படத்தில் பார்த்ததுபோலவே பந்தா இல்லாமல் சிக்கனமாகச் சிரித்து வரவேற்கிறார் விஜய் ஆண்டனி. 'நான்’ தந்த தெம்பு முகத்தில் கூடுதல் களையைக் கொடுத்திருக்கிறது.

''நடிகன் ஒரு கருவி. அதுதான் நான், 'நான்’ செய்யக் காரணம். ஒரு பாத்திரம் பொருந்திப் போனால் நாம் துணிஞ்சு செய்யலாம். என்ன, அந்தப் பாத்திரத்துக்குள் கூடுவிட்டுக் கூடு பாயணும். ஆனால், படம் வெளிவருவதற்கு முன்னால் எல்லோர் முகத்திலும் ஒரு சந்தேகம் இருந்தது. தியேட்டரில் 'நான்’ நல்லா ஓடியதும் வாங்கினவங்க முகத்தில் சந்தோஷம்... ரொம்ப சந்தோஷம்'' - உற்சாகமாகப் பேசுகிறார் விஜய் ஆண்டனி.

''எப்படி இருக்கு இந்த வெற்றி?''

''பல இடங்களில் கிடைத்த வாழ்த்துகள் கூடுதல் நம்பிக்கையைக் கொடுத்திருக்கு. கங்கை அமரனில் ஆரம்பித்து இசையமைப்பாளர்கள் பக்கம் இருந்து நிறையப் பாராட்டுகள். ஊரில் இருந்து புறப்பட்டு வந்ததுக்கு, 25 படங்களுக்கு இசையமைப்பாளராகவும் இப்ப ஒரு நடிகனாகவும் அடையாளம் சொல்லிக்க முடிவது சந்தோஷமா இருக்கு.

இயக்குநர்கள் நல்லபடியாகக் கையாண்டால் எந்த நடிகரும் உயிர்ப்புடன் நடிக்க முடியும். வருஷத்துக்கு ரெண்டு படங்களில் நல்லபடியா நடிச்சிட்டுப் போகணும். அடுத்த படத்துக்குத் தயாராகிட்டேன்... 'திருடன்’.''

''அப்படின்னா, 'இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி’ அவ்வளவுதானா?''

''அது இறைவன் கொடுத்தது. இப்பவும் நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, தேர்ந்தெடுத்துதான் செய்றேன். முன்னைவிட நல்லா செய்யணும்னு உழைக்கிறேன். என்னோட அடிப்படை இசைதான். சவுண்டு இன்ஜினீயரா வந்துட்டு, நான் வடிவமாகி நின்ன இடமும் இசைதான். இசையைப் பிரிஞ்சு என்னால் இருக்க முடியாது.''

''நடித்ததில் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவம் சொல்லுங்களேன்?''

''பெரிய ஆச்சர்யமே நடந்தது. திடீர்னு மணி சார் அலுவலகத்தில் இருந்து போன். அவரோட இணை இயக்குநர் பேசினார். ''மணி சார், 'நான்’ டிரெய்லர் பார்த்தார். அவருக்கு ரொம்பப் பிடிச்சது. 'கடல்’ படத்தில் நீங்க நடிக்கணும்னு விரும்புறார். ஒரு கேமியோ ரோல். ஒரு பாடல் முழுக்க நீங்க வர்றீங்க. ஃப்ளைட் டிக்கெட் போட்ரவா?’னு கேட்டார். எனக்கு ஆனந்த அதிர்ச்சி. ஆனால், அவங்க புறப்படச் சொன்ன தினம் 'நான்’ ரிலீஸ் தேதி. தலைக்கு மேல் வேலை இருந்தது. சொந்தத் தயாரிப்பு வேற. வேறு வழி இல்லாம மணிரத்னம் சார் படத்தில் நடிக்கிற அருமையான வாய்ப்பை இழந்துட்டேன். ஆனால், அவர் மனசுலகூட பாதிப்பு ஏற்படுத்திட் டோமேனு ஒரு சின்ன சிலிர்ப்பு இருக்கு.''

''இசை, நடிப்பைத் தாண்டி உங்க விருப்பங்கள் என்ன?''

''ராத்திரி முழுக்க ஸ்டுடியோவில் இருந்துட்டு, ஊர் விழிக்கிற வேளையில் தூங்கப்போவேன். வீடு, குழந்தை, உறவுகள் என எல்லா பாரங் களையும் சுமந்துகொண்டு என்னைச் சுதந்திர மாக வேலை பார்க்க விடுகிற மனைவி பாத்திமா. குழந்தையைக் கொஞ்சக்கூட நேரம் இருக்காது. நான் வர்றப்ப குழந்தை தூங்கிட்டு இருப்பா. குழந்தை ஸ்கூலுக்குப் போகும்போது, நான் தூங்கிட்டு இருப்பேன். வீட்டுக்கு வந்த உடனே தூங்கிட்டு இருக்கிற குழந்தை மீரா கன்னத்தில் முத்தம் கொடுப்பேன். அந்த நேரத்திலும் விழிக்காமல் அவள் மலர்ந்து சிரிக்கிற நேரம்தான் அற்புதமானது!''