Published:Updated:

"ஒருத்தன் நல்லவன்... இன்னொருத்தன் வல்லவன்!"

நா.கதிர்வேலன்

"ஒருத்தன் நல்லவன்... இன்னொருத்தன் வல்லவன்!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

'பசங்க’, 'வம்சம்’, 'மெரினா’ எல்லாத்திலும் காதல் போர்ஷன் நல்லாயிருந்தது. ஆனா, ரொம்பக் கம்மியா இருந்ததுனு நிறையப் பேர் என்கிட்டே சொன்னாங்க. அதனால் சிரிக்கச் சிரிக்க செம ஜாலியா ஒரு காதல் படம் பண்ணலாம்னு தோணுச்சு. எல்லாரும் காதல் படம் எடுத்துட்டாங்க. ஆனாலும், காதல் யாருக்கும் என்னைக்கும் அலுக்காது. இது ஒண்ணும் புதுக் கதை இல்லை. ஆனா, அழகா, கலர்ஃபுல்லா கதை சொல்றேன். சந்தோஷமா பார்க்கலாம்!'' - தாடியை வருடியபடி சுகமாகப் பேசுகிறார் இயக்குநர் பாண்டிராஜ். அவரின் அடுத்த படைப்பு... 'கேடி பில்லா கில்லாடி ரங்கா!’

''காதலைச் சொல்றது ஓ.கே... கதை என்னன்னு சொல்ல மாட்டீங்களா?''

''எல்லாமே இருக்கு. அப்பா, அம்மா இருக்கும்போது நமக்குப் பாசம் புரியலை. எல்லாத்துக்கும் 'திட்டுறாங்க’னு சொல்லிட்டு ஒதுங்கிடுறோம். 'ஏன் மெட்ராஸில் சாப்பிடாமப் போய்க் கெடக்கே?’னு அக்கறையா விசாரிச்ச என் அப்பா, அம்மா... நான் ஜெயிச்சு வந்த பின்னாடி இல்லை. அப்படிப் பாசமான அப்பா, அம்மா வுக்குத் தனிப்பட்ட முறையில் மரியாதை செய்ய நினைச்சேன். அதே மாதிரி புள்ளைங்க மேல் பாசமா இருக்கும் ஒவ்வொரு அப்பா, அம்மாவுக்கும் இந்தப் படம் கௌரவத்தைக் கொடுக்கும். இரண்டு ஹீரோ... அதில் ஒரு

"ஒருத்தன் நல்லவன்... இன்னொருத்தன் வல்லவன்!"

வல்லவன், ஒரு நல்லவன். இரண்டு ஹீரோயின்கள். ஒண்ணு... மெல்லினம், இன்னொண்ணு... இடையினம். இரண்டு நண்பர்கள், ஒருத்தன் விடாக்கண்டன், மத்தவன் கொடாக்கண்டன். இரண்டு வில்லன் கள், ஒருத்தன் வீராதி வீரன், இன்னொருத்தன் சூராதி சூரன். சிரிச்சுக்கிட்டே மட்டும் போயிட முடியாது. இயல்பா, சுவாரஸ்யமா மனித உணர்வுகளைப் பேசவும்வைக்கிறேன்.''

''ஆனா, 'பசங்க’ பாண்டிராஜை இதில் பார்க்க முடியலையே?''

''எனக்குக் குழந்தைகளைப் பிடிக்கும். அவங்களுக்கு நாம் எதுவுமே செய்யறது இல்லை. படிக்கிற ஸ்கூலில் இருந்து, போட்டுக்கிற டிரெஸ், படிக்கிற பாடம் வரை கல்யாணம் செஞ்சுக்குற பொண்ணு வரைக்கும் எல்லாத்தையும் நாமதான் தீர்மானிக்கிறோம். நாம பார்க்கிற சினிமாவைத் தான் அவங்களும் பார்க்குறாங்க. சுட்டிவிகடன் மாதிரி பசங்களுக்கும் தனியா சினிமா வேணும். இன்னும் நிறைய செய்ய ஐடியா இருக்கு. அதே சமயம், 'இவனுக்கு இதுதான் தெரியும்போல’னு யாரும் சொல்லிடக் கூடாது. ஒரு அருமையான குழந்தைகள் படத்துக்கு ஸ்க்ரிப்ட் ரெடியா இருக்கு. பெரிசா மனசைத் தொடும். அதுக்கும் முன்னாடி கமர்ஷியலா என்னை இன்னும் கொஞ்சம் நிலைநிறுத்திக்க வேண்டி இருக்கு. கொஞ்ச காலம் தேவைப்படுது. அது வந்ததும் நிச்சயம் குழந்தைகளுக்கான படத்தை எடுப்பேன்!''

''விமல், சிவகார்த்திகேயன் காம்பினேஷன் எப்படி இருக்கு?''

''விமலையும் சிவகார்த்திகேயனையும் வெச்சு சோஷியல் சர்வீஸ் பண்ண முடியாது. முதல் நாள் முதல் சந்திப்பிலேயே அவங்க ரகளை தாங்க முடியலை. அவங்க ரகளையோட சேர்த்து, வீராங்கனை, யோசனவாதி,

"ஒருத்தன் நல்லவன்... இன்னொருத்தன் வல்லவன்!"

சின்ரு, டர்ரு, பொக்குசுனு ஏகப்பட்ட கேரக்டர்கள் இருக்கு. திருச்சி பொன்மலையை ஏன் இதுவரை யாரும் லொகேஷனாத் தேர்ந்தெடுக்கலைனு ஆச்சர்யமா இருக்கு. அப்படி ஓர் அழகான ஏரியா. நிஜமாவே எனக்கு விமல், சிவகார்த்திகேயனோட சேர்ந்து அருள்நிதியையும் வெச்சுப் படம் பண்ண ஆசை. ஆனா, அதுக்கேத்த மாதிரி கதை அமையலை. எல்லாரும் பிரியமா நான் சொல்றதைக் கேட்டுக்குவாங்க. நல்ல பசங்க... நல்லா உழைக்கிறாங்க. நிச்சயம் நல்ல நிலைமைக்கு வந்திருவாங்க!''

''பிந்துமாதவி, ரெஜினானு 'கலகல’னு ரெண்டு பொண்ணுங்க இருக்காங்களே?''

''எனக்கு பிந்துமாதவியோட கண்கள் ரொம்பப் பிடிக்கும். அவங்க கண் அழகுக்காகவே சில ஷாட்களை வெச்சிருக்கேன். ஹீரோயின்களை எக்ஸ்போஸ் பண்றதில் எனக்கு விருப்பம் இல்லை. அவங்க திறமையை

"ஒருத்தன் நல்லவன்... இன்னொருத்தன் வல்லவன்!"

மட்டும்தான் நான் கணக்கில் எடுத்துப்பேன். அதனால், பிந்துமாதவி, ரெஜினா இரண்டு பேருக்கும் நல்ல வேலை காத்திருக்கு. ஜாலியா டைட்டில் வெச்சுட்டு அதுக்கு ஏத்த மாதிரி இரண்டு பொண்ணுங்களைப் பிடிக்கலைன்னா எப்படி?''

''புதுசா யுவன் பக்கம் வந்துட்டீங்க?''

''எனக்கு முதல் படத்தில் இருந்தே யுவனுடன் வொர்க் பண்ண ஆசை. காதல் பாட்டுகளை அவர் பிரசென்ட் பண்ற விதம் அவ்வளவு அழகா இருக்கும். படத்தை ஃபுல்லா எடுத்து முடிச்சிட்டு, அவர்கிட்ட காட்டப்போறேன். எங்கே பாட்டு வேணும்னு அவரே முடிவு பண்ணட்டும். சரிதானே!''