அப்போதும் இப்போதும் அமிதாப் பச்சன் மீடியா டார்லிங்! ஆனால், மனைவி ஜெயா பச்சனுடன் அமிதாப் வருகிறார் என்றால், மீடியா மக்களே கொஞ்சம் ஒதுங்கிக்கொள்வார்கள். துணிச்சல், முன் கோபம், ஆக்ரோஷம்... எவராலும் சமாளிக்க முடியாத 'டெரர்’ லேடி. பேட்டி என்றதும், ''நோ சர்ச்சைகள், நோ அரசியல்'' என்ற செல்ல மிரட்டலுடன் பேசினார்.

''அமிதாப் வெள்ளித் திரையில் எவர் க்ரீன் சூப்பர் ஸ்டார். வீட்டில் எப்படி?''

''அமித்ஜி ஸ்க்ரீனில் மட்டும்தான் ஆக்ஷன் ஹீரோ. வீட்ல இருக்கிற இடம் தெரியாது. சின்ன குழந்தை மாதிரி வீடியோ கேம்ஸ் விளையாடுவார். பழைய நியூஸ் பேப்பர்களை எடுத்து வெச்சுப் படிப்பார். 'புது பேப்பரைவிட, பழைய பேப்பர்தான் பிடிச்சிருக்கு. பழசை மறக்கிறவன் மனுஷனே இல்லை. நான் மனுஷன்’னு ஜாலியா பன்ச் அடிப்பார். வீட்ல அவர் சைலன்ட். நான் ரொம்ப வயலன்ட்!''

''வீடு முழுக்கப் பிரபலங்கள். தினம் ஒரு கிசுகிசு, வதந்தி... எப்படி எடுத்துக்குவீங்க?''

''அமித்ஜி அது எதையும் காதுல போட்டுக்க மாட்டார். அபிஷேக் ஜாலியா எடுத்துக்குவான். ரொம்ப நெகட்டிவ் ஆன காஸிப்பா இருந்தா, சத்தம் போடு வான். ஐஸ்வர்யா ரொம்ப சென்சிட்டிவ். ஆனா, வீண் வதந்திகளுக்கு ரியாக்ட் பண்ண மாட்டார். எனக்குத் தான் பயங்கரக் கோபம் வரும். எழுதினவங்களை வீடு தேடிப் போய், நல்லா திட்டணும்னு தோணும். ஆனா, கிசுகிசுக்கள் எல்லாமே பொய்தானே!''

''நீங்களும் அமிதாப்பும் ஜோடியாப் பல படங் கள்ல நடிச்சிருக்கீங்க... அதில் உங்களுக்கு இஷ்டமான படம் எது?''

''எல்லாப் படங்களுமே பிடிக்கும். அதில் 'கபி குஷ் கபி கம்’ கொஞ்சம் ஸ்பெஷல்!''

''ஐஸ்வர்யா ராயிடம் பிடிச்சது என்ன... பிடிக்காதது என்ன?''

''ஐஸ்வர்யா என் மகள். அவர்கிட்ட எல்லாமே பிடிக்கும். நீங்க இப்படி எல்லாம் கேட்கிறதுதான் பிடிக்கலை!''

''ரஜினி, அமிதாப்... ரெண்டு பேரும் ஒருத்தரை மாத்தி ஒருத்தர் 'நீங்கதான் சூப்பர் ஸ்டார்’னு சொல்லிக்கிறாங்க. நீங்க சொல்லுங்க.... உண்மை யில் சூப்பர் ஸ்டார் யார்?''

''(நீண்ட யோசனைக்குப் பிறகு) ம்ம்ம்ம்ம்ம்ம்.... அமித்ஜி, ரஜினிஜி... ரெண்டு பேருமே வேற வேற விதங்களில் சூப்பர் ஸ்டார்ஸ்தான். அமித்ஜி பத்தி நான்என்ன சொல்லுவேன்னு உங்களுக்கே தெரியும். ரஜினியின் சுறுசுறுப்பு எனக்கு ரொம்பப் பிடிக்கும். 'ரோபோ’வில் கலக்கி இருப்பார். ஆனா, இப்போதைக்கு என்னோட சூப்பர் ஸ்டார் என் பேத்தி ஆராத்யாதான்!''

''புது சூப்பர் ஸ்டார்கிட்ட என்ன ஸ்பெஷல்?''

''ஆராத்யா ரொம்ப அழகா இருக்கா. அழவே தெரியாதுபோல அவளுக்கு. எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கா. விளையாட்டு சாமான்கள், பொம்மை எதுவும் அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது. மனுஷங்களைத்தான் பிடிக்கும். இப்போ 'தாதா... பாபா... டாடி... ம்மா’னு பேச ஆரம்பிச்சிருக்கா. குளிப்பாட்டுறது, பவுடர் போடுறது, நாப்கின் மாத்துறதுனு உலக அழகி அம்மாவைத் தன் வேலைக் காரி ஆக்கிட்டா ஆராத்யா. ஒரு அம்மாவா ஐஸ்... என்னை நெகிழவைக்கிறார்!''

''நீங்களும் அமிதாப்போடு அதிகப் படங்களில் ஜோடியா நடிச்ச ரேகாவும் எம்.பி-யாக இருக்கிறீர்கள். பலமுறை நேரில் பார்த்தும், இதுவரை ஒரு 'ஹாய்’ கூட சொல்லிக் கிட்டதே இல்லையாமே... ஏன்?''

''ரேகா ஒரு பெண்... நானும் ஓர் பெண்... ரெண்டு பேரும் சோஷியல் வொர்க் பண்றோம்...'' (சட்டென அவருடைய உதவியாளர் ஜெயாவிடம் கேள்வியை விளக்க... அவர் சுதாரித்து...) ''நோ... நோ... இது பாலிட்டிக்ஸ். நோ கமென்ட்ஸ். பை!''