Published:Updated:

''எனக்கு பிட் அடிக்கத் தெரியாது!''

எஸ்.கலீல்ராஜா

''எனக்கு பிட் அடிக்கத் தெரியாது!''

எஸ்.கலீல்ராஜா

Published:Updated:
##~##
பே
ட்டி என்று ஓவியாவின் செல் எண் தட்டினால், 'கறுப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு! (டொண்டொய்ங்... டொண்டொய்ங்!)’ என்று ரீங்காரிக்கிறது ரிங்டோன். ''இப்பவும் ஏன் இந்தப் பாட்டு வெச்சிருக்கீங்க?'' என்று எனது ஆச்சர்யத்தையே முதல் கேள்வி ஆக்கி னால், ''தமிழ்நாட்டுக்கே பிடிச்ச பாட்டு. அது வும் நீங்கள்லாம் கொஞ்சூண்டு கறுப்பா, நிறைய அழகா இருக்கீங்க... உங்களை ஐஸ் வைக்கத்தான்... எப்படி நம்ம ஐடியா?'' - கலகலவெனக் கலாய்க்கிறார் ஓவியா.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'' 'களவாணி’க்கு அடுத்து இந்தப் பக்கம் ஆளே காணோம்?!''

''கன்னட 'களவாணி’, தெலுங்கு 'கள வாணி’ன்னு எல்லா ரீ-மேக்கிலும் நான்தான் ஹீரோயின். திரும்பவும் தாவணி கட்டிக்கிட்டு, சைக்கிள் ஓட்டிக்கிட்டே இருக்கேன். ஒரே கேரக்டரைத் திரும்பத் திரும்பப் பண்ணுறப்போ, இன்னும் அழகாப் பண்ண முடியுது. தமிழ் 'களவாணி’யைவிட அங்கே இன்னும் பெட்டர் பெர்ஃபார்மன்ஸ் கொடுக்கணும்ல!''

''எனக்கு பிட் அடிக்கத் தெரியாது!''

''ஏன் 'மன்மதன் அம்பு’ படத்துல அவ்வளவு சின்ன ரோல்ல நடிச்சீங்க?''

''என்ன சொல்ல? கமல், கே.எஸ்.ரவிக் குமார் பெரிய டீம். அதனால்தான், கேட்டதும் கால்ஷீட் கொடுத்தேன். ஷூட்டிங்கில் ரொம்ப எதிர்பார்ப்போட கலந்துக்கிட்டேன். ஆனா, படம் பார்த்துட்டு எல்லாரும் என் கிட்ட துக்கம் விசாரிக்குறாங்க. எனக்கு என்ன பதில் சொல்றதுன்னே தெரியலை. இந்தக் கேள்விக்கு டைரக்டர்தான் பதில் சொல்லணும். இதுக்கு மேல் 'மன்மதன் அம்பு’ பத்தி நான் பேச விரும்பலை!''

''எனக்கு பிட் அடிக்கத் தெரியாது!''

''நீங்களும் அமலா பாலும் ஒரே நேரத்தில் வந்தீங்க. ஆனா, அமலா பால் நிறையப் படங்களில் கமிட் ஆகிட்டாரே?''

''அது அவரோட ஸ்டைல். ஸ்லோவா வந் தாலும் ஸ்டெடியா வரணும். அதுதான் என் பாலிஸி. சினிமாவில் வெற்றிதான் பேசப்படும். ஒரு படத்தில் சறுக்கினாலும், ஹீரோயின்களை முத்திரை குத்தி வெளியே அனுப்பிருவாங்க. இப்பவும் நிறையப் புது இயக்குநர்கள் எனக்கு கதை சொல்லிட்டு இருக்காங்க. நல்ல கேரக் டர் இருக்கான்னுதான் தேடிட்டே இருக்கேன். சிக்குனா... சிக்ஸர்தான்!''

''இன்னும் படிப்பு ஓடுதா?''

''ஆமாங்க.. திருச்சூர் விமலா காலேஜ்ல இங்கிலீஷ் லிட்ரேச்சர் ஃபைனல் இயர் படிச் சுட்டு இருக்கேன். ஆனா, எக்ஸாமுக்கு மட் டும்தான் எட்டிப்பார்ப்பேன். நான் ஒரு ஆவரேஜ் ஸ்டூடன்ட்தான். இப்போ சுத்தமா காலேஜும்  போறது இல்லை. அரியர் வைக்காம பாஸ் பண்ணணும்னு முட்டி மோதிப் படிச்சுட்டு இருக்கேன். ஏன்னா... பிட் அடிக்குற அளவுக்கு எனக்கு சாமர்த்தியம் கிடையாது!''

''எனக்கு பிட் அடிக்கத் தெரியாது!''

''அப்புறம்... பிப்ரவரி 14-க்கு என்ன பிளான்?''

''கோயம்புத்தூர்ல ஒரு காலேஜ் ஃபங்ஷனுக்குக் கூப்பிட்டு இருக்காங்க. அதுக்குப் போகணும். ப்ச்... நீங்க அந்த அர்த்தத்துல கேக்குறீங்களா?

அட, நீங்க வேற... நான் படிக்கிறது கேர்ள்ஸ் காலேஜ். ஒரே ஒரு பையன் முகத் தைக்கூட அந்த கேம்பஸ்ல  பார்க்க முடியாது. ஹூம்... இந்தக் காதலர் தினமும் எனக்கு 'யெட் அனதர்  டே’தான்!''