Published:Updated:

"சிம்புவுக்காக தனுஷைத் தூண்டலை!"

க.நாகப்பன்

"சிம்புவுக்காக தனுஷைத் தூண்டலை!"

க.நாகப்பன்

Published:Updated:
##~##

"டிரெய்லர் பார்த்தீங்களா..? ஒவ்வொரு வசனமும் உங்களைச் சிரிக்கவைக்கும்... சீண்டிப்பார்க் கும். அப்படி இன்ச்சுக்கு இன்ச் மசாலா புதைச்சுவெச்சிருக்கோம்ல!'' - உற்சாகமாகப் பேசத் தொடங்குகிறார் விஜய்சந்தர். 'வாலு’ படத்தின் அறிமுக இயக்குநர்.

''டிரெய்லர்ல தனுஷைச் சீண்டுற மாதிரி வசனம் இருக்கு. ஆனா, சிம்புவும் தனுஷ§ம்தான் ஃப்ரெண்ட்ஸ்னு ஊருக்கே சொல்லிட்டாங்களே... இன்னமும் ஏன் தனுஷை டீஸ் பண்றீங்க?''  

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''தனுஷை டீஸ் பண்ணணும்னோ அல்லது டாமினேட் பண்ணணும்னோ, அந்த டயலாக் வைக்கலை. தனுஷ§ம் சிம்புவும் ரொம்ப நல்ல நண்பர்கள். படத்துல ரெண்டு நிமிஷம் பேசிட்டா, எதிரிக்கும்கூட பிடிச்சுப்போகும்கிற அளவுக்குத் துறுதுறுனு இருப்பார் சிம்பு. அந்த கேரக்டருக்கு ஏத்த மாதிரிதான் 'உன்னைப் பார்த்தவுடனே பிடிக்கும்’னு ஹன்சிகா சொல்ற மாதிரி டயலாக் வெச்சோம். அதுக்கு முன்னாடி சில வசனங்கள் வரும். அதை எல்லாம் வெச்சுப் பார்க்கிறப்போ, டயலாக் சரியான டோன்லதான் இருக்கும்.''

"சிம்புவுக்காக தனுஷைத் தூண்டலை!"

'' 'வேட்டை மன்னன்’, 'போடா போடி’னு சிம்பு நடிக்கிற படங்கள் வெளிவராமத் தடுக்கி நிக்குது. 'வாலு’ எப்போ வரும்?''

''ரஜினி சார் டயலாக்தான். 'தளபதி’ படத்துல கீதாகிட்ட ரஜினி 'தேவராஜ் சாக மாட்டான்’னு சொல்வார். 'டாக்டர் சொன்னாங்களா?’னு கீதா கேட்பாங்க. 'தேவராஜே சொன்னான்’னு ரஜினி சொல்வார். அப்படி சிம்புவே, 'நம்ம படத்தைத்தான் முதல்ல முடிக்கிறோம்’னு சொல்லியிருக்காரு. எனக்கு அந்த நம்பிக்கை போதும்.''

"சிம்புவுக்காக தனுஷைத் தூண்டலை!"

''தமிழ்ல சந்தானம், தெலுங்குல பிரம்மானந்தம்... ரெண்டு பேரும் காமெடி ஆர்.டி.எக்ஸ். முதல் தடவையா ரெண்டு பேரையும் எப்படிப் பிடிச்சீங்க?''  

'' 'சிறுத்தை’ ஷூட்டிங்ல சந்தானம் சாரைச் சந்திச்சு கதை சொன்னேன். 'கண்டிப்பா நடிக்கிறேன்’னு சொன்னார். அப்புறம் பெரிய கேப் விழுந்தப்பவும் சரி, ஷூட்டிங் ஆரம்பிக்கத் தாமதமானப்பவும் சரி... 'விஜய் நான் உன்னை மறக்கலை. சேர்ந்து பண்ணுவோம். சிக்சர் அடிப்போம்’னு உற்சாகப்படுத்திக்கிட்டே இருப்பார். இந்தப் படத் துக்குப் பிரம்மானந்தம் சார் வேணும்னு அடம்பிடிச்சுக் கூட்டிட்டு வந்தேன். 'முதல் படத்துலயே என்னைவெச்சுப் படம் எடுக்குற... ஆயிரம் படங்கள்ல வேலை பார்த்த அனுபவம் உனக்குக் கிடைக்கும்’னு மிரட்டலா வாழ்த்தி னாரு. ஸ்க்ரிப்ட்ல இல்லாத காமெடி எல்லாம் சேர்த்து ஷூட்டிங் ஸ்பாட்டே கலகலக்குது. படத்துல நடிக்கிற எல்லாரும் காமெடி பண்ணியே ஆகணும்னு கட் அண்ட் ரைட்டா சொல்லி வேலை வாங்கிட்டு இருக்கேன். ரெண்டே கால் மணி நேரமும் கை தட்டிக்கிட்டே படம் பார்க்கலாம். அதுக்கு இந்த 'வாலு’ கேரன்ட்டி!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism