Election bannerElection banner
Published:Updated:

'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்!'

ஆர்.சரண்

##~##

"வாழ்க்கை அடுத்தடுத்த நிமிஷங்கள்ல சந்தோஷங்களையும் கண்ணீர்த் துளிகளையும் ஒளிச்சுவெச்சிருக்கு. வலிகளையும் சந்தோஷத்தையும் அதன் போக்கில் ஏத்துக்கிட்டா, இங்கே எந்தப் பிரச்னைக்கும் இடம் இல்லை.'' - தாடி வருடிக் கவிதையாகப் பேசுகிறார் பி.கின்ஸ்லின். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பாசறையில் இருந்து அடுத்த அறிமுகம். முருகதாஸின் தம்பி திலீபன்-அஞ்சலி காம்பினேஷனில் 'வத்திக்குச்சி’ பத்தவைக்கிறார் கின்ஸ்லின்.

'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்!'

'' ஜிவ்வுனு 'வத்திக்குச்சி’னு ஒரு டைட்டில் சூப்பரா இருக்கே...''

''பார்த்ததும் பத்திக்கும். அப்படி ஒரு படம். சென்னைதான் களம். ஆனா, 'ப்ளாக் சினிமா’ன்னு சென்னையின் இருண்ட பக்கத்தைப் புரட்டுற வேலை இல்லை. சென்னையில் ரசிக்கும்படியான ஏகப்பட்ட ஏரியாக்கள் இருக்கு. சென்னைன்னா, தி.நகர், அடையார் மட்டுமே இல்லை... புறநகர்ப் பகுதிகளில் அவ்வளவு வாழ்க்கை அழகழகா கொட்டிக்கிடக்கு. ஊருக்குள் வர்றதுக்காக ஷேர் ஆட்டோவுல 30 கிலோ மீட்டர்லாம் டிராவல் பண்ற லட்சம் பேர் இங்கே இருக்காங்க. அவங்க தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்னு நீங்க யோசிச்சு இருக்கீங்களா? அதுதான் 'வத்திக்குச்சி’.''  

'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்!'

''அஞ்சலி செம டஃப் குதிரை. அறிமுக திலீபன் சமாளிக்க முடியுமா?''

''நல்லாக் கவனிச்சீங்கன்னா புரியும்... ஒவ்வொரு காதலியுமே டஃப் குதிரைதான். அவங்களைச் சமாளிக்க ஒவ்வொரு காதலனும் திக்கித் திணறித் திண்டாடுறான். அதே திண்டாட்டம் திலீபனுக்கும் இந்தப் படத்துல இருக்கு. ஆனா, சூப்பரா சமாளிச்சுட்டார். தான் உண்டு தன் வேலை உண்டுன்னு ஆர்ப்பாட்டமே இல்லாம வாழ்ற ஒரு ஷேர் ஆட்டோ டிரைவர் கேரக்டர். அவர் ஆட்டோவுல ரெகுலர் சவாரி வர்ற அட்ராசிட்டி அழகி அஞ்சலி!''

''அப்போ இதிலும் 'எங்கேயும் எப்போதும்’ அஞ்சலி அப்படியே இருப்பாங்களா?''

''கிடையவே கிடையாது. இந்தப் படத்தோட ஹீரோயின் லோயர் மிடில் க்ளாஸ் பொண்ணு. ஆனா, சிட்டி சென்டர், எக்ஸ்பிரஸ் அவென்யூ, காபி டேனு அலப்பறை கொடுக்குற பந்தா பார்ட்டி. அதுக்காகவே உண்டியலை உடைப்பா, அப்பா பர்ஸ்ல பைசா லவட்டுவா, ஹை க்ளாஸ் பொண்ணுங்களை இமிடேட் பண்ணி  டி -ஷர்ட், ஜீன்ஸ், லெக்கிங்ஸ், மேக்-அப்னு சீன் போடுவா. ஒரிஜினல் பேரு மீனா. ஆனா, மாடர்னா லீனானு மாத்திவெச்சுக்குவா. கேங்கா காபி ஷாப் போயி செம பந்தாவா ஐரிஷ் காபி ஆர்டர் பண்ணுவா. ஆனா, 'ஒன் பை ஃபோர்’னு சொல்லி பல்பு வாங்குவா. அஞ்சலியின் அட்ராசிட்டிகளில் இது புது வெரைட்டி.''

'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்!'

''ஆனா, 'காதல்’ மட்டுமே போதுமா?''

'ஒரு ஐரிஷ் காபி... ஒன் பை ஃபோர்!'

''நம்ம எதிரிகள் வெளில எங்கோ ஒரு ஆளா எப்பவும் இருக்கிறதில்லை. நம்ம கூடவே பழகிட்டு ஒண்ணா இருந்தவன்தான் கழுத்தை அறுப்பான். கி.ரா. மனுஷப்பய புத்தியைப் பத்தி இப்படிச் சொல்லுவாரு... 'பழகுனது, வந்தது, தின்னது, கொடுத்தது, கொண்டது, எல்லாத்தையும் மறந்துருவான்... இப்போ திங்கிறதுக்கு ஒன்ணும் தரலியேங்கிறதுக்காகத் தலையைச் சீவப் புறப்பட்டுருவான்’னு. அது மாதிரி வாழ்க்கையில நம்மைச் சுத்தி இருக்குறவங்கதான் ஆபத்தானவங்க. இந்த அரசியல்தான் படத்தோட மையம். என் குரு முருகதாஸ் சார் 'எப்பவும் நம்ம படங்கள்ல ஏதோ ஒரு பாசிட்டிவ் எனர்ஜி இருக்கணும்’னு சொல்வார். உலகம் எத்தனை பயங்கரமானது. ஆனா, குழந்தைகள் சிரிச்சுக்கிட்டுதானே இருக்காங்க... அந்த பாசிட்டிவ் எனர்ஜி படம் பூரா இருக்கும்!''

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு