Published:Updated:

"தமிழர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்!"

மம்முட்டி உருக்கம்எஸ்.ஷக்திபடங்கள் : எம்.விஜயகுமார்

"தமிழர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்!"

மம்முட்டி உருக்கம்எஸ்.ஷக்திபடங்கள் : எம்.விஜயகுமார்

Published:Updated:
##~##

நெகிழவைத்திருக்கிறார் மம்முட்டி. இந்தியா - பாகிஸ்தான் எல்லையைக் காட்டிலும் பதற்றப் பிரதேசமாக 'தமிழக - கேரள’ எல்லைகள் பரிணமித்திருக்கும் இந்தச் சூழலில், சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சில லட்சங்கள் மதிப்பிலான மருந்துப் பொருட்களைத் தன்னார்வத்தோடு அனுப்பியிருக்கிறார் மம்முட்டி. குழந்தைகள் நலனுக்காக 'கேர் அண்ட் ஷேர்’, இதய நோயாளிகளுக்காக 'ஹார்ட் டு ஹார்ட்’ என்று தொடரும் அவரது உதவிக் கரம், இப்போது சிவகாசி வரை நீண்டிருக்கிறது. கொச்சின் அருகே அம்பலமுகழில் 'ஃபேஸ் 2 ஃபேஸ்’ படப்பிடிப்பில் எங்களை வரவேற்றார் மம்முட்டி.

''சிவகாசி நண்பர்களுக்கு என்னால் முடிஞ்ச சின்ன உதவி அது. அதைப் பத்தி எதுவும் பேச வேண்டாமே. ஏன்னா, அதுல பெருமைப்பட எதுவும் இல்லை. கஷ்டப்படுறவங்க வலியை ஒரு  சக மனுஷனா நான் உணர்ந்திருக்கேன். இன்னும் நிறையப் பேருக்கு உதவும் எண்ணம் இருக்கு. ஆனா, அதை எப்படிப் பண்றதுன்னுதான் தெரியலை.''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

"தமிழர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்!"

''இந்த எண்ணம் 'அரசியலுக்கு வந்தா இன்னும் நிறையப் பேருக்கு நல்லது பண்ணலாமே’ங்கிற கட்டத்துக்கு உங்களைக் கொண்டுவருமே?''

''உங்களை மாதிரி ஒரு பொது மனுஷனா நானும் அரசியலைக் கவனிக்கிறேன். எனக்கு அரசியல்னா என்னன்னு தெரியும். எதைப் பத்தியும் ஒப்பீனியன் இருக்கு. அதுக்காக எதிர்காலத்துல தீவிர அரசியலுக்கு வருவேன்னு சொல்ல முடியாது. என்னால அரசியலுக்கு எதுவும் பண்ண முடியாது.''

''உங்க நண்பர் மோகன்லால் 'கேரளத்தில் வாழவே அச்சமா இருக்கு’னு வெளிப்படையா சொல்லி இருக்காரே?''

''அது அவரோட கருத்து. அதுல நான் தலையிட முடியாது; கருத்து சொல்லவும் முடியாது.''

''தமிழகம் - கேரளம் இடையிலான நீர்ப் பங்கீட்டில் உங்க கருத்து என்ன?''

''தமிழ்நாட்டு விவசாயி சேத்துல கால் வெச்சாத்தான், நாங்க சோத்துல கை வைக்க முடியும். இல்லைன்னா, நாங்க பசியும் பட்டினியுமாக் கிடக்க வேண்டியது தான்.''

''உங்க பையனே ஹீரோவா நடிச்சுட்டு இருக்கார். ஆனா, சமீபத்திய கருத்துக்கணிப்பில் கேரளப் பெண்கள் 'ஹாண்ட்சம் நடிகர்’னு உங்களைத் தேர்வுபண்ணி இருக்காங்க. உங்க இளமை ரகசியம் என்ன?''

''அதான் ரகசியமாச்சே... ரகசியமாவே இருக்கட்டுமே. நான் ஜிம்முக்கு எல்லாம் போறது இல்லை. இப்படித்தான், அப்படித்தான்னு வாழ்க்கையை இறுக்கிட்டு வாழ்றதில்லை. வாழ்க்கையை அதோட போக்குலயே வாழுறேன். இந்த இளமை, பிறவியிலயே நான் வாங்கிட்டு வந்த வரமா இருக்கும்.''

''இன்னமும் கேரள சினிமாவை 'பட்ஜெட் இண்டஸ்ட்ரி’யாகத்தான் பார்க்கிறாங்களா?''

''இங்கே சினிமா பார்க்கிறவங்க எண்ணிக்கை குறைச்சல் சார். தமிழ்நாட்டுல இதைவிட 20 சதவிகிதம் அதிகம். லாபத்தைப் பொறுத்துதானே ஒரு தொழிலில் இன்வெஸ்ட் பண்ண முடியும். எந்த அளவுக்கு ரிஸ்க் எடுக்கணுமோ, அதை யும் தாண்டித்தான் எங்க ஆளுங்க ரிஸ்க் எடுக்கிறாங்க.''

"தமிழர்கள் சேற்றில் கால் வைத்தால்தான் நாங்கள் சோற்றில் கை வைக்க முடியும்!"

''தமிழ்ப் படங்களைக் கவனிக்கிறீங்களா?''  

''தமிழ் சினிமா இப்ப ஆரோக்கியமா இருக்கு. இன்னும் தெளிவா சொல்ற துன்னா, இப்போதான் தமிழ் சினிமால 'தமிழ்’ இருக்கு. முன்னலாம் 'ட்டமிழ்’ தான் இருக்கும். எல்லா இயக்குநர் களுமே நிறைவாப் பண்றாங்க. ஒவ்வொரு படத்திலும் ஏதோ ஒரு செய்தி இருக்கு.''  

''உங்க பையன் சல்மான் அறிமுகமான படத்துலயே நல்ல பேர் வாங்கியிருக்கார். இதுல ஒரு அப்பாவா உங்க பங்கு என்ன?''

''சல்மானுக்கு அவ்வளவு பெரிய ஓப்பனிங் கிடைச்சு, அது வெற்றியில் முடிஞ்சிருக்கிறது சந்தோஷம். சாப்பாட்டு மேஜையில் பேசுறப்ப நடிப்புபத்திப் பொதுவா சில விஷயங்களைச் சொல்வேன். அவ்வளவுதான். இப்போ அவரும் ஒரு ஆக்டர். என்னதான் அப்பாவா இருந்தாலும் அவரைப் பத்தி நான் பேசுறது சரியில்லை. நீங்களே ஆளைப் பிடிச்சு ஒரு பேட்டி எடுத்துக்குங்க.''

''கேரள சினிமா, இப்போ இளைஞர்கள் கைக்குக் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டுவருது. இனி, மெகா ஸ்டார் மம்முட்டியின் இடம் எப்படி இருக்கும்?''

''இந்த மம்முட்டி ரொம்ப சாதாரண நடிகன். நிறையக் கனவுகளோடும் சின்னச் சின்ன வருத்தங்களோடும் மாற்றத்துக்கான ஏக்கங்களோடும் ஓடிக்கிட்டே இருக்கிறவன். சமுதாயத்துக்கு ஏதோ ஒரு வகையில நான் பயன்பட்டு இருக்கேன்னு நம்புனீங்கன்னா, என்னை லேசாக் கொண்டாடலாம். இல்லைன்னு நினைச்சா, என்னை மறந்துடலாம்''- கண்களில் புன்னகை தேக்கிக் கை கூப்புகிறார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism