Published:Updated:

"ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

நா.கதிர்வேலன்

"ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

'த்ரிஷாவுக்குக் கல்யாணம்... கன்ஃபர்ம்!’ - இண்டஸ்ட்ரி வதந்தி. த்ரிஷாவிடமே கேட்டுவிடலாமே!

    ''எப்போ கல்யாணம்?''

''கல்யாணத்துக்கு இப்போ என்ன அவசரம்? நாளாக நாளாக எனக்கு சினிமா ரொம்பப் பிடிக்குது. இன்னும் நிறையப் படம் பண்ணணும், நல்ல நல்ல கேரக்டர் பண்ணணும்னு ஆசையா இருக்கு. அதனால இப்போ கல்யாணம் இல்லவே இல்லை. ஆனா, நிச்சயம் ஒரு நாள் பண்ணிப்பேன்!''

''சரி... யாரைக் கல்யாணம் பண்ணிப்பீங்க?''

''ம்ம்ம்... ஓ.கே... என் வாழ்க்கையில் ஒருத்தருக்கு ரொம்ப ஸ்பெஷல் இடம் இருக்கு. அது உண்மை. ஆனா, இப்போ இதுக்கு மேல எதுவும் பேச வேணாம். இப்பவே பல விஷயங்களைப் பேசினா, அது ரொம்ப சீக்கிரமாப்

"ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

பேசுற மாதிரி இருக்கும். சில விஷயங்கள் என் மனசுக்குள் இருக்கு. இன்னும் தெளிவா சொல்லணும்னா, சில விஷயங்களில் எனக்கே கொஞ்சம் தெளிவு தேவைப்படுது. நான் எதையும் மறைக்க மாட்டேன். அது உங்களுக்கே தெரியும்!''

''தெலுங்கு நடிகர் ராணாவும் நீங்களும் எந்த அளவுக்கு நெருக்கம்... உங்க ரெண்டு பேரையும்தான் விடாமத் துரத்துது வதந்தி...''

''10 வருஷமா நாங்க ரொம்ப நல்ல ஃப்ரெண்ட்ஸ். தி.நகர்ல அடுத்தடுத்த வீட்ல இருக்கோம். யெஸ்... ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். ஏன்னா, எதையும் அவர்கிட்ட என்னால ஷேர் பண்ணிக்க முடியும்.  என்னைப் பத்தி அவருக்கு எல்லாமே தெரியும். எனக்கும் அவருக்கும் நல்ல வேவ்லெங்த் இருக்கு. என் கேங்கும் அவர் கேங்கும் சேர்ந்து இப்ப ரொம்பப் பெரிய கேங்க் ஆகிட்டோம். கிட்டத்தட்ட 10 வருஷமா சேர்ந்தேதான் வளர்ந்தோம். ஆனா, இப்போதான் நாங்க சேர்ந்து சாப்பிட்டாக்கூட நியூஸ் ஆகிடுது. அவர் சினிமாவில் நடிக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவரோட நான் இப்ப இருக்குற மாதிரிதான் பழகிட்டு இருக்கேன். ஆனா, இப்போ அதை ஸ்கூப் நியூஸ் மாதிரி சொல்றாங்க. தெலுங்கு சினிமாவின் லெஜன்ட் ராம்நாயுடு சாரோட பேரன் ராணா. ஆனா, அந்தக் குடும்பத்தின் எந்த அடையாளமும் இல்லாம ரொம்ப ஈஸியா இருப்பார். ராணாவை நான் நம்புற மாதிரியே, அவரும் என்னைப் புரிஞ்சுட்டு இருக்கார்.''

''உங்க பாலிவுட் என்ட்ரி எதிர்பார்த்த வெற்றி அடையலையே, ஏன்?''

''என்னை சினிமாவுக்குக் கொண்டுவந்தவர் பிரியதர்ஷன் சார். அவரோட ஒரு இந்திப் படத்தில் வேலை பார்க்கக் கிடைச்ச வாய்ப்பைப் பயன்படுத்திக்கிட்டேன். அப்போ எனக்கு அங்கே கொஞ்சம் நண்பர்கள் கிடைச்சாங்க. அவ்வளவுதான். மத்தபடி அடுத்தடுத்து பாலிவுட் படம் நடிக்கணும்னு எனக்கு எந்த எண்ணமும் இல்லை. அங்கே ஜெயிக்க அங்கேயே தங்கி இருக்கணும். அதில் எனக்கு விருப்பம் இல்லை. இங்கே இப்படி நான் இருக்கிறதே எனக்குப் போதும்!''

"ராணா எனக்கு ரொம்ப ரொம்ப ஸ்பெஷல்!"

''உங்களுக்கும் நயன்தாராவுக்கும் ஏதேதோ பிரச்னைனு சொன்னாங்க. ஆனா, இப்ப திடீர்னு நீங்க நெருக்கமாகிட்டீங்கபோல?''

''அப்படி ஒண்ணும் எங்களுக்குள்ள பெரிய சண்டை எதுவும் இல்லை. சின்ன விஷயத்தைப் பெரிசு பண்ணிட்டாங்க. அந்தச் செய்தி மேலும் மேலும் டெவலப் ஆகாம நாங்களே ஃபுல்ஸ்டாப் வெச்சிட்டோம். பழகினா நயன் மாதிரி ஒரு ஃப்ரெண்ட்டைப் பார்க்க முடியாது. இனி நாங்க எப்பவும் ஃப்ரெண்ட்ஸ்!''