Published:Updated:

ஸ்வீட் சித்தப்பா விஜய்!

க.நாகப்பன்

ஸ்வீட் சித்தப்பா விஜய்!

க.நாகப்பன்

Published:Updated:
##~##

நேகமாக தமிழ் சினிமாவின் மிக இளம் பெண் இயக்குநர் இவராகத்தான் இருப்பார். 80-களில் ஹிட் அடித்த 'சட்டம் ஒரு இருட்டறை’ படத்தின் ரீ மேக்கை இயக்கிவரும் 18 வயது சினேஹா பிரிட்டோ... லயோலா கல்லூரியின் இரண்டாம் ஆண்டு விஸ்காம் மாணவி. ''இன்னும் கொஞ்சம் சீக்கிரமே வந்திருக்கலாம். இதுவே லேட்டுனு தோணுது!'' என்று சிரிக்கிறார்.

 ''வாழ்த்துகள்... அறிமுக முயற்சியிலேயே ஆக்ஷன் ஹீரோ விஜயகாந்த் நடிச்சு ஹிட் ஆன படத்தை ரீ மேக் பண்றீங்க..? எப்படி வந்தது இந்தத் துணிச்சல்?''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''எனக்கு சினிமா பிடிக்கும். அதையும் தாண்டி சினிமா தெரியும். அந்த நாலெட்ஜ் கொடுத்த துணிச்சலில் இறங்கியிருக்கேன். 'சட்டம் ஒரு இருட்டறை’... எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கின  படம். தமிழ்ல விஜயகாந்த், தெலுங்குல சிரஞ்சீவி, இந்தியில் ரஜினிகாந்த், மலையாளத்துல கமல்ஹாசன், கன்னடத்துல சங்கர் நாக்னு அஞ்சு மொழிகள்லயும் உச்ச நட்சத்திரங்கள் நடிச்சு, ஹிட் அடிச்ச படம். சிரஞ்சீவிக்கு தெலுங்குல பெரிய பிரேக், ரஜினிக்கு இந்தியில் சரியான அடையா ளம், விஜயகாந்துக்கு சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்த படம்னு 'சட்டம் ஒரு இருட்டறை’... ரொம்ப ஸ்டிராங்க் சப்ஜெக்ட். இந்தக் காலத்துக்கும் பொருத்தமான மக்களின் ஆதங்கம், ஆவேசம், கோபம் எல்லாம் படத்துல இருக்கு. அந்தத் துணிச்சல்தான்!''  

ஸ்வீட் சித்தப்பா விஜய்!

''விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வந்து வாழ்த்துறாரே... நீங்க அவருக்கு அவ்ளோ செல்லமா?''  

''மத்தவங்களுக்குத்தான் அவர் இளைய தளபதி. எனக்கு அவர் ஸ்வீட் சித்தப்பா. எஸ்.ஏ.சந்திரசேகரன், என் பாட்டியோட அண்ணன். எனக்குத் தாத்தா முறை. நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து எஸ்.ஏ.சி. வீட்லதான் நான் இருப்பேன். என்னை சின்னக் குழந்தையா இருந்து பார்த்துட்டுவர்றார் விஜய். நான் என்ன பண்ணாலும் அவர் என்னை சப்போர்ட் பண்ணுவார். நான் கூப்பிடாமலேயே ஒரு நாள் திடீர்னு ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு

ஸ்வீட் சித்தப்பா விஜய்!

வந்து நின்னுட்டார். எங்க வேலையைப் பார்த்துட்டு, 'நல்லா இருக்கு... நிச்சயம் படம் நல்லா வரும்’னு வாழ்த்தினார். சித்தப்பாங்கிறதைத் தாண்டி அவரோட டை ஹார்ட் ஃபேன் நான். சீக்கிரமே அவர் நடிக்கும் படத்தை டைரக்ட் பண்ணுவேன்!''

''படத்துக்கு 'கும்கி’ விக்ரம் பிரபுவை ஹீரோவா வெச்சு ஷூட்டிங் ஆரம்பிச்சீங்க. ஆனா, இப்ப அவர் நடிக்கலை. 'கேரக்டர் செட் ஆகலை’னு மாத்திட்டதா சொல்றாங்களே... உண்மையா?''

''ஐயோ... அப்படி இல்லை. அவருக்காக நாங்க ரொம்ப நாள் காத்துட்டே இருந்தோம். ஆனா, 'கும்கி’ ஷெட்யூல் தள்ளிப்போயிட்டே இருந்ததால், அவரால் எங்களோட சேர முடியலை. வேற காரணம் ஒண்ணும் இல்லை.''

''நீங்க படிக்கிற விஷ§வல் கம்யூனிகேஷன், சினிமா மேக்கிங்ல உதவுதா?''

''100 சதவிகிதம் உதவுது. சினிமா எல்லா டெக்னாலஜியையும் உள்வாங்கிக்கிற பெரிய மீடியம். நல்ல சினிமாவுக்குக் கதை ரொம்ப முக்கியம். அதனால, உலக சினிமால இருந்து உள்ளூர் சினிமா வரை வித்தியாசமான படங்கள் பார்த்துட்டே இருப்பேன். நான் படிச்ச ஃபிலிம் டெக்னாலஜி, ஃபிலிம் கிராமர் ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதோ ஒரு வகையில் கை கொடுக்கத்தான் செய்யுது. பிடிச்சதைப் படிச்சேன். படிச்சதை சினிமாவா எடுக்கிறேன். இந்த விஷயத்தில்... லைஃப் இஸ் பியூட்டிஃபுல்!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism