Published:Updated:

"நான் இண்டஸ்ட்ரிக்கு எதிரானவன் இல்லை!"

நா.கதிர்வேலன்

"நான் இண்டஸ்ட்ரிக்கு எதிரானவன் இல்லை!"

நா.கதிர்வேலன்

Published:Updated:
##~##

'தமிழ்ப் படம்’ சி.எஸ்.அமுதனின் 'ரெண்டாவது படம்’ யாரை எல்லாம் கிண்டலடிக்கும்? கோடம்பாக்க ஹீரோக்களுக்கு மத்தியில் டென்ஷன் கிளம்பியிருப்பது நிஜம். இறுதிக் கட்டப் படப்பிடிப்பில் இருந்தவரைப் பிடித்தோம்.

 '' 'தமிழ்ப் படம்’ தந்த வருத்தம் இன்னும் ஹீரோக்களிடம் இருக்கா?''

''ஒரு சிலர் வருத்தமாத்தான் இருங்காங்க. பேரைச் சொல்ல விரும்பலை. ஏன் குறிப்பிட்டு என்னைச் சொல்றீங்கனு கேட்டாங்க. ஆனா, எந்த ரசிகரும் 'எங்க தலைவரைப் பத்தி எப்படி சொல்லப்போச்சு?’னு எழுந்து தியேட்டரில் கத்தலை. படம் ஓடியதைவிட பெரிய விஷயமா நான் நினைக்கிறது பாரதிராஜா பாராட்டினதைத்தான். 'என்னப்பா, என்னையே முதல் ஆளா எடுத்துட்டியே’னு சொல்லி ஷாட் பை ஷாட் பாராட்டினார். கே.வி.ஆனந்த் ஒரு விழாவில் பார்த்துட்டு 'அமுதன் என் மேல் கோபமா?’னு கேட்டார். நான் பதறிப்போய் 'ஏன் சார்?’னு கேட்டேன். ' 'அயன்’பத்திக் கிண்டல் பண்ணவே இல்லையே’னு கேட்டார். ஆனாலும், இப்பவரை என் மேல 'இண்டஸ்ட்ரிக்கு எதிரானவன்’கிற இமேஜ் இருக்கு. 'ரெண்டாவது படம்’ அதை மாத்தும்!''

"நான் இண்டஸ்ட்ரிக்கு எதிரானவன் இல்லை!"

''எப்படி வந்திருக்கு 'ரெண்டாவது படம்’?''

''ஒரு சினிமா கதைன்னா இரண்டு பேர், ஹீரோ, ஹீரோயின், அப்பா, அம்மா, வில்லன்னு பட்டியல் இருக்கும். ஆனா, இந்தப் படத்தில் முப்பது பேர் இருங்காங்க. இவங்க யார் சம்பந்தம் இல்லாமலும் கதை நகராது. நீங்க 'ரெண்டாவது பட’த்தை எந்த வகையிலும் சேர்க்க முடியாது. ஏன்னா, எங்களுக்கே அது எது மாதிரிப் படம்னு தெரியலை. படம் காமெடியாகப் போகுதுனு பார்த்தால் சட்டுனு சீரியஸ் தோற்றம் கொடுக்குது. சென்டிமென்ட் கிடையாது. எமோஷன் அறவே இல்லை. ஆன்மிகம், கிளாமர், உருகவைக்கும் காவியம்னு போட நினைச்சாலும் முடியாது. எது மாதிரியும் இல்லாம புது மாதிரியா இருக்கு.''

''அப்படி என்ன கதை?''

''திருவல்லிக்கேணி மேன்ஷன்ல தங்கியிருக்கிற மூணு இளைஞர்கள், அவர்களின் வாழ்க்கை, அதில் குறுக்கிடும் மூன்று பெண்கள்... அவங்களையே சுத்தியடிக்கும் கதை! படத்தில் யார் யார் எப்படி இருப்பாங்கனு உங்களால் கணிக்கவே முடியாது. ரிச்சர்ட் என்கூடப் படிச்சவன். ரொம்ப மிடுக்கா இருப்பான். கோட், சூட்,

"நான் இண்டஸ்ட்ரிக்கு எதிரானவன் இல்லை!"

டைலாம் மாட்டிக்கிட்டு பயங்கர பந்தாவா இருப்பான். ஆனா, இதுல அவனை செம லோக்கலா இறங்க வெச்சிருக்கேன். ஸ்க்ரீன்ல பார்த்துட்டு 'நானாடா இது’னு அலறிட்டான். அப்படித்தான் அர்விந்தும். ரெண்டே ரெண்டு நாள் எங்க ஜமாவுல சேராமல் இருந்தார் விமல். அப்புறம் எங்களையே தாண்டிப் போயிட்டார். அவருக்கு ஜோடி ரம்யா நம்பீசன். ரொம்பப் பாந்தமா 'கடலோரக் கவிதைகள்’ ரேகா மாதிரி வருவாங்க. ஆனா, அவங்க கேரக்டருக்கு நான் மனசுல வெச்சிருந்தது விஜய லட்சுமியை. அவங்க ஆபீஸுக்கு வந்தப்போ நடந்துகிட்ட விதம், போன் பேசுற ஸ்டைல் எல்லாம் ரொம்ப கெத்தா இருந்தது. இத்தனை வருஷம் குடும்பக் குத்துவிளக்கு மாதிரி ஜொலிச்ச வங்களை கிளாமரின் உச்சம் தொட வெச்சிட் டோம். ஆண்கள் எல்லாம் தன் கைக்குள் இருக் கணும்னு நினைக்கிற கேரக்டர் அஞ்சனா சிங். ஒரே படத்துல நாலு படம் பார்க்கிற மாதிரி இருக்கும்ங்க. வேற எப்படினு சொல்லத் தெரியலையே?''