற வேண்டும்’ என்று ஆசை இருக்கும். எனக்கும் அந்த ஆசை உண்டு.

''சினிமாவுக்குப் படிப்பு அவசியம்!''

அதனால்தான் சினிமாவுக்கு வந்தேன். டான்ஸராக மட்டுமே இருந்திருந்தால், இன்று இப்படி உங்கள் முன் நான் நின்று பேசிக்கொண்டு இருக்க மாட்டேன்!''

''சினிமாவில் நீங்கள் கற்றுக்கொண்ட பாடம்?''

''வெற்றி பெற்றால் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவார்கள். ஒரு தோல்வி வந்தாலும், தூக்கிக் கடாசிவிடுவார்கள். அதனால், வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும், காலை எப்போதுமே தரையிலேயே வைத்திருக்க வேண்டும். இதுதான் சினிமாவில் எல்லோரும் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!''