Published:Updated:

ரீ வைண்ட் ரிமோட் !

ஆர்.சரண்

ரீ வைண்ட் ரிமோட் !

ஆர்.சரண்

Published:Updated:
##~##

"தினம் தினம் நாம் எதிர்கொள்ளும் எல்லா அனுபவங்களும் எப்பவோ முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டவைதான். ஐன்ஸ்டீன் தியரியின் நியதி இது. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நம் முன்னாடி இருக்கிற வாய்ப்புகள்ல நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோம்கிறதுதான் நம் வாழ்க்கையின் அடுத்தடுத்த திருப்பங்களைத் தீர்மானிக்கும். அப்படிக் கலகலப்பான கலாட்டாத் திருப்பங்களை வெச்சுக் காதலைக் கொண்டாடும் படம்!'' என வார்ம் வெல்கம் கொடுக்கிறார் வெங்கி. செல்லமாக 'கே4’ எனப்படும் 'கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்’ படத்தின் இயக்குநர். விளம்பரப் பட இயக்குநர், தியேட்டர் பெர்சனாலிட்டி, சேட்டிலைட் சேனலின் புரொகிராம் ஹெட் என மீடியா பரிச்சயம் உள்ளவரின் புதிய கேன்வாஸ்... வெள்ளித் திரை!

''காபி அளவுக்குத்தான் இப்போ காதலுக்கும் மதிப்பா?''

ரீ வைண்ட் ரிமோட் !

''காதலுக்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை ஒரு காபிக்கும் கொடுக்குறாங்கனு அதையே பாசிட்டிவாகவும் பார்க்கலாம். இப்போ பசங்க ரொம்ப இன்டெலிஜென்ட். எந்த விஷயத்திலும் தனக்கு எது பொருத்தமானதுனு ரசனையோட முடிவு எடுக்குறாங்க. அப்பா, அம்மா சொல்ற டிரெஸ், படிப்பு, லைஃப் பார்ட்னர்னு எல்லாத்துக்கும் தலையாட்ட இப்போ யாரும் இல்லை. 'நான் இதுதான் படிப்பேன். இப்படித்தான் ஆவேன். அதுக்கு ஹெல்ப் பண்ணுங்க’னு முடிவு எடுத்துட்டு வந்து நிக்கிறாங்க.

ரீ வைண்ட் ரிமோட் !

ஃபேஸ்புக்ல டீன் பசங்களோட புரொஃபைல்ஸ் பாருங்க. 'இட்ஸ் மை ஆட்டிட்யூட்’, 'இட்ஸ் மை லைஃப்!’னு பல செய்திகள் சொல்வாங்க. ஒவ்வொரு மனுஷனுக்குள்ளும் இருக்கும் ஈகோதான் அவனோட வாழ்க்கையைத் தீர்மானிக்குது. அதுவேதான் படம். ஒரு ஜாலி ரோலர்கோஸ்டர் சவாரிக்கு உங்களை வரவேற்கிறேன்.''

''நாசர், ரேவதியைத் தவிர ஹீரோ, ஹீரோயின் அவங்க ஃப்ரெண்ட்ஸ்னு எல்லாருமே புதுசா இருக்காங்களே?''

'''எப்பவுமே மனசுக்குப் பிடிச்ச வேலை யைச் செய்யணும்னு நினைக்குற ஆள் நான். இந்தப் படத்துக்காக நான் எந்த இடத்துலேயும் சமரசம் பண்ணிக்கவே இல்லை. ஹீரோ, ஹீரோயினையும் சேர்த்து மொத்தம் 15 புதுமுகங்கள் நடிச்சிருக்காங்க. ஹீரோ ஹிருதய்ராஜ்... 'பம்பாய்’ படத்தில் அரவிந்த்சாமி - மனீஷாவின் ட்வின்ஸ் மகன்களில் ஒரு பையனா நடிச்சவர். படம் ஆரம்பிக்கறப்பவே பக்கா ஸ்க்ரிப்ட் கையில் இருந்தது. ஒரு மாசம் முழுக்க ரிகர்சல் பார்த்துட்டுத்தான் ஷூட்டிங் கிளம்பினோம். படம் முழுக்க டிஜிட்டல். அந்த முயற்சிக்கே கமல் சார் ரொம்பப் பாராட்டினார். படத்தின் மையம் மட்டும் இளைஞர்களைச் சுத்தி இல்லை. அதன் வொர்க்கிங் ஸ்டைலும் இன்றைய டிரெண்டுக்கு ஏத்த மாதிரிதான் இருக்கு.

''படத்துல வேற என்ன விசேஷம்?''

ரீ வைண்ட் ரிமோட் !

''படத்துக்கு இசை பாணி கல்யாண். ஏ.ஆர்.ரஹ்மான் இசைப் பள்ளியோட மாணவர் இவர். இந்தப் படத்துக்கான வசனத்தையும் இரண்டு பாடல்களையும் என் மனைவி சித்ராவே எழுதி இருக்காங்க. அவங்க எத்திராஜ் கல்லூரிப் பேராசிரியை. அறிவுமதி அண்ணன், பழநிபாரதியும் பாடல் எழுதியிருக்காங்க. இந்தப் பாடல்கள் காபி ஷாப்பையும் தாண்டி பாப்புலர் ஆகும். 'முதல்வன்’ படத்துல ஒரு டயலாக் வரும்... 'வி.சி.ஆர்-ல ரீ வைண்ட் பட்டன் இருக்குற மாதிரி வாழ்க்கையையும் நாம ரீ வைண்ட் பண்ணிப் பார்க்கிற வாய்ப்பு கிடைச்சா... எவ்வளவு நல்லா இருக்கும்?’னு. அந்த ரீ வைண்ட் ரிமோட் உங்க கைல கிடைச்சா எப்படி இருக்கும்? அதுதான்... கொஞ்சம் காபி கொஞ்சம் காதல்!''

ரீ வைண்ட் ரிமோட் !