"இதை என் கதைனு யாரும் உரிமை கொண்டாட முடியாது. திருடிட்டேன்னும் பொய் சொல்ல முடியாது. இந்தப் படம் ஏதோ ஒரு விஷயம் நம்மைக் கடந்துபோனதை அழுத்தமா சொல்லும். செய்தித்தாள்கள்ல ஆறு மாசமா வர்ற விஷயங்களை ஜாலியா, எமோஷனலா என் பாணியில் சொல்லி இருக்கேன். மத்தவன் அவசரத்துக் குத்தான் நாம ஓட வேண்டி இருக்கு. மெதுவாப் போகலாம்னு 30 கி.மீ. வேகத்துல போனா, பின்னாடி வர்றவன் சீக்கிரம் போகச் சொல்லி ஹாரன் அடிச்சு விரட்டுறான். எல்லோரும் ஃபாலோ பண்ணாத்தான் ரூல்ஸ். சிலர் மட்டும் ஃபாலோ பண்ணா... நாம என்ன முட்டாளா? அந்தக் கோபத்தையும் நியாயத்தையும் அப்படியே பதிவு பண்றேன்'' - நிமிர்ந்து அமர்ந்துகொள்கிறார் சமுத்திரக்கனி. 'நாடோடிகள்’, 'போராளி’ மூலம் வெற்றி கண்டவர், இப்போது 'நிமிர்ந்து நில்’ என்று தலைப்பிலேயே செய்தி சொல்லி வருகிறார்.

'' 'நிமிர்ந்து நில்’ - சமூகத்துக்கு இப்போ ரொம்ப அவசியமான குணம். அதை எந்த அளவுக்கு அழுத்தமாப் பதிவு பண்ணியிருக்கீங்க?''

''நல்லவன் தொடர்ந்து சமூகத்துல எப்படிக் கற்பழிக்கப்படுகிறான்னு சொல்லியிருக்கோம். ராமகிருஷ்ணா மிஷன்ல படிச்சு தினமும் பிரேயர் பண்ணி ஒழுக்கமா இருக்குற ஒரு ஹீரோ. உலகத்துல இருக்குற எல்லா நல்ல விஷயங்களையும் கத்துக்கிட்டு வளர்ந்தவன். அந்த நல்ல பழக்கங்கள் எதுவுமே அவனுக்குப் பயன்படலை. ஆனாலும், அவன் கடைசி வரைக்கும் மாறலை. 'உன்னைச் சரணடைந்தேன்’ படத்துல, 'என் நண்பர்களிடம் இருந்து என்னைக் காப்பாற்று. என் எதிரிகளை நான் பார்த்துக்கொள்கிறேன்’னு மெசேஜ் சொன்னேன். 'நாடோடிகள்’ல 'நண்பனின் நண்பன் எனக்கும் நண்பன்’னு சொன்னேன். 'போராளி’ படத்துல 'மனிதன் சமூக வாழ்க்கையை மேற்கொண்டுவிட்ட மிருகம்’னு சொன்னேன். 'உலகம் எப்படி ஆகணுமோ, அப்படியே நீ மாறிடு’னு காந்தி சொன்னாரு. அதையே கொஞ்சம் மாத்தி 'உன்னை நீ சரி செஞ்சுக்கோ. உலகம் தானா சரியாயிடும்’னு 'நிமிர்ந்து நில்’ படத்துல சொல்றேன். 'நிமிர்ந்து நில்’னு ஒரு படம் எடுக்கத்தான் இவ்ளோ படங்கள் முன்னாடி பண்ணினேன். என்னோட மிகப் பெரிய கனவுப் படம் இது. தமிழ், தெலுங்குனு ரெண்டு மொழிகள்லயும் பண்றேன். தமிழ்ல 'ஜெயம்’ ரவியும் தெலுங்குல நானியும் நடிக்கிறாங்க. நேர்மையா இருக்குற யாரும் நிமிர்ந்து நிக்கலாம்னு உத்வேகம் கொடுக்குற படம்.''

''வசீகரக் காதலன் 'ஜெயம்’ ரவி... இந்தப் படத்துக்கு எப்படி செட் ஆகியிருக்கார்?''

''ரொம்ப எனர்ஜெட்டிக் ஹீரோ அவர். ஒவ்வொரு முறை ரவியைப் பார்த்துப் பேசும்போதும் கதை மாறிட்டே இருக்கும். குறைஞ்சது பத்து முறையாவது திரைக்கதையை மாத்தி இருப்பேன். எப்படி மாத்தினாலும் அதுக்கு ஃபிட்டா இருக்கார். 24 வயசு இளைஞன், 48 வயசு நடுத்தர வயசுக்காரர்னு டபுள் ஆக்ட் பண்றார். அஞ்சு வயசுக் குழந்தையா இருக்கும்போது கதை ஆரம்பிக்கும்.''

''அமலா பால் சும்மா டூயட் அழகியா... இல்லை கதைல அவங்களுக்கு ஸ்கோப் இருக்குமா?''

''நான் கதை சொல்லும்போது என்னைத் தாண்டி கதைக்கு வசனம் யோசிச்சுச் சொன்ன ஹீரோயின் அமலா பால். முதல் சீக்வன்ஸ் முடிச்சுட்டு, ரெண்டாவது சீக்வன்ஸுக்குக் கதை சொன்னப்போ, 'இப்படித்தானே சார் டயலாக் பேசணும்’னு ஆர்வமாக் கேட்டாங்க. டிகிரி படிச்சிட்டு வேலை தேடிட்டு இருக்கிற மிடில் கிளாஸ் பொண்ணு கேரக்டர். சில பொண்ணுங்க காலைல எந்திரிச்சு சாயந்திரம் வீட்டுக்கு வர்றவரைக்கும் எப்படியும் மினிமம் பத்துப் பொய் சொல்வாங்க. ஆனா, அதுதான் அவங்களைக் காப்பாத்தும். ரோட்ல போகும்போது நாலு பேர் ஃபாலோ பண்ணுவாங்க. அதுல ஒருத்தனைப் பார்த்துப் பொய்யா சிரிக்க வேண்டியிருக்கும். அப்படிச் சிரிச்சாதான் அவன் மத்த மூணு பேர்கிட்ட இருந்தும் காப்பாத்துவான். அப்படிப் பொய்யா இருந்தாதான் அந்தப் பெண்களுக்குப் பாதுகாப்பு. அதை அப்படியே மிகைப்படுத்தாம அமலா பால் கேரக்டருக்கு சூட் பண்ணி இருக்கேன்.''

''வசனங்கள் உங்க படங்களில் எப்பவும் ஸ்பெஷல்... இதுல?''

''ஒரு ஸீனுக்கு எழுத வேண்டிய வசனத்தை நாப்பது பக்கங்களுக்கு எழுதுவேன். 40 செகண்டுக்குத் தேவையான நாலு வரி வசனத்தைக்கூட 400 வரியா எழுதுவேன். அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா சுருக்கி, சுண்டக் காய்ச்சின பால் மாதிரி தருவேன். அந்த முயற்சிதான் 'போராளி’ படத்துக்காகச் சிறந்த வசனகர்த்தாவுக்கான விகடன் விருதை எனக்குக் கொடுத்தது. அந்த உழைப்பும் முனைப்பும் இந்தப் படத்திலும் இருக்கு.''

''உங்க முதல் பட ஹீரோ வெங்கட் பிரபு இப்போ மாஸ் டைரக்டர். இப்பவும் பேசிப்பீங்களா?''

''வெங்கட் பிரபு என் தம்பி. ஒவ்வொரு படம் எடுக்கும்போதும் என்கிட்ட கதை சொல்லுவான். நிறையப் பேசுவான். இன்னைக்கும் எந்தப் படம் எடுத்தாலும் தேங்க்ஸ் கார்டுல என் பேரை முதல்ல போடுறான். அவன் எவ்ளோ பெரிய இடத்துக்குப் போனாலும் என் தம்பிதான்.''

''ஒரு பக்கம் இயக்கம், இன்னொரு பக்கம் நடிப்பு... ரெட்டைக் குதிரைச் சவாரி எப்படி இருக்கும்?''

''எனக்கு நானா படேகர்னா ரொம்பப் பிடிக்கும். அவர் மாதிரி நடிக்கணும்னு ஆசை. அந்தப் பசியைத் தீர்த்துக்கத்தான் என்னை இழுக்கும் எந்தப் படத்துலயும் நடிக்கிறேன். அப்படி நடிச்ச படம்தான் 'சாட்டை’.

அதுல நான் நடிச்ச துக்காக என் குழந்தைங்க, பேரப் பிள்ளைங்க, சந்ததிகள்னு எல்லாரும் தலை நிமிர்ந்து பெருமைப்பட்டு நிப்பாங்க. தாம்தூம்னு இல்லாம சராசரி வாத்தியாரா நடிச்சிருக்கேன். 'நல்லா வாங்கடா... ஏணியைக் கூரை மேல போடாதீங்க. வானத்தை நோக்கி வைங்க’னு படிக்கிற பசங்களை உற்சாகப்படுத்துற கேரக்டர். பெத்தவங்களை எப்பவுமே பிள்ளைங்க நம்புறாங்க. ஆனா, புள்ளைங் களைத்தான் பெத்தவங்க எப்பவுமே நம்புறது இல்லை. இந்த ஆதங்கத்தை அப்படியே படத்துல பதிவு பண்ணிஇருக்கார் இயக்குநர் அன்பழகன். கன்னடத்துல 'போராளி’ ரீ மேக் போய்க்கிட்டு இருக்கு. 'நாடோடிகள்’ ரீ மேக்கை இந்தியில் ப்ரியதர்ஷன் சார் பண்றாரு. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. 'கதை உன்னோடது. எதுன்னாலும் கூப்பிடுவேன்’னு சொல்லியிருக்கார் ப்ரியதர்ஷன். நான் எதையும் தலை யில ஏத்திக்காம பிடிச்ச தைப் பண்ணிக்கிட்டே இருக்கேன். அவ்ளோதான்!''