'தினந்தோறும்’ படம் வந்தபோது நாகராஜ்தான் டாக் ஆஃப் தி தமிழ் சினிமா. நடுவில் 'மின்னலே’, 'காக்க... காக்க’, படங்களில் காதல் வசனங்கள் எழுதியதைத் தவிர, அப்புறம் ஆளையே காணோம். கடுமையான போதை, காரசாரமான சர்ச்சைகள் என கடைசிப் பக்கச் செய்தியாக இருந்தவர், இப்போது தெளிவாக, அழகாக வந்து நிற்கிறார். இந்தத் தடவை கையில் 'மத்தாப்பூ’!

''நிறைய அவகாசம் எடுத்து, என்னையும் புதுப்பிச்சுக்கிட்டு செய்ற படம் 'மத்தாப்பூ’. சில ஸ்க்ரிப்ட்கள்தான் மனசைப் பிடிச்சு இறுக்கும். ஆழமா இறங்கலாம்னு பரபரக்கச் செய்யும். அப்படி உயிரையும் உணர்வையும் எரிபொருளாவெச்சு செதுக்குற படம் இது...'' - எப்போதும் படபடவெனப் பேசுபவர், இப்போது பக்குவமாகப் பேசுகிறார்!

''இவ்வளவு நாள் கழிச்சுப் படம் எடுக்கிறீங்க. அப்படி என்ன கதையில் ஸ்பெஷல்?''

''எதையோ தேடுறப்போ யதேச்சையா குடும்ப ஆல்பம் கண்ணுல படும் பாருங்க. 'அட’னு எல்லாத்தையும் மறந்துட்டு, நிம்மதியா அதைப் புரட்டிப் பார்ப்போம். அப்ப கலவையாக உணர்வுகள் கலந்துகட்டி ஆனந்தக் கண்ணீர் முட்டுமே... அதுதான் இந்தப் படம். மனுஷன் சம்பாதிக்கிறது, படிச்சுத் தெரிஞ்சுக்கிறது எல்லாமே சந்தோஷத்துக்குத்தான். காதலும்கூட சந்தோஷத்துக்குத்தான். சில மனிதர்களை அடுத்து எங்கே சந்திப்போம்? எப்போ சந்திப்போம்? இன்னும் நிறையப் பழக மாட்டோமானு ஏங்குறப்பதான் பிரிவு வந்து தடால்னு தாக்கும். அப்படி ஒரு சமயத்தில் காலாகாலத்துக்கும் நினைவில் தங்க வேண்டிய ஒரு உறவை

இவன் எப்படிப் பாதுகாத்தான்? அதன் அற்புதம் என்ன? அது சொல்லப்போகிற விஷயம் என்னன்னு பேசும் படம். காதலியோட காலடி மண் தொடங்கி கண்ணிமை ரோமம் வரைக்கும் சேர்த்துவெச்சு மருகினவங்கதானே நாமெல்லாம்? படம் பார்த்துட்டு நீங்க வீட்டுக்குப் போகும்போது, வழியில் பார்க்கிற குழந்தையைத் தூக்கிக் கொஞ்சத் தோணும். குறைந்தபட்சம் எதிர்ப்படுகிற எல்லாருக்கும் சின்ன புன்னகையாவது தருவீங்க. அப்படி அன்பையும் காதலையும் கனவா இழைச்சு இருக்கேன்.''

''புது முகங்களைத் தேர்ந்தெடுத்து இருக்கீங்க... செட் ஆயிட்டாங்களா?''

''அருமையா. உங்களையும் என்னையும் மாதிரி ஒரு மனுஷன்தான் இந்தக் கதைக்கு வேணும். கதையை நல்லா உள்வாங்கணும். அப்படி ஒருத்தரா ஜெயன் கிடைச்சார். 'கூத்துப் பட்டறை’க்கு அனுப்பி, கொஞ்சநஞ்ச கூச்சங்களையும் தவிர்க்க வெச்சோம். '18 வயசு’ல நடிச்ச காயத்ரி ஹீரோயின். மங்களகரமாகவும் சரி... மாடர்ன் டிரெஸ்லயும் சரி... அமர்க்களப்படுத்துறாங்க.''

''இன்னமும் காதல்தான் சினிமாவுக்குப் பொருத்தமா இருக்கா?''

''அருமையான காதல் நம்ம வாழ்க்கையில் வந்தால்தான் தெரியும். எது சந்தோஷம் தருமோ, அதுவே துக்கமும் தரும். உலகத்திலேயே அருமையான விஷயம், அன்பு. ஆனால், அந்த அன்பு தருகிற வலி ரொம்ப வேதனை. வாழ்க்கைக்கு வெளியே இருந்து எதையும் எடுத்துட்டு வருகிற ஆள் இல்லை நான். காதல் சரியாப் பொருந்தி வந்தால், அருமை. இல்லாட்டி துயரம். நான் அருமையாக் கொண்டுவந்து இருக்கேன்.''

''பளிச்சுனு புறப்பட்டு வந்து, நடுவுல காணாமப்போய், திரும்பி வந்து படம் பண்றது எப்படி இருக்கு?''

''சோதனை குறைவா வரும்போது, சோகம் வரும். அதுவே அதிகமா வந்தா, ஞானம் வரும். பணம் வந்தப்ப தெரிஞ்சுக்கிட்டதைவிட ஞானம் வந்தப்ப தெரிஞ்சுக்கிட்டதுதான் அதிகம். எனக்கு இந்த வாழ்க்கை படிப்பினைகளை மட்டும் இல்லை... பக்குவத்தையும் தந்திருக்கு. நிறைய பேருடைய பிரார்த்தனைகள்தான் 12 வருஷத்துக்குப் பிறகு, நான் எழுந்து வரக் காரணம்னு நினைக்கிறேன். நான் சந்தோஷமா இருக்கும்போது 'மத்தாப்பூ’ செய்யறேன். அதுவே எனக்கு மனநிறைவு.''