Published:Updated:

'மங்காத்தாவுக்காகக் காத்திருக்கேன்!'

க.நாகப்பன்

'மங்காத்தாவுக்காகக் காத்திருக்கேன்!'

க.நாகப்பன்

Published:Updated:
##~##

"சிங்கப்பூர்ல டிரெயின்ல 'ஊனமுற்றோருக்கான  இருக்கை’னு எழுதி இருக்காது. 'உங்களைவிட அதிகம் தேவைப்படும் ஒருவர் பயன்படுத்த இந்த இருக்கையை விட்டுக்கொடுங்க’னு நாகரிகமா எழுதிவெச்சிருப்பாங்க. இப்படி யார் மனசையும் சங்கடப்படுத்தாம, என் பேருக்கு ஏத்த மாதிரி எப்பவும் இனிமையா இருக்க மட்டுமே ஆசை!'' - பட்டாம்பூச்சி இமைகளால் படபடக் கிறார் இனியா. தமிழிலும் மலையாளத்திலும் ஏழு படங்கள் கமிட் ஆன உற்சாகம் இனியாவின் உடல்மொழியிலும் இதழ் மொழியிலும்.

 ''எல்லாருக்கும் இனிமையா இருக்கணும்னு சொல்றீங்க. ஆனா, 'அன்னக் கொடியும் கொடிவீரனும்’ படத்துல இருந்து உங்களை விலக்கி சங்கடப்படவைக்கிறாங்களே?''  

''அது நிஜமாவே எனக்கு ரொம்பப் பெரிய வருத்தம். அந்தப் படத்துல நடிக்க ரொம்ப எதிர்பார்ப்போட இருந்தேன். 'நான் ராதிகாவை அறிமுகப்படுத்தும்போது பார்த்த மாதிரியே இப்போ நீ இருக்கே... பெரிய ரவுண்ட் வருவே’னு பாரதிராஜா சார் சொன் னதும் கனவுல மிதந் துட்டு இருந்தேன். அந்தப் படத்துல அமீர்

'மங்காத்தாவுக்காகக் காத்திருக்கேன்!'

சாருக்கு ஜோடியா நடிக்கிறேன்னு நியூஸ் வந்ததும் பாராட்டு கள் குவிஞ்சது. 'உனக்கு நல்ல எக்ஸ்பிரஷன்ஸ் வருது. அது இவ்ளோ சீக்கிரம் புது ஹீரோயின்களுக்கு வராது’னு மீடியாவிலும் நிறையப் பேர் வாழ்த்தினாங்க. 'அன்னக் கொடி’ படத்துல ஜல்லிக்கட்டுக் காளையை மேய்க்கிற பொண்ணு கேரக்டர். பேரு மங்காத்தா. பாவாடை தாவணியோட ஜாக்கெட் இல்லாம நடிக்கணும்... மாட்டு வண்டி ஓட்டணும். நிறைய ஹோம்வொர்க் பண்ணிட்டு இருந்தேன். ஆனா... ப்ச்! 'மல்லாங்கிணறு மங்காத்தா’ பெரிய சப்ஜெக்ட். அதை மட்டுமே வெச்சு தனியா ஒரு படம் பண்ணலாம். அதுல நீதான் ஹீரோயின். காத்திரு’னு பாரதிராஜா சார் சொல்லி இருக்கார். அந்த நம்பிக்கைதான் என் வருத்தத்தை மறக்கவெச்சிருக்கு.''

''சினிமாவில் இதெல்லாம் பண்ண மாட்டேன்னு எதுவும் பாலிஸி வெச்சிருக்கீங்களா?''

''கிளாமரா நடிப்பேன். ஆனா, சும்மா பாஸிங்ல போற குத்துப் பாட்டுக்கு கிளாமர் டான்ஸ் ஆட மாட்டேன். ஆனா, கதையில் கனெக்ஷன் இருந்தா, பெல்லி டான்ஸ் ஆடக்கூடத் தயங்க மாட்டேன்.''  

''சினிமாவில் மிஸ் பண்ணிட்டோம்னு வருத்தப்படுற விஷயம் ஏதாவது?''

''தேசிய விருது. 'வாகை சூட வா’ படத்துக்காக நிச்சயம் சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைக்கும்னு கடைசி நிமிஷம் வரை

'மங்காத்தாவுக்காகக் காத்திருக்கேன்!'

நம்பிட்டு இருந்தேன். ஆனால், வித்யா பாலனுக்கு விருது கிடைச்சது. தஞ்சாவூர் ஸ்லாங் பேசி எனக்குப் பழக்கம் இல்லை. படத்துல நானே டப்பிங் பேசாததுதான் தேசிய விருது மிஸ் ஆகக் காரணம். இப்போ நான் நடிக்கும் படங்களுக்கு நானே டப்பிங் பேசுறேன். சீக்கிரமே நிச்சயம் தேசிய விருது வாங்குவேன்.''

''இப்போதைய ஹீரோயின்களிடம் உங்களைக் கவர்ந்த அல்லது கடைப்பிடிக்க விரும்பும் விஷயம் என்னென்ன?''

''த்ரிஷா ரொம்ப க்யூட். தமன்னா டான்ஸை நாள் முழுக்கப் பார்த்துக்கிட்டே இருக்கலாம். ஸ்விம் சூட்ல அனுஷ்கா சும்மா நின்னாலே போதும்... பசங்க கதறுவாங்க. அவங்க எக்ஸ்பிரஷன்ஸ்.... சான்ஸே இல்லை. நான் திரும்பத் திரும்ப பார்க்கிற படங்கள்ல 'அருந்ததி’யும் ஒண்ணு!''