Published:Updated:

ஏவி.எம்மின் புதிய பாதை!

நா.கதிர்வேலன்

ஏவி.எம்மின் புதிய பாதை!

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##
''வா
த்தியார் கரும்பலகையில் எழுதி எழுதித் திருத்துவதைப்போலத்தான் இந்த சினிமா டிரெண்டும். அப்படி இப்போதைய டிரெண்டுக்கு ஒரு சினிமா ஏவி.எம் நிறுவனத்தில் இருந்து வெளி வரணும்னு சரவணன் சார் ஆசைப் பட்டார். இந்தப் படம் ஏவி.எம் நிறுவனத் தின் 175-வது தயாரிப்பு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த முக்கியத் தருணத்தில் அவங்க நினைச்சால், ரஜினி, கமல், விஜய்னு கொண்டாந்து நிக்கவெச்சு பெரிய அளவில் விளம்பரங்கள் கொடுத்து ஒரு படம் பண்ண முடியும். ஆனா, இப்போதைய டிரெண்டுக்கு மதிப்பு கொடுத்து, என் கதை யைக் கவனமாகக் கேட்டாங்க. 'எங்க பேனருக்கும்,

ஏவி.எம்மின் புதிய பாதை!

உங்களுக்கும் விலாசமா இந்தப் படம் இருந்தால், அதுவே போதும்!’னு சுருக்கமாகச் சொல்லி, எனக்கு அனுமதி தந்தாங்க!'' - நிதானம் ததும்பும் குரலில் பேசுகிறார் 'முதல் இடம்’ படத்தின் அறிமுக இயக்குநர் ஆர்.குமரன். சுந்தர்.சி -யின் சீடர்.

இடைவேளைகளுக்குப் பிறகு 'முத்திரை’ படங்களை அளிக்கும் ஏவி.எம் நிறுவனத் தின் 175-வது முத்திரை முயற்சி 'முதல் இடம்’!

'' 'முரட்டுக் காளை’, 'சகலகலா வல்லவன்’, 'ஜெமினி’ என ஏவி.எம் நிறுவனம்தான் டிரெண்ட்டுகளை உருவாக்கும். ஆனால், இந்த முறை டிரெண்டின் பாதையில் அவங்க

ஏவி.எம்மின் புதிய பாதை!

பயணம் அமைஞ்சிருக்கே...''

''இந்தப் படமும் நிச்சயம் ஒரு டிரெண்ட் செட்டர் முயற்சிதான். கதைக் களம் தஞ்சாவூர். 'களவாணி’ படம் தஞ்சை மாவட் டத்தின் ஒரு கிராமத்தை மையம்கொண்ட கதை. இது தஞ்சை நகரத்தையே சுத்தி நடக்கும் கதை. நாம எல்லோரும் ஒரு இடத்துக்கு வந்து சேரணும்னு ஆசைப் படுவோம். சிலருக்கு அது நடக்கும். அநேகம் பேர் எதிர்பாராத திசையில் பயணித்து, எங்கோ நிலைகொண்டு நிற்பாங்க. நம்ம ஹீரோ யாரும் யோசிக்காத இடத்துக்குப் போக ஆசைப்படுறான். அந்த இடத்துக்குப் போக அவனுக்கு இருந்த தடைகளை, சென்டி மென்ட், ஆக்ஷன், காமெடின்னு எப்பவும் ரசிக்கப்படுகிற ஒரு காம்பினேஷனில் சொல்லி இருக்கோம்.

இன்றைய ஆடியன்ஸுக்கு கதை ரொம்பப் பாரமா, பயங்கரமா யோசிக்கிற வகையில் இருக்கக் கூடாது. அதே சமயம், கதை விஷயத்தில் இயக் குநர் சமரசம் செய்து கொள்ளவும் கூடாது. ஓர் இயக்குநர் தன்னை நிரூபித்து நிலை நிறுத்திக்கொள்வது அந்த இடம்தான். அதில் நான் தெளிவா இருக்கேன்!''

''விதார்த், இசையமைப்பாளர் இமான்னு அப்படியே 'மைனா’வின் வெற்றிக் கூட்டணியைக் கடத்திட்டு வந்துட்டீங்க போல?''

''கேரக்டருக்காகத் தன்னை எந்த அளவுக்கும் வருத்திக்கும் ஹீரோ கேரக்டருக்கு விதார்த் கச்சிதமாகப் பொருந்தினார். 'மைனா’ மூலம் அவர் முகமும் அறிந்த முகமாக இருக்கிறது. 'மைனா’ பாடல்களை யாரும் கேட்காமல் இருக்க முடியாது. சரவணன் சார் என்கிட்ட, 'எங்க படங்களில் பாடல்களுக்குப் பெரிய இடம் இருக்கு. அதை மட்டும் கவனத்தில் வெச்சுக்கங்க’ன்னு சொன்னார். 'இமான் நல்ல சாய்ஸ்’னுசொல்லவும், உடனே ஓ.கே

ஏவி.எம்மின் புதிய பாதை!

சொல்லிட்டார். அஞ்சு பாட்டும் அழகு. அதில் ஒரு பாட்டுக்கு, 'சம்பளமே வேண்டாம். நான் டான்ஸ் பண்றேன்’னு சொல்லி தினேஷ் மாஸ்டர் செய்துகொடுத்தார்.

'சீண்டாதே 
செல்லா செல்லா...
இங்கே வாந்தே
இங்கே வாந்தே’னு
தஞ்சை வட்டார பாஷையில் பாடல்களைப் பின்னி இருக்கார் கவிஞர் அறிவுமதி.

ஏவி.எம்மின் புதிய பாதை!

ஹீரோயினாக, புதுமுகம் கவிதா நாயர். 'பழசிராஜா’ இயக்குநர் ஹரிஹரன் தனது அடுத்த படத்துக்கு செலெக்ட் பண்ணிவெச்சிருந்த பொண்ணு. நாங்க ஆசைப்பட்டுக் கேட்டதால், விட்டுக்கொடுத்தார்.  

நல்ல வைப்ரேஷனோடு ஷூட்டிங் தொடங்கிட்டோம். ராஜராஜன் நினைவுத் தூண் ஒண்ணு செட் போட்டு இருந்தோம். அப்ப, அந்தப் பக்கம் கடந்து போன அமைச்சர் உபயதுல்லா, அதை உண்மைன்னு நம்பி இறங்கிப் பார்த்திருக்கிறார். உள்ளூர்க்காரரையே அசத்துற அளவுக்கு செட் அமைஞ்சிருந்தது, சந்தோஷமா இருந்தது. உற்சாகமா வேலை பார்த்துட்டுஇருக்கோம்!'' சந்தோஷமாகச் சிரிக்கிறார் ஆர்.குமரன்!