Published:Updated:

"ஈயைப் பார்த்தா பயம்!"

நா.கதிர்வேலன்

"ஈயைப் பார்த்தா பயம்!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

"இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு... அது ஒரு சண்டே... நல்லா தூங்கி லேட்டா எந்திரிச்சு சுத்திட்டு இருந் தேன். திடீர்னு ஒரு போன் கால்ல, 'மோகன்லால்கூட ஜோடியா நடிக்க விருப்பமா?’னு கேட்டாங்க. எதுவும் கேட்டுக்காம உடனே ஓ.கே. சொன்னேன். கொஞ்ச நேரத்துல 'சாருக் கும் சம்மதம்’னு தகவல் சொன்னாங்க. அப்படியே சந்தோஷத்துல அம்மாவைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்தப்போ இருந்த படபடப்பு இப்பவும் இருக்கு!'' - கலகலவெனப் பேசிக்கொண்டே இருக்கிறார் அமலா பால். மோகன் லாலுடன் ஜோடியாக நடித்த 'ரன் பேபி ரன்’ கேரளத்தில் ஹிட் அடித்த சந்தோஷம் அமலாவின் குரலில் ஏகத் துக்கும் எக்கோ!  

''லால்கூட நடிக்கிறப்போ பயமா இருந்துச்சா?''

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''அது வேண்டாம்னு அவரே சொல்லிட் டார். அவரோட ஷாட் முடிஞ்சிருச்சுனு உடனே கிளம்பிட மாட்டார். உட்கார்ந்து நான் நடிக்கிறதையும் பார்த்துட்டே இருப் பார். எங்கே கரெக்ஷன் வேணுமோ உடனே சொல் லுவார். அதை எப்படிச் சரி பண்ணிக்கிறதுனும் சொல்லு வார். ஸ்கூல் படிக்கும்போது தோழிகளோட ஸ்க்ரீன்ல பார்த்து ரசிச்ச ஹீரோ. அவர்கூடவே நடிச்சது... கடவுளுக்கு நன்றி!''

"ஈயைப் பார்த்தா பயம்!"

''தமிழ் சினிமாவில் நீங்க பிராமிஸிங் ஸ்டார். இங்கே உங்களுக்குப் போட்டினு யாரை நினைக்கிறீங்க?''

''பொய் சொல்லாம சொல்றேன்... அங்கே எல்லோருமே எனக்கு நல்ல ஃப்ரெண்ட்ஸ். த்ரிஷாவும் நானும் சந்திச்சா பயங்கரமா கொஞ்சிக்குவோம். நடிக்கிறதுல ஆரம்பிச்சு, படம் செலெக்ட் பண்ற வரை சூப்பர் டிப்ஸ் கொடுப்பாங்க. என் டிரெஸ்ஸிங் சென்ஸ் அவங்களுக்குப் பிடிக்கும். தமன்னா கூட சேர்ந்தா, ஒரே அரட்டைதான். நயன்தாரா மேடம் நேர்ல இன்னும் அழகா இருப்பாங்க. 'எப்படி இவ்வளவு அழகா இருக்கீங்க’னு கேட்டா, சின்னதா சிரிப்பாங்க. அவ்வளவுதான். முன்னாடி அவங்கலாம் 'நீ இப்படி நடிச்சா நல்லா இருக்கும்னு திருத்தம் சொல்வாங்க. ஆனா, இப்பல்லாம் 'சூப்பர்... வெரிகுட்’னு பாராட்ட மட்டுமே செய்றாங்க. இதுல நான் யார்கூட போட்டி போட முடியும். அமலா பால்னா அன்பானவள்னு குறிச்சுக்கங்க.''

''அதே அன்புதான் எப்பவும் உங்களைச் சுத்தி கிசுகிசுக்களை உலவவிடுதா?''

''இருக்கலாம். நான் ஃப்ரெண்ட்லியா இருக்கிறதைத் தப்பா ஃபோகஸ் பண்றாங்க. என்கிட்ட அறிமுகமாகுற முதல் நிமிஷத்துல இருந்தே நான் யார்கூடவும் நல்லாப் பேசுவேன். நட்புக்கு சின்சியரா இருப்பேன். இந்தக் கிசுகிசுகளுக்குப் பயந்துகிட்டு என் நிஜ கேரக்டரை மாத்திக்க முடியாதே? அதுதான் பிரச்னை ஆகுதுன்னா, அந்தப் பிரச்னையைச் சமாளிச்சுட்டுப் போறேன்.''

''விஜய், சூர்யா, சிம்பு... இவங்ககூடலாம் எப்ப நடிக்கப் போறீங்க?''

"ஈயைப் பார்த்தா பயம்!"

''எனக்கு இப்ப 21 வயசுதான் ஆகுது. இன்னும் நிறைய நேரம் இருக்கு. நிச்சயம் இவங்க எல்லார்கூடவும் நடிப்பேன். மோகன் லால் கூட இவ்வளவு சீக்கிரம் நடிப்பேன்னு நினைச்சுப் பார்த்திருப்பேனா? நடிச்சேனே! இப்போ நான் எனக்குனு ஒரு மாஸ்டர் வெச்சுக் கிட்டு டான்ஸ் கத்துட்டு இருக்கேன். டயட், டிரெஸ்ஸிங், மேக்கப்னு எல்லாவிதத்திலும் மாஸ் ஹீரோக்களுக்கான ஒரு பெர்ஃபெக்ட்  ஹீரோயினா டியூன் ஆகிட்டு இருக்கேன். சீக்கிரமே இன்னும் அழகான, ஸ்டைலான அமலா பாலை நீங்க பார்க்கலாம். அப்ப நீங்க கேட்ட எல்லார் படத்துலேயும் அமலா பால் இருப்பா.''  

''சமீபத்துல என்ன படம் பார்த்தீங்க?''

'' 'நான் ஈ.’ கொஞ்சம்விட்டா ராஜமௌலி சார் எங்களை மாதிரி நடிகர், நடிகைகளுக்கு வேலையே இல்லாமப் பண்ணிடுவார்போல. மறுபடியும் பார்க்கணும் மாதிரி இருக்கு அந்தப் படத்தை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism